
அதைப்பற்றி படிப்பதற்கு முன்பு, பின்னிணைப்புகள் (BackLinks) பற்றிய பதிவில் ப்ளாக்கர் நண்பனுக்கு கூகிள் பின்னிணைப்புகள் எதுவும் காட்டவில்லை என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதை பற்றி கூகிளிடம் கேட்டதற்கு “நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு, ஸ்ட்ரிக்டு, ஸ்ட்ரிக்டு” என்று சொன்னது. அதாவது தேடுபொறியில் சில BackLinks மட்டுமே காட்டுமாம். முழுவதுமாக பார்க்க வேண்டுமெனில் கூகிள் வெப்மாஸ்டர் தளத்திற்கு சென்று பார்க்க சொன்னது.
சிறு விளக்கம்:
Internal Links – நம்முடைய தளத்திற்குள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கொடுக்கப்படும் இணைப்புகள். (இதைப் பற்றி தான் தற்போது பார்க்க இருக்கிறோம்)
Inbound Links or BackLinks – மற்ற தளங்களில் இருந்து நமது தளத்திற்கு கொடுக்கப்படும் இணைப்புகள்.
External Links or Outbound Links – நம்முடைய தளத்திலிருந்து மற்ற தளங்களுக்கு கொடுக்கப்படும் இணைப்புகள்.
Internal Links:
நம்முடைய தளத்தில் உள்இணைப்புகள் கொடுப்பதன் மூலம் சில நன்மைகள் இருக்கின்றன. வாசகர்களை நமது தளத்தில் அதிக நேரம் செலவிடவும், பக்க பார்வைகளை (Page Views) அதிகப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் பின்னிணைப்புகள் அதிகரிப்பதால் தேடுபொறிகளில் அதிக மதிப்பு பெற முடியும்.
நம்முடைய தளத்தில் உள்இணைப்புகள் கொடுப்பதன் மூலம் சில நன்மைகள் இருக்கின்றன. வாசகர்களை நமது தளத்தில் அதிக நேரம் செலவிடவும், பக்க பார்வைகளை (Page Views) அதிகப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் பின்னிணைப்புகள் அதிகரிப்பதால் தேடுபொறிகளில் அதிக மதிப்பு பெற முடியும்.
உள்இணைப்புகளை அதிகப்படுத்த சில வழிகள்:
1. தள வரைபடம் (SiteMap) வைப்பது
இதை பற்றி பதிவுகளை பட்டியலிடுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.
2. தொடர்புடைய பதிவுகள் சாளரம் (Related Posts Widget) வைப்பது
இதைப் பற்றி பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி? என்ற பதிவில் சொல்லியிருந்தேன். முன்பு நன்றாக வேலை செய்தது, ஆனால் தற்போது அதில் ஏதோ பிரச்சனை உள்ளது. இறைவன் நாடினால் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
3. பிரபல பதிவுகள் சாளரம் (Popular Posts Gadgets) வைப்பது
இதனை வைக்க Blogger DashBoard => Layout பகுதிக்கு சென்று Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Popular Posts Gadget-ஐ தேர்வு செய்து வைக்கவும்.
4. தொடர் பதிவுகள் எழுதுவது -
இதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு இணைப்புகள் கொடுக்கலாம். உதாரணம், நமது பிளாக்கை பிரபலப்படுத்துவது எப்படி?, தேடுபொறி ரகசியங்கள் போன்ற தொடர் பதிவுகள். ஆனால் அதிகமாக தொடர் பதிவுகள் எழுதினால் வாசகர்களுக்கு எரிச்சல் ஏற்படலாம்.
5. பதிவுகளில் இணைப்புகள் கொடுப்பது
இந்த பதிவில் கொடுத்திருப்பது போல நீங்கள் எழுதும் பதிவுகளில் உள்ள வார்த்தைகள் தொடர்பாக வேறு பதிவுகள் இருந்தால் அந்த பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்.
கவனிக்க: ஒரு பக்கத்தில் உள்இணைப்புகள் (Internal Links) மற்றும் வெளிஇணைப்புகள் (External Links) அனைத்தையும் சேர்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்குமாறு கூகிள் சொல்கிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட எண் என்பது நூறு என்கின்றனர். அப்படி அதிகமானால் தேடுபொறிகள் அந்த பக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படலாம்.
நன்றி: சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளை தந்த கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு தளத்திற்கு நன்றி!
32 Comments
அர்மையான தகவல்கள்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஇது என்ன தெரியுமா?
தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
nice explanation
ReplyDeleteலிங்க்ஸை பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. தகவலுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteஅருமையான தகவல் தகவலுக்கு நன்றி,
ReplyDeleteசுட்டிகள் புதிய விண்டோவில் திறப்பதற்காக தாங்கள் கொடுத்த வழிமுறையை பின்பற்றினேன், பின் வேறு ஒரு முறை கிடைத்தது, அதாவது External Links மட்டும் வேறு டாபில் திறக்குமாறும் நமது Internal links அதே டாபில் திறக்குமாறும் உள்ள முறையை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன், அதனை வந்து பார்க்கவும்...
http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_09.html
அருமையான தகவல், சுட்டிகள் புதிய விண்டோவில்/டாபில் திறப்பது குறித்து ஒரு புதிய முறை பற்றி எழுதியிருக்கிறேன், வந்து பாருங்கள், http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_09.html
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteInternal Links பற்றிய விளக்கம் அருமை. தேடிப் படித்து, புரியும்படி பொறுமையாக எழுதியதற்கு நன்றி சகோ. (ஜஸாகல்லாஹ் ஹைரா!)
மற்ற Links பற்றியும் விரைவில் எழுதுங்கள்.
//ஒரு பக்கத்தில் உள்இணைப்புகள் (Internal Links) மற்றும் வெளிஇணைப்புகள் (External Links) அனைத்தையும் சேர்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்குமாறு கூகிள் சொல்கிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட எண் என்பது நூறு என்கின்றனர். //
80, 100 என்பது அதிகமல்லவா?! 'குறிப்பிட்ட எண்ணிக்கை' என சொல்லும் கூகிள் அதன் அதிகபட்ச அளவை சொல்லவில்லையா சகோ? எப்ப பார்த்தாலும் கேள்வியாக கேட்கிறேன் என டென்ஷன் ஆகிடாதீங்க :)
அப்புறம் சைட் பாரில் நான் வைத்துள்ள (அனிமேடட்) Related Posts Widget 2 நாட்களாக கறுப்பு கலரில் மாறிவிட்டது. அதனால் அதிலுள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. என் தளத்தில் பாருங்கள்.
http://payanikkumpaathai.blogspot.com/
இந்த பிரச்சனை எதனால் இருக்கும்? எப்படி சரி செய்யலாம் சகோ? என் ஐடிக்கு முடிந்தால் மெயில் பண்ணுங்களேன்.
ஸலாம் சகோ அப்துல் பாஸித்,
ReplyDeleteஆஹா... எங்கள் கேள்விக்கான பதிவா சகோ..?
மிக்க நன்றி சகோ..!
ஆக, உங்களின் இந்த பதிவில் 7 Internal Links கொடுத்து, ஒரு External Link or Outbound Link கொடுத்து இருக்கிறீர்கள். ஆக மொத்தம் எட்டு..!
//அதாவது தேடுபொறியில் சில BackLinks மட்டுமே காட்டுமாம்.//---இதில் "சில" என்றால் எத்தனை..?
//மற்றவர்கள் குறிப்பிட்ட எண் என்பது நூறு என்கின்றனர்.//---நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உங்கள் கருத்தைத்தான் கேட்டோம்..!
நேரடி விளக்கம் வேண்டும் யுவர் ஆனர்..!
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteநண்பரே சாதாரண தளத்துக்கும் கூகிள் ரேங்கில் அதிக மதிப்புடைய தளத்தில் இருந்தான BackLinks இடையில் வித்தியாசங்ககள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். இது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்..
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteஅருமையான பயனுள்ள தகவலைத் தொடர்ந்தும் தந்துகொண்டிருக்கும்
ReplyDeleteதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...
good information Basith... thanks.. expecting detailed posts on internal & external links :)
ReplyDelete//"என் ராஜபாட்டை"- ராஜா said... 1
ReplyDeleteஅர்மையான தகவல்கள்
//
நன்றி நண்பா!
//# கவிதை வீதி # சௌந்தர் said... 3
ReplyDeleteதெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்...
வாழ்த்துக்கள்...//
நன்றி நண்பா!
//arul said... 4
ReplyDeletenice explanation//
Thank You Friend!
//மாய உலகம் said... 5
ReplyDeleteலிங்க்ஸை பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. தகவலுக்கு நன்றி நண்பரே!
//
நன்றி நண்பரே!
//Heart Rider said... 6
ReplyDeleteஅருமையான தகவல் தகவலுக்கு நன்றி,
சுட்டிகள் புதிய விண்டோவில் திறப்பதற்காக தாங்கள் கொடுத்த வழிமுறையை பின்பற்றினேன், பின் வேறு ஒரு முறை கிடைத்தது, அதாவது External Links மட்டும் வேறு டாபில் திறக்குமாறும் நமது Internal links அதே டாபில் திறக்குமாறும் உள்ள முறையை பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன், அதனை வந்து பார்க்கவும்...
http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_09.html
//
பார்த்தேன் நண்பா! பயனுள்ள தகவல்.
