தேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்

நமது தளத்தை தேடுபொறிகளில் முன்னணியில் கொண்டுவர வேண்டுமெனில், அதற்காக சில வேலைகளை நாம் செய்ய வேண்டும். அது தொடர்பாக இதுவரை நான்கு பதிவுகள் எழுதியிருந்தேன். மேலும் சில விசயங்கள் ஒரு பதிவு எழுதும் அளவிற்கு இல்லாததால் அவற்றை ஒரே பதிவாக எழுதுகிறேன்.பேஜ்ரேங்க் (PageRank):தேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணிகளை பயன்படுத்துகிறது என்று பார்த்தோம் அல்லவா? கூகிள் தளமும் பல்வேறு காரணிகளை பயன்படுத்துகிறது. அவற்றில் ஒன்று பேஜ்ரேங் (PageRank or PR). இது பல்வேறு காரணிகளை கொண்டு நமது வலைப்பக்கத்தை மதிப்பிடுகிறது. கவனிக்க: உங்கள் வலைத்தளத்தை(Website) அல்ல, வலைப்பக்கத்தை(Webpage).

அலெக்ஸா ரேங்கில் நமது ஓட்டு மொத்த தளத்திற்கும் ஒரே மதிப்பு தான். ஆனால் கூகிள் பேஜ்ரேங்கில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு மதிப்பு. இந்த மதிப்பு ஒன்று(1/10) முதல் பத்து (10/10) வரை இருக்கும். ஒன்று என்பது குறைந்த மதிப்பு, பத்து என்பது அதிக மதிப்பு.

இது பற்றி கூகுள் கூறும்போது, "பேஜ்ரேங் பற்றி கவலைப்பட வேண்டாம். இது கூகிள் கையாளும் இருநூறுக்கும் மேற்பட்ட காரணிகளில் ஒன்றாகும். அதனால் மற்ற விசயங்களில் கவனம் செலுத்துங்கள்" என்கிறது. அதனால் நானும் இதனை பற்றி கவலைப்படவில்லை. பூஜ்ஜியத்தில் இருந்த ப்ளாக்கர் நண்பன் தளத்தின் பேஜ் ரேங் மதிப்பு ஒரு வருடத்திற்கு பின் தற்போது பத்துக்கு ஒன்று பெற்றிருக்கிறது.

உங்கள் தள மதிப்பை அறிய வேண்டுமெனில் http://www.prchecker.info/ என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்.

ப்ளஸ் ஒன் பட்டன் (Google +1 button):தற்போது கூகிள் சேர்த்திருக்கும் காரணிகளில் ஒன்று ப்ளஸ் ஒன். எத்தனை நபர்கள் +1 செய்திருக்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடுகிறது. அதிகமான நபர்கள் ப்ளஸ் செய்திருந்தால் அந்த பக்கத்திற்கு அதிக மதிப்பளிக்கிறது.

துள்ளல் விகிதம் (Bounce Rate):அலெக்ஸா உள்பட தேடுபொறிகள் அனைத்தும் நமது தளத்தை மதிப்பிட பயன்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று துள்ளல் விகிதம் எனப்படும் Bounce Rate. இது நமது வாசகர்கள் நமது தளத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை கணக்கிடுகிறது. நமது தளத்திற்கு வரும் வாசகர்கள், நமது தளத்தில் வேறு பக்கங்களை பார்க்காமல் வெளியேறினால், அது துள்ளல் (Bounce) ஆகும். அதனுடைய விகிதத்தை கணக்கிடுவது துள்ளல் விகிதம் (Bounce Rate) ஆகும்.

கணக்கிடும் முறை: 

                                       க்ளிக் செய்யாமல் சென்ற வருகையாளர்கள்
  துள்ளல் விகிதம் =    _____________________________________
                                                     மொத்த வருகையாளர்கள்

வாசகர்கள் அதிக நேரம் செலவிட்டால் விகிதம் குறைவாக இருக்கும். விகிதம் அதிகமாக இருந்தால் அதிகமான வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்தபின் உடனடியாக வெளியேறுகிறார்கள் என அர்த்தம் ஆகும். சராசரியான துள்ளல் விகிதம் 70 சதவிகிதத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தால் உங்கள் தளத்தை ஆய்வு செய்ய வேண்டும். எப்படி செய்வது? கீழே உள்ள டிஸ்கியை படிக்கவும்.

துள்ளல் விகிதத்தை குறைக்கும் வழிகள்:

1. வெளிஇணைப்புகளை (External Links) குறைவாக வைத்திருப்பது

2. பாப்-அப்(Pop-Up) விண்டோக்கள் இல்லாமல் இருப்பது.

3. பதிவுகளிலும், Sidebar-லும் உள்இணைப்புகள் கொடுப்பது

4. உங்கள் பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைப்பது. (இதற்கு  தேவையில்லாத gadgets-களை நீக்கவும்)

-----------------------------------------------------------------------------------------------------------

இதுவரை தேடுபொறி ரகசியங்களின் அடிப்படைகளை மட்டுமே பார்த்தோம். ஏனெனில், எனக்கு அடிப்படைகள் மட்டுமே தெரியும்! :) :) :)

 வேறு ஏதாவது நான் அறிந்துக் கொண்டால், இறைவன் நாடினால் பின்னால் பகிர்கிறேன்.

டிஸ்கி: 
முதல் தொடர்பதிவான நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி? தொடரை முடிக்கும்போதே, இனி தொடர்பதிவு எழுத வேண்டாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த தொடரை எழுதும் நிலை வந்தது. தற்போது நண்பர் ப்ரேம் அவர்களின் பரிந்துரைக்குப்பின் இன்னுமொரு தொடர் எழுதும் எண்ணம் உள்ளது. அது நமது வலைத்தளத்தை ஆய்வு செய்ய உதவும் கூகிள் அனாலிடிக்ஸ் பற்றியது. அந்த தொடர் எப்பொழுது எழுதுவேன்? என்று தெரியாது. அதுவரை ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவை படித்து முயற்சித்து பார்க்கவும்.

