தேடுபொறி ரகசியங்கள்: BackLinks

நல்லவேளை! ஐஸ்க்ரீம் கரைவதற்குள் அடுத்தப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும். படித்துவிட்டீர்களா?  சரி, இப்போ கதைக்கு வருவோம்.


நம்மை போன்று பலர் ஐஸ்க்ரீம் கடைகள் வைத்திருக்கிறார்கள். இப்பொழுது, வெளியூர்க்காரர்கள் அந்த மனிதர்களிடம் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால் எந்த கடையை முதலில் சொல்வார்கள்?

அந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணிகளைக் கொண்டு கடைகளை தரம் பிரிக்கின்றனர்.

அதாவது, முந்தைய பதிவில் சொன்னது போல, தேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிமுறைகளை (Algorithms) கையாளுகின்றன.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

1.  எந்த கடையை அதிகமானோர் சிபாரிசு செய்கிறார்களோ? அந்த கடையை தான் முதலில் சொல்வார்கள்.

அதாவது, எந்த தளத்திற்கு அதிகம் பேர் இணைப்பு (Link) கொடுத்திருக்கிறார்களோ? அந்த தளத்தை தான் தேடுபொறிகள் முதலில் சிபாரிசு செய்யும். அந்த இணைப்பு  BackLinks எனப்படும்.



நண்பர் ஒருவர் அவரது தளத்தில் நமது தளத்திற்கான இணைப்பை கொடுத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது நம் தளத்தின் Backlinks ஆகும். அதிகமான தளங்களில் நமது தளத்திற்கான இணைப்பு இருந்தால், தேடுபொறிகள் முதலில் நம்மை தான் சிபாரிசு செய்யும்.

சரி, இரண்டு ஐஸ்க்ரீம் கடைகள் இருக்கின்றது. அந்த இரண்டு கடைகளுக்கும் தலா ஒருவர் சிபாரிசு செய்கிறார்கள். இப்பொழுது எந்த கடைக்கு அந்த மனிதர்கள் சிபாரிசு செய்வார்கள்?


2. சிபாரிசு செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அந்த மனிதர்கள் கவனிப்பார்கள்.


கடை  ஒன்றை சிபாரிசு செய்பவர், "அது ஐஸ்க்ரீம் கடை" என்று சொல்கிறார்.
கடை இரண்டை சிபாரிசு செய்பவர், "அது கடை" என்று சொல்கிறார்.

இப்போது  வெளியூர்க்காரர்கள் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால், அந்த மனிதர்கள் முதல் கடையை தான் சிபாரிசு செய்வார்கள். இரண்டாவது கடையை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அதாவது தேடுபொறிகள், நமக்கு இணைப்பு கொடுத்த நண்பர் எப்படி கொடுத்திருக்கிறார்? என்று பார்க்கும்.

உதாரணத்திற்கு, இந்த பதிவின் முதல் பத்தியை பார்க்கவும்.

//ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும்.//

இதில்  "ஐஸ்க்ரீம்" என்ற இடத்திலும், "இங்கு கிளிக் செய்து" என்ற இடத்திலும் முந்தைய பதிவிற்கான சுட்டியை இணைத்துள்ளேன். அந்த இரண்டு வார்த்தைகளும் "Anchor Text" எனப்படும். தேடுபொறிகள் இவற்றைத் தான் கவனிக்கும்.



இப்போது, ஐஸ்க்ரீம் பற்றி ஒருவர் தேடினால்,மேலே "ஐஸ்க்ரீம்" என்று இணைப்பு கொடுத்திருக்கிறேன் அல்லவா? அதனைத் தான் முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளும். "இங்கு க்ளிக் செய்து" என்ற இணைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.

தேடுபொறிகள் கவனத்தில் கொள்ளும் மேலும் சில விஷயங்கள்:

1. Meta Tags - இதனை பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் கொஞ்சமாக சொல்லியிருக்கிறேன். அதாவது உங்கள் தளத்தை பற்றி தேடுபொறிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுகிறது.

இதில் கவனத்தில் கொள்ள விஷயம் என்னவெனில், உங்கள் ப்ளாக்கிற்கு தொடர்பில்லாத வார்த்தைகளை Meta Tag-ல் சேர்த்தால், அதனை தேடுபொறிகள் நிராகரித்துவிடும்.

