ஃபேஸ்புக்கில் குறையா? பிடிங்க 500 டாலர்!

பொதுவாக ஒரு இணைய நிறுவனம் பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முன், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்களைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, பிறகு தான் வெளியிடும். ஆனாலும் அதனையும் மீறி சில பாதுகாப்பு குறைப்பாடுகள் (Security Bugs) இருக்கத் தான் செய்யும். அதனை பயனாளர்கள் பயன்படுத்தும் போது காணப்படலாம்.


அப்படி வரும் பாதுகாப்பு குறைபாடுகளை பயனாளர்கள் அந்த நிறுவனத்திற்கு தெரிவிக்க ஊக்கப்படுத்தும் வகையில் வெகுமதிகள் அளிப்பதுண்டு. இதனை கூகிள், மைக்ரோசாஃப்ட், மொஜில்லா (Mozilla) போன்று பல தளங்கள் செய்து வருகின்றன. அதன் வரிசையில் தற்போது ஃபேஸ்புக்கும் சேர்ந்துள்ளது.

பேஸ்புக்கில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை நீங்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு தெரிவித்தால் அதற்கு பரிசாக உங்களுக்கு ஐநூறு (500) டாலர் பரிசு கிடைக்கும்.

அதற்கான தகுதிகள்:

** ஏதாவது குறை ஒன்றை நீங்கள் கண்டுபிடித்தால் முதலில் பேஸ்புக் நிறுவனத்திடம் தான் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பதில் அளிக்கும் வரையில் பொதுவில் அதனை தெரிவிக்கக் கூடாது.

** அதிகமானோர்  ஒரே குறைபாடுகளை தெரிவித்தால், முதலில் தெரிவிப்பவருக்கு தான் வெகுமதி.

** குறைபாடுகள் பாதுகாப்பு தொடர்பாக இருக்க வேண்டும்.

நீங்கள்  தெரிவிக்கும் குறைபாடு பெரியதாக இருந்தால், அதற்கேற்றார் போல் வெகுமதியும் அதிகமாகும்.

கவனிக்க:

பேஸ்புக்கில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற மூன்றாம் தரப்பினரின் பயன்பாட்டில் (Third Party's Application) உள்ள குறைப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.அது போல Spamதொடர்பான குறைபாடுகளையும் எடுத்துக் கொள்ளாது.

இது பற்றி மேலும் படிக்க: https://www.facebook.com/whitehat/bounty/

கூகிள் குறைபாடுகள் பற்றி படிக்க: http://googleonlinesecurity.blogspot.com/2010/11/rewarding-web-application-security.html

Mozilla குறைபாடுகள் பற்றி படிக்க: http://www.mozilla.org/security/bug-bounty.html


Post a Comment

21 Comments

  1. thanks for the information
    m.arul
    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

    500 டாலரா???????? இன்னைக்கு புல்லா தூக்கமே வராதே..... எதாவது கண்டுபிடிச்சாகணுமே....... :))

    நல்ல பகிர்வு.. நோன்பு மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. நல்லதொரு தகவல் நண்பரே .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. //arul said... 1

    thanks for the information
    m.arul
    www.astrologicalscience.blogspot.com//

    Thank You Friend!

    ReplyDelete
  5. //# கவிதை வீதி # சௌந்தர் said... 2

    நல்ல தகவல்.
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  6. //ஆமினா said... 3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....//

    வ அலைக்கும் ஸலாம் சகோதரி!

    // 500 டாலரா???????? இன்னைக்கு புல்லா தூக்கமே வராதே..... எதாவது கண்டுபிடிச்சாகணுமே....... :))
    //

    :) :) :)


    // நல்ல பகிர்வு.. நோன்பு மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள்!!!
    //

    தங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  7. //M.R said... 4

    நல்லதொரு தகவல் நண்பரே .பகிர்வுக்கு நன்றி//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. மிக்க நன்றி சகோதரம்.....
    நாங்க சொல்லுறதை பக்கத்து வீடக்டுக்காரனே கேட்க மாட்டான் மூஞ்சிப் புத்தகக்காரனா கேட்கப் போறன்...

    ReplyDelete
  9. //♔ம.தி.சுதா♔ said... 9

    மிக்க நன்றி சகோதரம்.....
    நாங்க சொல்லுறதை பக்கத்து வீடக்டுக்காரனே கேட்க மாட்டான் மூஞ்சிப் புத்தகக்காரனா கேட்கப் போறன்...//

    :) :) :)

    குறைபாடுகளை கண்டு பிடிச்சா கண்டிப்பா கேட்பாங்க சகோ.!

    ReplyDelete
  10. ரமலான் நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  11. ஆஹா 500 டாலர் 500 டாலர் சொக்கா... எனக்கில்லையா..ம்ம்ம் நம்மலே இப்பதான் கத்துகுட்டி... நாம என்னைக்கு பேஸ்புக்க பத்தி தெரிஞ்சி.. அதுல பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபுடிச்சி.. அதுல மொத எடத்துல வந்து....எனக்கில்ல எனகில்ல சொக்கா... ஹி ஹி ஹி

    நல்ல பகிர்வு நன்றி நண்பரே

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    குறை சொன்னாலே பணம் தருபவர்கள்...
    "குறை ஒன்றும் இல்லை; எல்லாமே நிறை" என்று நான் சொன்னால்..?
    மகிழ்ச்சியில் 501 டாலர் தருவாங்களா..?

    ReplyDelete
  13. நல்ல பதிவு
    ரமலான் முபாரக்

    ReplyDelete
  14. நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete
  15. //விக்கியுலகம் said... 11

    நல்ல தகவல்//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  16. //மாய உலகம் said... 12

    ரமலான் நல்வாழ்த்துக்கள் நண்பரே//

    நன்றி நண்பரே!

    //ஆஹா 500 டாலர் 500 டாலர் சொக்கா... எனக்கில்லையா..ம்ம்ம் நம்மலே இப்பதான் கத்துகுட்டி... நாம என்னைக்கு பேஸ்புக்க பத்தி தெரிஞ்சி.. அதுல பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபுடிச்சி.. அதுல மொத எடத்துல வந்து....எனக்கில்ல எனகில்ல சொக்கா... ஹி ஹி ஹி

    நல்ல பகிர்வு நன்றி நண்பரே
    //

    :) :) :)

    ReplyDelete
  17. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 14

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    குறை சொன்னாலே பணம் தருபவர்கள்...
    "குறை ஒன்றும் இல்லை; எல்லாமே நிறை" என்று நான் சொன்னால்..?
    மகிழ்ச்சியில் 501 டாலர் தருவாங்களா..?//

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

    சொல்லித் தான் பாருங்களேன்.

    :) :) :)

    ReplyDelete
  18. //தாரிக் said... 15

    நல்ல பதிவு
    ரமலான் முபாரக்
    //

    தங்களுக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //ஷீ-நிசி said... 16

    நல்ல தகவல் நண்பரே//

    நன்றி நண்பரே!

    ReplyDelete