//அஸ்மா said... 8
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
Internal Links பற்றிய விளக்கம் அருமை. தேடிப் படித்து, புரியும்படி பொறுமையாக எழுதியதற்கு நன்றி சகோ. (ஜஸாகல்லாஹ் ஹைரா!)
மற்ற Links பற்றியும் விரைவில் எழுதுங்கள்.//
வ அலைக்கும் ஸலாம் சகோதரி! தங்கள் வாழ்த்துக்கு நன்றி! backlinks பற்றி எழுதிவிட்டேன். external links-பற்றி ஒரு பதிவாக எழுத முடியாது. ஆனால் இறைவன் நாடினால் பிறகு வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.
// 80, 100 என்பது அதிகமல்லவா?! 'குறிப்பிட்ட எண்ணிக்கை' என சொல்லும் கூகிள் அதன் அதிகபட்ச அளவை சொல்லவில்லையா சகோ? //
இல்லை சகோ. கூகிள் "Keep the links on a given page to a reasonable number." என்று தான் சொல்கிறது. கூகிளின் seo பிரிவில் பணிபுரியும் Matt Cutts என்பவர் நூறுக்குள் இருக்குமாறு சொல்கிறார். Links என்பது நமது பக்கத்தில் header, sidebar, footer, post இவற்றில் உள்ள அனைஹ்தும் அடங்கும். அவையெல்லாம் சேர்த்து நூறுக்குள் இருக்கவேண்டும்.
//எப்ப பார்த்தாலும் கேள்வியாக கேட்கிறேன் என டென்ஷன் ஆகிடாதீங்க :)//
அப்படியெல்லாம் இல்லை சகோதரி! :)
//அப்புறம் சைட் பாரில் நான் வைத்துள்ள (அனிமேடட்) Related Posts Widget 2 நாட்களாக கறுப்பு கலரில் மாறிவிட்டது. அதனால் அதிலுள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. என் தளத்தில் பாருங்கள்.
http://payanikkumpaathai.blogspot.com/
இந்த பிரச்சனை எதனால் இருக்கும்? எப்படி சரி செய்யலாம் சகோ? என் ஐடிக்கு முடிந்தால் மெயில் பண்ணுங்களேன்.
//
மெயில் அனுப்புகிறேன் சகோதரி!
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 9
ReplyDeleteஸலாம் சகோ அப்துல் பாஸித்,
ஆஹா... எங்கள் கேள்விக்கான பதிவா சகோ..?
மிக்க நன்றி சகோ..!//
வ அலைக்கும் ஸலாம் சகோ.!
// ஆக, உங்களின் இந்த பதிவில் 7 Internal Links கொடுத்து, ஒரு External Link or Outbound Link கொடுத்து இருக்கிறீர்கள். ஆக மொத்தம் எட்டு..!//
என்னவொரு கண்டுபிடிப்பு?
////அதாவது தேடுபொறியில் சில BackLinks மட்டுமே காட்டுமாம்.//---இதில் "சில" என்றால் எத்தனை..?//
அது தெரியவில்லை என்று தான் சில என்று போட்டிருக்கேன். backlinks விசயத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. அது என்னவென்று எனக்கு தெரியாது.
// //மற்றவர்கள் குறிப்பிட்ட எண் என்பது நூறு என்கின்றனர்.//---நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உங்கள் கருத்தைத்தான் கேட்டோம்..!
நேரடி விளக்கம் வேண்டும் யுவர் ஆனர்..!//
//
அதனை நானும் வழிமொழிகிறேன்!
//M.R said... 10
ReplyDeleteபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே
//
நன்றி நண்பரே!
//tharsigan said... 11
ReplyDeleteநண்பரே சாதாரண தளத்துக்கும் கூகிள் ரேங்கில் அதிக மதிப்புடைய தளத்தில் இருந்தான BackLinks இடையில் வித்தியாசங்ககள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். இது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்..//
இத்தொடரில் கூகிள் page rank பற்றி சொல்ல இருக்கிறேன் நண்பரே! அப்பகுதியில் இது பற்றி வரும்.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
//ஆமினா said... 12
ReplyDeleteநல்ல பகிர்வு
//
நன்றி சகோதரி!
//அம்பாளடியாள் said... 13
ReplyDeleteஅருமையான பயனுள்ள தகவலைத் தொடர்ந்தும் தந்துகொண்டிருக்கும்
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...//
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!
//Premkumar Masilamani said... 14
ReplyDeletegood information Basith... thanks.. expecting detailed posts on internal & external links :)//
?????
i think this article is about Internal links. :) :) :)
There is noo need to explain briefly about External links. i will write little bit about that in next part of this series.
You are always welcome friend!
//அதனை நானும் வழிமொழிகிறேன்!//--அதுசரி... அவங்களுக்கே தெரியலைன்னா நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.