2. வலைத்தளத்தின் காலம் - எத்தனை நாட்களாக நமது வலைத்தளம் செயல்படுகின்றது  என்பதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். நீண்ட காலமாக செயல்படும் வலைத்தளத்திற்கு முன்னுரிமை அளிக்கும்.


3. பதிவு தலைப்பு - பயனாளர்கள் ஒன்றை தேடினால் அந்த வார்த்தை எந்த பதிவின் தலைப்பில் உள்ளதோ? அதனை தான் முதலில் காட்டும். பதிவிற்குள்ளே அந்த வார்த்தை இருந்தால் அதனை இரண்டாவதாக தான் எடுத்துக் கொள்ளும்.

BackLinks பற்றி பார்த்தோம் அல்லவா? நம்முடைய தளத்திற்கான BackLinks-ஐ எப்படி தெரிந்துக் கொள்வது?

தேடுபொறிகள் அனைத்தும் நமது BackLinks-ஐ ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளாது. ஒவ்வொன்றும் வித்தியாசப்படும்.

Google Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, Google தளத்திற்கு சென்று,
link:bloggernanban.blogspot.com என்று தேடவும்.

bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் தள முகவரியை கொடுக்கவும்.

Yahoo Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, http://siteexplorer.search.yahoo.com/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் தள முகவரியை கொடுத்து தேடவும்.


Bing Backlinks-ஐ தெரிந்துக் கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டும். அதற்கு http://www.bing.com/toolbox/webmaster/ என்ற முகவரிக்கு சென்று, Windows LiveID மூலம் உள்நுழைந்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், ப்ளாக்கர் நண்பன் தளத்தின் கூகிள் பேக்லின்க்ஸ் பற்றி தேடிய பொழுது, ஒன்றும் காட்டவில்லை.

ஏன்? அதனையும் கூகிளிடமே கேட்டுவிடுவோம்.

ஐஸ்க்ரீம் கதை முடிந்தது. மற்ற  ரகசியங்களை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Post a Comment

22 Comments

  1. பிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி. பிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி.

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்..!
    பல அரிய தகவல்களை பலர் அறிய பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.பிளாக்கர் நண்பா..!

    ReplyDelete
  3. அருமையான பதிவு சகோ!!!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா போய்கிட்டிருக்கு பாஸ்

    ReplyDelete
  5. எனக்கும் கூகிள் பேக்லிங்க்ஸ் காட்டவில்லை...????

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. //K.RAJA said... 1

    பிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி. பிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி.
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  8. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 2

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்..!
    பல அரிய தகவல்களை பலர் அறிய பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.பிளாக்கர் நண்பா..!//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.!

    ReplyDelete
  9. //ஆமினா said... 3

    அருமையான பதிவு சகோ!!!

    வாழ்த்துக்கள்
    //

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. //ஆர்.கே.சதீஷ்குமார் said... 4

    ரொம்ப நல்லா போய்கிட்டிருக்கு பாஸ்
    //

    நன்றி நண்பா!

    //எனக்கும் கூகிள் பேக்லிங்க்ஸ் காட்டவில்லை...????//

    :) :) :)

    காரணம் இன்னும் தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன். விடைத் தெரிந்ததும் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  11. //M.R said... 6

    பயனுள்ள தகவல் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. தமிழில் தொழில்நுட்ப தகவல் தந்தமைக்கு நன்றி மேலும் இது போன்ற பல தகவல்களை பதிவிடவும்.

    அதுபோல் புதியதாக டொமைன் வாங்கி அதை எப்படி வெப்-ஓஸ்ட் செய்து நமது சொந்த தளத்தை லான்ச் செய்வது என்பதை அடிப்படையில் இருந்து கற்று கொடுக்கவும்.(domain +DNS+Server+path +window or lunix or others +Template)

    நன்றி!
    துமாரா தோஸ்த்

    ReplyDelete
  13. ஐஸ்க்ரீம் கடையை சுற்றி காட்டியமைத்தமைக்கு நன்றி... சுற்றி பார்த்தேன் நாம் சுட்டி காட்டும் லிங்க் தான் தேடுபொறியில் முதலில் வரும் என்ற தகவலை தெரிந்துக்கொண்டோம்... நன்றி நண்பா

    ReplyDelete
  14. //♠புதுவை சிவா♠ said... 12

    தமிழில் தொழில்நுட்ப தகவல் தந்தமைக்கு நன்றி மேலும் இது போன்ற பல தகவல்களை பதிவிடவும்.
    //

    நன்றி நண்பா!

