ஒபாமா இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி

வதந்தி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவின் தேசிய தினமான இன்று (July 4th) அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.

செய்தி: புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்தின் அரசியல் பிரிவுக்கான ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். அவர்கள் இன்று காலை மேற்சொன்ன செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்கள். ஃபாக்ஸ் நியூசின் ட்விட்டரில் 33,782 ஃபால்லோவர்ஸ்(Followers) இருக்கிறார்கள். அவர்களில் அதிகமானோர் இதனை உண்மை என நம்பி ReTweet செய்துள்ளார்கள்.

தங்கள் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதையும், அதிபர் ஒபாமா நலமாக தான் இருக்கின்றார், வதந்தியை நம்பவேண்டாம் எனவும் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் தனது தளத்தில் அறிவித்துள்ளது.

டிஸ்கி: நான்கு நாட்களாக கூகிள் ப்ளஸ் தொடர்பாக இணையத்தில் உலாவியதால் பதிவு எழுத முடியவில்லை. இந்த செய்தியை படித்தவுடன் "நல்ல ஹிட் ஆகும்" (ஹிஹிஹி) என எண்ணி பதிவிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

டிஸ்கி  2:  இந்த தலைப்பை போட்டிருக்கக் கூடாது என்ற நண்பர்களின் கருத்தை நான் ஏற்கிறேன். இனி இதனை தவிர்த்துக் கொள்கிறேன். இந்த செய்தியை நான் வேறு ஏதாவது தளத்தில் கண்டிருந்தால் பதிவிட்டிருக்க மாட்டேன். தொழில்நுட்பத் தளங்களில் பிரபலமான TechCrunch.com தளத்தில் இந்த செய்தியை பார்த்ததால் தான் பதிவிட்டேன். மீண்டும், மன்னிக்கவும்!

Post a Comment

20 Comments

 1. ஹிட்ஸுக்காக இந்த மாதிரி தலைப்பு வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நான்கு நாட்களாக பதிவு எழுதாவிட்டால் என்ன நண்பா? இது போல தலைப்பை வைக்கலாமா? கொஞ்சம் யோசியுங்கள்

  ReplyDelete
 2. hellooo......oooooo........

  இந்த செய்தியை படித்தவுடன் "நல்ல ஹிட் ஆகும்" (ஹிஹிஹி) என எண்ணி பதிவிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

  இது உங்களுக்கே நியாயமா..? தர்மமா..?

  ReplyDelete
 3. விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?

  ReplyDelete
 4. ஒபாமா உட்பட நம் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக..!

  ///இந்த செய்தியை படித்தவுடன் "நல்ல ஹிட் ஆகும்" (ஹிஹிஹி) என எண்ணி பதிவிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.///---hittophilia..!!!

  ஹூம்... இதற்கு மன்னிப்பெல்லாம் கிடையாது.
  இந்தாங்க... வாங்கிக்கங்க மூணு கும்மாங்குத்து..!

  தமிழ்மணம் காணாமல் போய்விட்டதால்... நாலாவது குத்திலிருந்து... தப்பித்தீர்கள்..! :))

  ReplyDelete
 5. //இராஜராஜேஸ்வரி said... 1

  வதந்தியை நம்பவேண்டாம்
  //

  பதிவிலும் அதைத் தான் சகோதரி கூறியிருக்கிறேன்.

  தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 6. //என். உலகநாதன் said...

  ஹிட்ஸுக்காக இந்த மாதிரி தலைப்பு வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். நான்கு நாட்களாக பதிவு எழுதாவிட்டால் என்ன நண்பா? இது போல தலைப்பை வைக்கலாமா? கொஞ்சம் யோசியுங்கள்
  //

  மன்னிக்கவும் நண்பா! இனி இதனை தவிர்த்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 7. //மாய உலகம் said...

  hellooo......oooooo........

  இந்த செய்தியை படித்தவுடன் "நல்ல ஹிட் ஆகும்" (ஹிஹிஹி) என எண்ணி பதிவிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

  இது உங்களுக்கே நியாயமா..? தர்மமா..?
  //

  மன்னிக்கவும் நண்பா! இனி இதனை தவிர்த்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 8. //நண்பன் said...

  விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா?
  //

  :)

  தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 9. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

  ஒபாமா உட்பட நம் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக..!

  ///இந்த செய்தியை படித்தவுடன் "நல்ல ஹிட் ஆகும்" (ஹிஹிஹி) என எண்ணி பதிவிடுகிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.///---hittophilia..!!!

  ஹூம்... இதற்கு மன்னிப்பெல்லாம் கிடையாது.
  இந்தாங்க... வாங்கிக்கங்க மூணு கும்மாங்குத்து..!

  தமிழ்மணம் காணாமல் போய்விட்டதால்... நாலாவது குத்திலிருந்து... தப்பித்தீர்கள்..! :))
  //

  :)

  நன்றி சகோ.!

  ReplyDelete
 10. //சி.பிரேம் குமார் said...

  neengalum mokkai pathivu poda start panitingala
  //

  :)

  தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 11. அடுத்த தாக்குதல் அப்பிள் கம்பெனி மேலயாம் எப்பிட் ஹக்கெர்ஸ்

  ReplyDelete
 12. அட நீங்களா இப்படி தலைப்பு வெச்சீங்க நம்ப முடியலை.இன்னும் மாத்தலையே

  ReplyDelete
 13. மன்னிப்பு கேட்பது நல்ல மனிதரின் அடையாளம். நீங்கள் நல்ல மனிதராக பரிமளிக்க வாழ்துக்கள்

  ReplyDelete
 14. //A.சிவசங்கர் said...

  அடுத்த தாக்குதல் அப்பிள் கம்பெனி மேலயாம் எப்பிட் ஹக்கெர்ஸ்
  //

  அதனையும் படித்தேன் நண்பா! இது தினசரி செய்தியாகிவிட்டது.

  வருகைக்கும், தகவலுக்கும் நன்றி, நண்பா!

  ReplyDelete
 15. //ஆர்.கே.சதீஷ்குமார் said... 14

  அட நீங்களா இப்படி தலைப்பு வெச்சீங்க நம்ப முடியலை.இன்னும் மாத்தலையே
  //

  மன்னிக்கவும் நண்பா! தற்போது மாற்றிவிட்டேன்..!

  ReplyDelete
 16. //Anonymous said...
  மன்னிப்பு கேட்பது நல்ல மனிதரின் அடையாளம். நீங்கள் நல்ல மனிதராக பரிமளிக்க வாழ்துக்கள்
  //

  தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 17. why?!!!!!!!!!!!!!!????????

  ReplyDelete