ReplyDeleteசகோ.அஸ்மா said...//எப்ப பார்த்தாலும் கேள்வியாக கேட்கிறேன் என டென்ஷன் ஆகிடாதீங்க :)//
பிளாக்கர் நண்பன் பதில்:- //அப்படியெல்லாம் இல்லை சகோதரி! :)//
நன்றி சகோ.அப்துல் பாஸித்.
ஆனால்... //தங்கள் வருகைக்கும் தொல்லைக்கும் நோ நன்றி//---எனக்கான உங்கள் பதில் கமெண்ட்டில் இது மிஸ் ஆகிருச்சோ..!? :) :)
(நாம இதெல்லாம் கண்டுக்கவா போறோம்... ஹி.. ஹி.. தொல்லைஎடுப்பை தொடருவோம்ல சகோ..!)
//Links என்பது நமது பக்கத்தில் header, sidebar, footer, post இவற்றில் உள்ள அனைஹ்தும் அடங்கும். அவையெல்லாம் சேர்த்து நூறுக்குள் இருக்கவேண்டும்.//---வாவ்..! மற்றொரு புதிய சற்று தெளிவான தகவல்..! பகிர்வுக்கு நன்றி சகோ.
இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போ என் கேள்வி என்னன்னா...
சைட் பார் ப்ளாக்கர் விட்கெட்டில் "Blog archive" மூலம் நாம் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் (பலர் நூறுக்கு மேல் பதிவுகள் எழுதியுள்ளனர்... சிலர் ஆயிரம் பதிவை நெருங்குகின்றனர்...) Internal Links உள்ளதே சகோ..!?!?!?!?!!?
சிலருக்கு 'குறிச்சொற்கள்' மூலமான Internal Links கூட நூறை தாண்டுமே...!?!?!?!!?!? இதற்கு தங்கள் கருத்து...?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteதங்களின் விளக்கங்களுக்கு நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைரா!)
//அப்படியெல்லாம் இல்லை சகோதரி! :)//
மீண்டும் நன்றிகள் :):)
//Links என்பது நமது பக்கத்தில் header, sidebar, footer, post இவற்றில் உள்ள அனைஹ்தும் அடங்கும். அவையெல்லாம் சேர்த்து நூறுக்குள் இருக்கவேண்டும்.//
ஓ...அப்படியா? நான் வெறும் Post ல் உள்ளவை மட்டும்தான் என நினைத்தேன். அப்படீன்னா..
//சைட் பார் ப்ளாக்கர் விட்கெட்டில் "Blog archive" மூலம் நாம் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் (பலர் நூறுக்கு மேல் பதிவுகள் எழுதியுள்ளனர்... சிலர் ஆயிரம் பதிவை நெருங்குகின்றனர்...) Internal Links உள்ளதே சகோ..!?!?!?!?!!?
சிலருக்கு 'குறிச்சொற்கள்' மூலமான Internal Links கூட நூறை தாண்டுமே...!?!?!?!!?!? இதற்கு தங்கள் கருத்து...?// (நன்றி சகோ முஹம்மத் ஆஷிக்):)
சகோ ஆஷிக்கின் கேள்விகள் எனக்கும் தோன்றுகிறது. அத்துடன் இன்னொரு கேள்வியும் சேர்த்து :) கமெண்ட் பாக்ஸில் கூட Links கொடுக்கப்படுகிறதே, அதுவும் சேர்க்கப்படுமா? முடியும்போது பதில் சொன்னா போதும் சகோ.
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 27
ReplyDelete.........இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போ என் கேள்வி என்னன்னா...
சைட் பார் ப்ளாக்கர் விட்கெட்டில் "Blog archive" மூலம் நாம் எழுதிய அனைத்து பதிவுகளுக்கும் (பலர் நூறுக்கு மேல் பதிவுகள் எழுதியுள்ளனர்... சிலர் ஆயிரம் பதிவை நெருங்குகின்றனர்...) Internal Links உள்ளதே சகோ..!?!?!?!?!!?
சிலருக்கு 'குறிச்சொற்கள்' மூலமான Internal Links கூட நூறை தாண்டுமே...!?!?!?!!?!? இதற்கு தங்கள் கருத்து...?//
உங்களை போல அறிவாளி (வஞ்சகப்புகழ்ச்சி அல்ல) ஒருவர், MATT CUTTS அவர்களின் தளத்தில் இதே கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. பதில் வந்தால் சொல்கிறேன்.
:) :) :)
@அஸ்மா
ReplyDelete//ஒருவர், MATT CUTTS அவர்களின் தளத்தில் இதே கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. பதில் வந்தால் சொல்கிறேன்.
:) :) :)//
பிளாக்கருக்கு அவசியம் தேவையான தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி..!!
ReplyDeleteI have appriciate your informatios
ReplyDelete