    // அதுபோல் புதியதாக டொமைன் வாங்கி அதை எப்படி வெப்-ஓஸ்ட் செய்து நமது சொந்த தளத்தை லான்ச் செய்வது என்பதை அடிப்படையில் இருந்து கற்று கொடுக்கவும்.(domain +DNS+Server+path +window or lunix or others +Template)

    நன்றி!
    துமாரா தோஸ்த்
    //

    புதிய தளம் ஒன்று தொடங்கும் எண்ணம் உள்ளது. அதற்கு இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம்.

    இறைவன் நாடினால், தளம் தொடங்கிய பிறகு பதிவிடுகிறேன் நண்பா!

    ReplyDelete
  15. //மாய உலகம் said... 13

    ஐஸ்க்ரீம் கடையை சுற்றி காட்டியமைத்தமைக்கு நன்றி... சுற்றி பார்த்தேன் நாம் சுட்டி காட்டும் லிங்க் தான் தேடுபொறியில் முதலில் வரும் என்ற தகவலை தெரிந்துக்கொண்டோம்... நன்றி நண்பா
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  16. பெரும்பாலும் தமிழில் தலைப்பு வைத்தால், நம்முடைய தளத்திற்கு Backlinks கிடைப்பது சிரமமே. அதனால் உங்கள் பதிவிற்கு, தலைப்பு கொடுக்கும் இடத்தில முதலில் ஆங்கிலம் கொண்ட தலைப்பை வைத்து விட்டு பின்னர் மீண்டும் தமிழ் தலைப்பு கொடுங்கள். உதாரனதிக்கு என்னுடைய சில பதிவுகளையும் பாருங்கள்.

    உடமிளில் தலைப்பு வைத்தால் ......blog-post_12.html என்று தான் தலைப்பு இருக்கும். இதே ஆங்கிலம் கலந்து வைத்தால் ...../2011/07/backlinks.html என்று இருக்கும்.

    ReplyDelete
  17. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  18. //Sathishkumar said... 16

    பெரும்பாலும் தமிழில் தலைப்பு வைத்தால், நம்முடைய தளத்திற்கு Backlinks கிடைப்பது சிரமமே. அதனால் உங்கள் பதிவிற்கு, தலைப்பு கொடுக்கும் இடத்தில முதலில் ஆங்கிலம் கொண்ட தலைப்பை வைத்து விட்டு பின்னர் மீண்டும் தமிழ் தலைப்பு கொடுங்கள். உதாரனதிக்கு என்னுடைய சில பதிவுகளையும் பாருங்கள்.

    உடமிளில் தலைப்பு வைத்தால் ......blog-post_12.html என்று தான் தலைப்பு இருக்கும். இதே ஆங்கிலம் கலந்து வைத்தால் ...../2011/07/backlinks.html என்று இருக்கும்.//

    தகவலுக்கு நன்றி நண்பா! அதனால் தான் நான் பெரும்பாலான பதிவுகளில் ஆங்கில வார்த்தைகளை சேர்த்திருக்கிறேன். அதை பற்றி பிறகு எழுத வேண்டும்.

    ReplyDelete
  19. //மாய உலகம் said... 17

    இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com//

    :) :) :)

    வருகிறேன் நண்பா!

    ReplyDelete
  20. Not "link:bloggernanban.blogspot.com"

    site:bloggernanban.blogspot.com

    ReplyDelete
  21. //Anonymous said... 20

    Not "link:bloggernanban.blogspot.com"

    site:bloggernanban.blogspot.com
    //

    இல்லை நண்பா! site:bloggernanban.blogspot.com என்பது அந்த தளத்தில் குறிப்பிட்ட ஒன்றை தேடுவதற்கு பயன்படுகிறது. உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பனில் Meta Tag என்பதை தேட வேண்டுமானால், site:bloggernanban.blogspot.com Meta Tag என்று தேட வேண்டும்.

    கூகிள் Backlinks-ஐ பார்க்க, link:bloggernanban.blogspot.com என்று தான் தேட வேண்டும்.

    ReplyDelete
  22. ரொம்ம நல்ல தகவல் எல்லாsearch engin லும் ஒரே நேரத்தில் site submit செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்

    ReplyDelete