Post a Comment

25 Comments

 1. உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்கிறேன்

  ReplyDelete
 2. எல்லாம் வல்ல இறைவன் உங்களை எழுத வைப்பார்..

  நட்புடன்
  சம்பத்

  ReplyDelete
 3. ungal padivu arumai.............

  ReplyDelete
 4. பேஜ் ரெங் பற்றியும், பவ்ன்ஸ் ரேட் பற்றியும் பயனுள்ள விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ... பகிர்வுக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 5. Hi Basith - Nice information. One very very good news. The page rank for my tamil blog http://tamil.smileprem.com is 2

  excited... mostly due to the tweaking from your blogs... thank you... I have not yet added the google plus one widget... I will do it asap..

  Expecting a lot of related posts from you...

  Thank you :)

  ReplyDelete
 6. தேடு பொறி ரகசியங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை .

  சிறந்த கைபேசி உலாவிகள் (best mobile browsers)

  ReplyDelete
 7. நான் எழுத ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள பேஜ் ரேங்க் 2/10 காட்டுதே.
  பெருசா ஒன்னும் எழுதிட்டதா எனக்கே தோன்றல...இதான் கூகிள் கொடுமைங்கிறது !!!

  ReplyDelete
 8. //தாரிக் said... 1

  உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்ப்பார்கிறேன்//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 9. //Sambathkumar.B said... 2

  எல்லாம் வல்ல இறைவன் உங்களை எழுத வைப்பார்..

  நட்புடன்
  சம்பத்//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 10. //saravana said... 3

  ungal padivu arumai.............
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 11. //மாய உலகம் said... 4

  பேஜ் ரெங் பற்றியும், பவ்ன்ஸ் ரேட் பற்றியும் பயனுள்ள விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது ... பகிர்வுக்கு நன்றி நண்பா...//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 12. //Premkumar Masilamani said... 5

  Hi Basith - Nice information. One very very good news. The page rank for my tamil blog http://tamil.smileprem.com is 2

  excited... mostly due to the tweaking from your blogs... thank you... I have not yet added the google plus one widget... I will do it asap..

  Expecting a lot of related posts from you...

  Thank you :)
  //

  Happy to hear this friend!

  ReplyDelete
 13. //ஐத்ருஸ் said... 6

  Thank You....//

  You are welcome friend!

  ReplyDelete
 14. //இராஜராஜேஸ்வரி said... 7

  பகிர்வுக்கு நன்றி//

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 15. //ENTER THE WORLD said... 8

  தேடு பொறி ரகசியங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை .
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 16. //மழை said... 9

  நான் எழுத ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள பேஜ் ரேங்க் 2/10 காட்டுதே.
  பெருசா ஒன்னும் எழுதிட்டதா எனக்கே தோன்றல...இதான் கூகிள் கொடுமைங்கிறது !!!//

  வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 17. //Thananjeyan said... 10

  thanks, //

  welcome friend!

  ReplyDelete
 18. அப்துல் பசித் நன்றாக விளக்கி உள்ளீர்கள்.

  ஒவ்வொருமுறையும் இறைவன் நாடினால் எழுதுகிறேன் என்று கூறுகிறீர்கள். இதைப்போல நினைக்கும் உங்களிடம் எப்போதும் உடனே இருப்பார் எனவே இதைப்போல கூறுவது நீங்கள் அவரிடம் இருந்து விலகி இருப்பது போல இருக்கிறது :-)

  இறைவன் எப்போதும் நம்மிடம் தான் இருக்கிறார் நாம் தான் புரிந்து கொள்வதில்லை.

  ReplyDelete
 19. //கிரி said... 21

  அப்துல் பசித் நன்றாக விளக்கி உள்ளீர்கள்.
  //

  நன்றி நண்பரே!

  //ஒவ்வொருமுறையும் இறைவன் நாடினால் எழுதுகிறேன் என்று கூறுகிறீர்கள். இதைப்போல நினைக்கும் உங்களிடம் எப்போதும் உடனே இருப்பார் எனவே இதைப்போல கூறுவது நீங்கள் அவரிடம் இருந்து விலகி இருப்பது போல இருக்கிறது :-)

  இறைவன் எப்போதும் நம்மிடம் தான் இருக்கிறார் நாம் தான் புரிந்து கொள்வதில்லை.//

  அப்படியில்லை நண்பரே! எந்தவொரு காரியமும் இறைவனின் நாட்டமின்றி நடக்காது என்பது எனது நம்பிக்கை. நாளை என்ன நடக்கும் என்று தெரியாததால், "இறைவன் நாடினால்" என்று சொல்கிறேன்.

  :) :) :)

  ReplyDelete
 20. அருமையாகவும் ,உபயோகமாகவும் விளக்கி உள்ளீர்கள் நண்பரே .

  தங்களது தொடரை ஆவலுடன் எதிர் பார்கிறேன் நண்பரே
  பகிர்வுக்கு நன்றி .

  thamil manam votted

  ReplyDelete
 21. payanulla thagaval nanbare nanri......

  ReplyDelete
 22. உங்களுடைய பதிவு அருமை.

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 23. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே! ஆனால் என் தளம் இன்னும் 0/10லே தான் இருக்கின்றது போலும். அதற்குக் காரணம் யாரும் g+1 அழுத்தாமலே சென்றிருப்பதாலே இருக்குமோ??

  ReplyDelete