கூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை

ஒரு வழியாக கூகிள் ப்ளஸ் விளையாட்டை விளையாடி பார்த்துட்டேன். Angry Birds, Crime City விளையாட்டுகளை தவிர வேறு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய விளையாட்டுகளை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக கார்ட்டூன் நெட்வொர்க் விளையாட்டுக்கள் வந்தால் நன்றாக இருக்கும்.எப்படி விளையாடுவது?

1. கூகிள் ப்ளஸ் முகப்பு பக்கத்தில் மேலே Home, Photos, Profile, Circles என்ற Tab-களுக்கு பக்கத்தில் Games என்ற Tab இருக்கும். அதனை க்ளிக் செய்தால், கூகிள் ப்ளஸ் கேம்ஸ் பக்கத்திற்கு செல்லலாம்.2.அங்கு இடது பக்கத்தில் சில தேர்வுகள் இருக்கும்.1. Featured Games - முக்கிய விளையாட்டுக்கள்

2. All Games -  அனைத்து விளையாட்டுகள்

3. Games Notifications -  நண்பர்கள் நமக்கு அனுப்பியுள்ள விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள்

4. Recently Played - சமீபத்தில் நீங்கள் விளையாடிய விளையாட்டுக்கள்

உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை Play பட்டனை க்ளிக் செய்து விளையாடத் தொடங்கலாம். அப்படி க்ளிக் செய்யும் போது சில தகவல்களை சொல்லும். அதாவது அந்த விளையாட்டு உங்கள் கணக்கை அணுக அனுமதி கேட்பதாக சொல்லும். நீங்கள் Allow Access என்பதை க்ளிக் செய்தால் தான் அந்த விளையாட்டை விளையாட முடியும்.Allow Access கொடுப்பதன் மூலம், அந்த விளையாட்டு நமது பெயர், நண்பர்கள், மின்னஞ்சல் முகவரி போன்ற சுயவிவரங்களை அணுக முடியும். அதனை அவர்கள் அந்த விளையாட்டில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

விளையாடிய பின்பு அந்த விளையாட்டு இனி நமக்கு வேண்டாம், இனி அந்த விளையாட்டு நமது சுயவிவரங்களை அணுக வேண்டாம் என நினைத்தால் அதற்கும் பேஸ்புக் போன்றே வழி இருக்கிறது. இந்த தகவலை தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு. மற்றபடி விளையாட்டை விமர்சனம் செய்வதற்காக அல்ல.

வேண்டாத விளையாட்டுகளை நீக்க:

1. கூகிள் ப்ளஸ் தளத்தில் மேலே வலது ஓரம், உங்கள் ப்ரொஃபைல் படம் இருக்கும். அதனை க்ளிக் செய்து, அங்கு Account Settings என்பதை க்ளிக் செய்யவும்.2. அங்கு Account Overview என்ற இடத்தில், Security என்பதற்கு கீழே Authorising applications & sites என்று இருக்கும். அதற்கு பக்கத்தில் Edit என்பதை க்ளிக் செய்யவும்.

3. பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் இதுவரை விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியல் இருக்கும்.4.எந்த விளையாட்டுக்களை நீக்க வேண்டுமோ, அதன் பக்கத்தில் Revoke Acces என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்! இனி அந்த விளையாட்டு உங்கள் சுயவிவரங்களை அணுக முடியாது.

கவனிக்க: அதிகமான  விளையாட்டுகளில், சில வசதிகளை பெற பணம் கட்டி வாங்க வேண்டிவரும். ஆனால், இதற்காக உங்கள் பணத்தை வீண் செலவு செய்யாமல் இருப்பதே நல்லது.


இன்றைய இணையம்:1. கூகிள் ப்ளஸ்ஸில் நீங்கள் பப்ளிக்காக பகிரும் செய்திகள் இனி கூகிள் தேடுபோறியிலும் தெரியும்.2. பட்டன் இல்லாத தொடுஉணர்வு மூலம் செயல்படும் மவுஸை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.3. கடந்த பிப்ரவரி மாதம் Beluga என்ற நிறுவனத்தை வாங்கிய ஃபேஸ்புக் நிறுவனம், ஆப்பிள் ஐபோன், ஆன்ராய்ட் மொபைல்களுக்கான குழு அரட்டை (Group Chat) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


19 கருத்துக்கள்:

 1. அஸ்ஸலாமு அலைக்கு சகோ, வழக்கம்போல கலக்கிடீங்க.Thank You...

  ReplyDelete
 2. ஆம் நண்பா...எவ்வளவோ மன உளைச்சல்களுக்கிடையில் இது போன்ற கேம்ஸ் மனதை லேசாக்கும்... கூகுல் பிளசில் உள்ள கேம்ஸைப்பற்றி பகிர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
 3. நல்ல தகவல் நண்பரே

  சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

  தமிழ் மணம் மூணு

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு


  சுதந்திரதின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்லதொரு தகவல் நன்றி தோழா!!!!

  ReplyDelete
 6. நல்ல பதிவு.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 7. பயனுள்ள பதிவுகள்/எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள் நண்பரே!பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

  ReplyDelete
 8. //ஐத்ருஸ் said... 1

  அஸ்ஸலாமு அலைக்கு சகோ, வழக்கம்போல கலக்கிடீங்க.Thank You...//

  வ அலைக்கும் ஸலாம். நன்றி சகோ.!

  ReplyDelete
 9. //Premkumar Masilamani said... 2

  Thanks for the information Basith :)
  //

  You are welcome Friend!

  ReplyDelete
 10. //மாய உலகம் said... 3

  ஆம் நண்பா...எவ்வளவோ மன உளைச்சல்களுக்கிடையில் இது போன்ற கேம்ஸ் மனதை லேசாக்கும்... கூகுல் பிளசில் உள்ள கேம்ஸைப்பற்றி பகிர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா...//

  //all vote//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 11. //M.R said... 4

  நல்ல தகவல் நண்பரே

  சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

  தமிழ் மணம் மூணு//

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. //ஆமினா said... 6

  நல்ல பகிர்வு


  சுதந்திரதின வாழ்த்துக்கள்//

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 13. //arul said... 7

  good info//

  Thank You Friend!

  ReplyDelete
 14. //சரவணன்.D said... 8

  நல்லதொரு தகவல் நன்றி தோழா!!!!//

  நீண்ட நாட்களுக்கு பின் தங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி தோழா!

  ReplyDelete
 15. //Priya said... 9

  நல்ல பதிவு.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com
  //

  நன்றி சகோ.!

  ReplyDelete
 16. //ஸ்ரீதர் said... 10

  பயனுள்ள பதிவுகள்/எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள் நண்பரே!பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!//

  அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே!

  ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers