ப்ளாக்கர் நண்பன் Version 2.0

"ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ உங்கள் அன்போடும், ஆதரவோடும் ஒரு வருடத்தைக் கடந்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இந்த இனிய தருணத்தில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான், இணையம் மற்றும் ப்ளாக்கர்

பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.
                                                                                                                                
அந்த ப்ளாக் நான் சார்ந்த மார்க்கம் தொடர்பானது. எப்பொழுதாவது சென்று அப்டேட் செய்து விட்டு வருவேன். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜிமெயில் ஐடி கிடைத்ததும் அதிலேயே பதிவெழுத (அதாவது Copy&Paste செய்ய) ஆரம்பித்தேன்.

கணினியில் Programming Language-ஐ பொறுத்தவரையில், பதினோராம் வகுப்பில் படித்த HTML-ஐத் தவிர வேறு எதுவும் தெரியாது. பிறகு copy&paste தளமாக இருந்தாலும் அதனை அழகுப்படுத்துவதும், விளம்பரப்படுத்துவதும் எப்படி? என்று பல ஆங்கிலத் தளங்களில் கற்றுக் கொண்டு வந்தேன், இன்னும் கற்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பது ப்ளாக் தொடங்கிவிட்டேன். அவற்றில் மூன்றைத் தவிர மற்றவைகளை Delete செய்துவிட்டேன். அதற்கு காரணம் என்ன எழுதுவது என்று தெரியாததுதான்.

கடந்த வருடம் எனது உறவினர் நீடூர் அலி அவர்கள் மூலம் தமிழ்மணம், தமிழிஷ்(தற்போதைய இன்ட்லி), இன்னும் சில வலைப்பூக்கள் அறிமுகமானது. பிறகு ஒரு நாள் நாம் கற்றுக் கொண்ட ப்ளாக்கர் தொழில்நுட்பங்களையே பதிவிட்டால் என்ன? என்று தோன்றியது. உடனே ப்ளாக்கர் நண்பன் என்று பெயரிட்டு இந்த வலைப்பூவை தொடங்கி ஒரு பதிவையும் எழுதினேன்.
                                                   
பிறகு அடுத்தப் பதிவு எழுதுவதில் ஒரு சிக்கல். அது HTML Code-ஐ HTML ஆகக் காட்டுவது. HTML Code-ஐ கொடுத்தால், அது Code ஆக தெரியாமல் அதன் வெளியீடாக (Output) தெரிந்தது. அப்பொழுது அதனை சரி செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன். காரணம் Basically I Am சோம்பேறி!.

பிறகு சகோதரி கண்மணி அவர்களின் பிலாக்கர் டிப்ஸ் என்ற தளத்தைக் காண நேரிட்டது. அதில் அவர் ப்ளாக்கர் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதி வருகிறார். அந்த ப்ளாக்கை பார்த்ததும் தான் மீண்டும் பதிவெழுத வேண்டுமென்ற ஆசை வந்தது. மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, முன்சொன்ன HTML பிரச்சனையை சரிசெய்து பின் மீண்டும் பதிவெழுத தொடங்கினேன். மூன்றாவது பதிவிற்கு தான் முதல் பின்னூட்டமே கிடைத்தது. 

பிறகு கிடைத்த பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் என்னை இன்னும் அதிகமாக எழுதத் தூண்டியது. நான் கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.

இதுவரை  ப்ளாக்கர் நண்பன் தளத்தில்:

40 பதிவுகள் (சராசரியாக ஒன்பது நாட்களுக்கு ஒரு பதிவு)
700+ பின்னூட்டங்கள் (என்னுடைய பின்னூட்டங்களையும் சேர்த்து)
13,000+ வருகையாளர்கள் (Unique Visitors)
40,000+ முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன (Page Views)
200+ நண்பர்கள் (Followers)

நினைவில்  நிற்கும் தருணங்கள்:

1. நண்பர் அஸ்ஃபர் அவர்களின் முதல் பின்னூட்டம்.

2. நண்பர் பிரபு அவர்களின்  சுதந்திர மென்பொருள் தளத்தின் தொழில்நுட்ப வலைப்பூக்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது.

3. தமிழ்மணம் விருதுகள் 2010-ல் முதல் இரண்டு சுற்றுகளைக் கடந்தது.

4. அலெக்ஸா ரேங்கில் முன்னேறி வருவது.

5. இவையனைத்தையும் விட  முகம் தெரியாத பல நண்பர்களைப் பெற்றது.

அதிகமான வாசகர்களை இத்தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் ஆறு தளங்கள்:
 1. இன்ட்லி
 2. சுதந்திர மென்பொருள்
 3. தமிழ்மணம்
 4. தமிழ் 10
 5. தட்ஸ் தமிழ்
 6. தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்

அதிகம் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்: 


உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகிறது, உங்கள் சந்தேகங்கள் நான் நிறைய கற்றுக் கொள்ள உதவுகிறது. என்னால் நீங்கள் கற்கவில்லை, உங்களால் நான் கற்கிறேன்.

ப்ளாக்கர்  நண்பன் Version 2.0

இந்த இரண்டாம் ஆண்டில் புதிதாக ஒரு முடிவு எடுத்துள்ளேன். அது ப்ளாக்கர் பற்றி மட்டுமல்லாமல் பிற இணையம், தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகளையும் எழுதலாம் என நினைக்கிறேன். அதனால் தான் உங்கள் கருத்துக்களை அறிவதற்காக Sidebar-ல் கேள்வி கேட்டிருந்தேன். ஓட்டு போட்ட பதினெட்டு நபர்களில் பதினோரு நபர்கள் "பிற செய்திகளையும் எழுதலாம்" என்று சொல்லியிருப்பதால் இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.

என்னால் அனைத்து நண்பர்களின் பெயரையும் இங்கு குறிப்பிட முடியவில்லை. இருப்பினும்,

 இதுவரை பின்னூட்டங்கள் மூலமும், மெயில்கள் மூலமும் ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,

என்னுடைய இந்த தளத்தின் சுட்டியை தங்கள் தளங்களின் Sidebar-லும், பதிவுகளிலும் பகிரும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,
  
இன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கும்,

எனது உளமார்ந்த   நன்றி!    நன்றி!    நன்றி!


என்றும் நட்புடன்,

ப்ளாக்கர் நண்பன் (எ) நூ.ஹ. அப்துல் பாஸித்


பிற்சேர்க்கை:

இந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களைப் படித்த போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. இப்பொழுதுதான் நான் ஏதோ சாதித்ததாக உணர்கிறேன். தங்கள் அன்பிற்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலையை தந்த இறைவனுக்கே அனைத்துப் புகழும்!

Post a Comment

65 Comments

 1. வாழ்த்துக்கள் நண்பா ,தங்கள் சேவை தொடரட்டும்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சகோதரம் இன்னும் நீங்கள் சாதிப்பீர்கள்..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

  ReplyDelete
 3. Jazakallah Khayran
  JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness. ...

  ReplyDelete
 4. எதற்காகத் தயக்கம்? உதறிவிட்டு நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் எழுதுங்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்,

  எனக்கு உங்கள் தளத்தின் மூலம் பல உதவி கிடைத்துள்ளது. தனியாகவும் மெயில் மூலமாய் உதவியுள்ளீர்கள். அணு அளவு நற்செயலும் கவனிக்காமல் போகாது. இன்ஷா அல்லாஹ், தக்க கூலி உண்டு. இன்னும் அதிகமாக, அழகாக, அருமையாக பிளாக்கர் நண்பன் பயணிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ. :)

  வஸ் ஸலாம்.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அன்பின் பாஸித்,


  வாழ்த்துகிறேன்.


  வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

  ReplyDelete
 8. அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்..

  எனது பார்வையில் நீங்கள் எழுதவில்லை. அல்லாஹ் உங்களை எமக்கான அருளாக வெளிப்படுத்தியுள்ளான். சகோதர முஸ்லிம் ஒருவரது இந்த வளற்ச்சி எனது சொந்த பிள்ளைகளது அல்லது சகோதரங்களினது வளற்சி போல் உள்ளத்தை சந்தோசப்பட வைக்கிறது. மேலும் மேலும் அல்லாஹ் (சுபுஹ்) உங்களிற்கு அறிவையும் ஆற்றலையும் வழங்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன். வாழ்த்துக்கள்.
  எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே

  கைபர் தளம் - அபூ மஸ்லமா

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

  உங்கள் பயணம் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வளவு ஒரு நிலைக்கு வந்த பின்பும் உங்கள் பழைய வரலாற்றை வெட்கப்படாமல் சொல்வதிலிருந்தே உங்கள் உள்ளம் புரிகிறது. அல்லாஹ் உங்களதும் உங்கள் குடும்பத்தினதும் ரிஸ்க்கை விஸ்தீரனப்படுத்துவானாக.

  அபூ மஸ்லமா (இலங்கை)

  ReplyDelete
 10. தங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  கைகொடுங்க சகோ..!
  இரண்டாமாண்டு அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்..!

  //இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.//---வாறே..வா...! வரவேற்கிறேன்..!

  ReplyDelete
 11. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!

  Regards,
  http://ungalblog.blogspot.com
  http://niduronline.blogspot.com

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்..

  தங்கள் பணி இன்னும் சிறக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்...உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து தினமும் இங்கு வருகிறேன்..please make fast..!

  ReplyDelete
 14. //நா.மணிவண்ணன் said...

  வாழ்த்துக்கள் நண்பா ,தங்கள் சேவை தொடரட்டும்
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 15. //♔ம.தி.சுதா♔ said...

  வாழ்த்துக்கள் சகோதரம் இன்னும் நீங்கள் சாதிப்பீர்கள்..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!

  ReplyDelete
 16. //nidurali said...

  Jazakallah Khayran
  JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness. ...
  //

  Thank You for Your visit & comments!

  ReplyDelete
 17. //Amudhavan said...

  எதற்காகத் தயக்கம்? உதறிவிட்டு நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் எழுதுங்கள். பாராட்டுக்கள்.
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. இரண்டாமாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பா, உங்களின் வலைப்பதிவினால் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன், நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வலையுலகில் சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் தோழரே..

  தங்கள் பணி தொடரவும் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறேன்..

  ReplyDelete
 21. congrats Basith... I implemented most of your tips in my blogs and its still there.... thank you so much for easy-to-do tips... keep blogging whatever you want :)

  ReplyDelete
 22. மகிழ்ச்சி.
  //..கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.
  சக பதிவராக பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே!

  ReplyDelete
 23. வாழ்த்துகள். மேலும் உங்கள் புகழ் பரவ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 24. சகோதரர் பாஸித் அவர்களுக்கு..,அஸ்ஸலாமு அலைக்கும்.
  நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பக்கம் வரும் சூழ்நிலை எனக்கு....
  தங்களின் ப்ளாக் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து எடுத்து வைத்தமைக்கு முதலில் எனது வாழ்த்துக்கள் பல...(ஹயர்..)
  என்னை போன்று ப்ளாக்கின் முழு விபரங்கள் தெரியாத பலருக்கும் உங்கள் தெளிவான விளக்கங்கள் நல்ல பயனளித்துள்ளது சகோதரரே...
  அதற்க்கு நிறைய நன்றிகளை சொல்ல கடமை பட்டுள்ளேன்... இன்னும் உங்களின் பலவேறு சம்பந்தமான எழுத்துக்களை இன்னும் நிறைய வரவேற்க்கின்றோம்.எதிர்ப்பார்க்கின்றோம்....
  மீண்டும் எனது நன்றியையும்,வாழ்த்துக்களையும் கூறி கொள்கின்றேன்.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 25. அஸ்ஸலாமு அலைக்கும் பாசித்,

  அருமையாக டெக்னிகல் விசயங்களை தந்து வருகின்றீர்கள். ஜஜாக்கல்லாஹு க்ஹைர்.

  ----
  அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது.
  -----

  அழகா தானே எழுதுறிங்க? நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறி தானே வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ். இது போன்ற எண்ணங்களை மனதில் இருந்து துடைத்தேடுத்துவிட்டு மேலும் சிறப்பாக இயங்க வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

  தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத்த என்னுடைய வாழ்த்துக்கள்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. //சமுத்ரா said...

  வாழ்த்துக்கள்
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 28. ////அன்னு said...

  அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்,

  எனக்கு உங்கள் தளத்தின் மூலம் பல உதவி கிடைத்துள்ளது. தனியாகவும் மெயில் மூலமாய் உதவியுள்ளீர்கள். அணு அளவு நற்செயலும் கவனிக்காமல் போகாது. இன்ஷா அல்லாஹ், தக்க கூலி உண்டு. இன்னும் அதிகமாக, அழகாக, அருமையாக பிளாக்கர் நண்பன் பயணிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ. :)

  வஸ் ஸலாம்.
  //

  வ அலைக்கும் ஸலாம்.
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 29. //வாஞ்ஜுர் said...

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அன்பின் பாஸித்,


  வாழ்த்துகிறேன்.


  வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 30. //Abu Maslama said...

  அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்..

  எனது பார்வையில் நீங்கள் எழுதவில்லை. அல்லாஹ் உங்களை எமக்கான அருளாக வெளிப்படுத்தியுள்ளான். சகோதர முஸ்லிம் ஒருவரது இந்த வளற்ச்சி எனது சொந்த பிள்ளைகளது அல்லது சகோதரங்களினது வளற்சி போல் உள்ளத்தை சந்தோசப்பட வைக்கிறது. மேலும் மேலும் அல்லாஹ் (சுபுஹ்) உங்களிற்கு அறிவையும் ஆற்றலையும் வழங்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன். வாழ்த்துக்கள்.
  எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே

  கைபர் தளம் - அபூ மஸ்லமா
  //

  // அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

  உங்கள் பயணம் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வளவு ஒரு நிலைக்கு வந்த பின்பும் உங்கள் பழைய வரலாற்றை வெட்கப்படாமல் சொல்வதிலிருந்தே உங்கள் உள்ளம் புரிகிறது. அல்லாஹ் உங்களதும் உங்கள் குடும்பத்தினதும் ரிஸ்க்கை விஸ்தீரனப்படுத்துவானாக.

  அபூ மஸ்லமா (இலங்கை)
  //

  தங்கள் வருகைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.!

  ReplyDelete
 31. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

  தங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  கைகொடுங்க சகோ..!
  இரண்டாமாண்டு அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்..!

  //இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.//---வாறே..வா...! வரவேற்கிறேன்..!
  //
  //

  தங்கள் மீதும் அமைதி நிலவுவதாக!

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.!

  ReplyDelete
 32. //Abu Nadeem said...

  மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!

  Regards,
  http://ungalblog.blogspot.com
  http://niduronline.blogspot.com
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 33. //# கவிதை வீதி # சௌந்தர் said...

  வாழ்த்துக்கள்..

  தங்கள் பணி இன்னும் சிறக்க வேண்டுகிறேன்..
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 34. //முகம்மது தவ்ஃபிக் said...

  வாழ்த்துக்கள்...உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து தினமும் இங்கு வருகிறேன்..please make fast..!
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 35. //Lakshmi said...

  வாழ்த்துக்கள்.
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 36. //இரவு வானம் said...

  இரண்டாமாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பா, உங்களின் வலைப்பதிவினால் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன், நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வலையுலகில் சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 37. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  வாழ்த்துக்கள் தோழரே..

  தங்கள் பணி தொடரவும் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறேன்..
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழரே!

  ReplyDelete
 38. //Premkumar Masilamani said...

  congrats Basith... I implemented most of your tips in my blogs and its still there.... thank you so much for easy-to-do tips... keep blogging whatever you want :)
  //

  Thank you for your wish and encouragement my friend!

  ReplyDelete
 39. //ந.ர.செ. ராஜ்குமார் said...

  மகிழ்ச்சி.
  //..கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.
  சக பதிவராக பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 40. //ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...

  வாழ்த்துகள். மேலும் உங்கள் புகழ் பரவ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  //

  தங்கள் வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 41. //apsara-illam said... 24

  சகோதரர் பாஸித் அவர்களுக்கு..,அஸ்ஸலாமு அலைக்கும்.
  நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பக்கம் வரும் சூழ்நிலை எனக்கு....
  தங்களின் ப்ளாக் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து எடுத்து வைத்தமைக்கு முதலில் எனது வாழ்த்துக்கள் பல...(ஹயர்..)
  என்னை போன்று ப்ளாக்கின் முழு விபரங்கள் தெரியாத பலருக்கும் உங்கள் தெளிவான விளக்கங்கள் நல்ல பயனளித்துள்ளது சகோதரரே...
  அதற்க்கு நிறைய நன்றிகளை சொல்ல கடமை பட்டுள்ளேன்... இன்னும் உங்களின் பலவேறு சம்பந்தமான எழுத்துக்களை இன்னும் நிறைய வரவேற்க்கின்றோம்.எதிர்ப்பார்க்கின்றோம்....
  மீண்டும் எனது நன்றியையும்,வாழ்த்துக்களையும் கூறி கொள்கின்றேன்.

  அன்புடன்,
  அப்சரா.
  //

  வ அலைக்கும் ஸலாம்.

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 42. //Aashiq Ahamed said...

  அஸ்ஸலாமு அலைக்கும் பாசித்,

  அருமையாக டெக்னிகல் விசயங்களை தந்து வருகின்றீர்கள். ஜஜாக்கல்லாஹு க்ஹைர்.

  ----
  அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது.
  -----

  அழகா தானே எழுதுறிங்க? நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறி தானே வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ். இது போன்ற எண்ணங்களை மனதில் இருந்து துடைத்தேடுத்துவிட்டு மேலும் சிறப்பாக இயங்க வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

  தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத்த என்னுடைய வாழ்த்துக்கள்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ.!

  ReplyDelete
 43. //கலாநேசன் said...

  வாழ்த்துக்கள்...
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 44. //மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said... 27

  வாழ்த்துக்கள் நண்பரே
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 45. மாப்ள வாழ்த்துக்கள்...இன்னும் பல விஷயங்களை தருவிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி!

  ReplyDelete
 46. //விக்கி உலகம் said...

  மாப்ள வாழ்த்துக்கள்...இன்னும் பல விஷயங்களை தருவிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 47. உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். உங்கள் பிளாக்கினால் பயன் அடைந்தவனில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் உங்கள்மூலம் படித்து பயனடைகிறோம். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 48. நீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்.

  ReplyDelete
 49. //viswam said...

  உளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். உங்கள் பிளாக்கினால் பயன் அடைந்தவனில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் உங்கள்மூலம் படித்து பயனடைகிறோம். வாழ்க வளமுடன்.
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 50. //N.H.பிரசாத் said...

  நீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்.
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 51. ப்ளாக்கர் நண்பன் இன்னும் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்...நிறைய தொழில் நுட்பத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் வாசகர்களின் ஆவல்..இதுவே பெரிய சாதனையாகி தேங்கிவிடவேண்டாம்...நாங்கள் தினசரி பதிவை எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 52. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  ப்ளாக்கர் நண்பன் இன்னும் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்...நிறைய தொழில் நுட்பத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் வாசகர்களின் ஆவல்..இதுவே பெரிய சாதனையாகி தேங்கிவிடவேண்டாம்...நாங்கள் தினசரி பதிவை எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா! தங்கள் எண்ணப்படியே முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
 53. பத்து பதிவுகள் வந்தாலும் ,அதில் ஒரு பதிவுவவாது நல்ல பதிவாக
  அமையும் ,அப்படித்தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பதிவாக
  அமைகிறது.அசால்ட முன்னேற என் அன்பு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 54. அஸ்ஸலாமு அலைக்கும்!!
  அன்பு சகோதரரே, நீங்கள் எழுதியுள்ள மேற்கண்ட கருத்துக்கள் உண்மைதான்.
  //பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.//
  இதில் ஒரு மாற்றம்-நான் பிளாக் ஆரம்பித்தது2009-டிசம்பர் 31ந்தேதி
  பிறகு உங்களின் பல பதிவுகளை கண்டதின் விளைவு
  என்னை போன்றவர்கள் தங்களின் பிளாக்குகளை
  மெருகெற்றுகின்றனர் என்பது உண்மையே!!!!
  தொடரட்டும் உங்களின் இந்த சேவை!!
  ஜஸாக்கல்லாஹ் கைரன்
  பாருங்கள்!என் வலை தளத்தையும்,என் நண்பனின் வலைதளத்தையும்
  www.marhummuslim.blogspot.com
  www.kaleelsms.com
  பார்த்துவிட்டு
  உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குங்கள்..........
  வஸ்ஸலாம்.
  என்றும் நட்புடன்
  முஹம்மத் ஈஸா..
  mansooorabdullah8@gmail.com

  ReplyDelete
 55. //மழைதூறல் said...

  பத்து பதிவுகள் வந்தாலும் ,அதில் ஒரு பதிவுவவாது நல்ல பதிவாக
  அமையும் ,அப்படித்தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பதிவாக
  அமைகிறது.அசால்ட முன்னேற என் அன்பு வாழ்த்துக்கள் .
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 56. @MARHUM MUSLIM

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ.!

  ReplyDelete
 57. வாழ்த்துக்கள் சகோதரம்

  http://ejaffna.blogspot.com

  ReplyDelete
 58. //Arjun Rajeswaran said...
  வாழ்த்துக்கள் சகோதரம்

  http://ejaffna.blogspot.com
  //

  நன்றி சகோ.!

  ReplyDelete
 59. நீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்

  ReplyDelete
 60. //Rddr786 said... 60

  நீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 61. உங்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும், அதை எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள காரணமான, வெற்றியின் மூலம் கிடைத்த உங்களது மன நெகிழ்வும் என்னால் நன்றாகவே உணர முடிகிறது.
  உங்களது பதிவுகள் மிக மிக அருமை. (நான் என் வாழ்வில் முதன் முதலாக என்னுடைய கருத்தை பதிவு செய்வது உங்களுக்குத்தான். பாராட்டாமல் இருக்க முடியவில்லை.) நன்றி சகோதரரே.

  ReplyDelete
 62. //V.Subramanian said... 62

  உங்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும், அதை எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள காரணமான, வெற்றியின் மூலம் கிடைத்த உங்களது மன நெகிழ்வும் என்னால் நன்றாகவே உணர முடிகிறது.
  உங்களது பதிவுகள் மிக மிக அருமை. (நான் என் வாழ்வில் முதன் முதலாக என்னுடைய கருத்தை பதிவு செய்வது உங்களுக்குத்தான். பாராட்டாமல் இருக்க முடியவில்லை.) நன்றி சகோதரரே.//

  தங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரரே! தங்களது முதல் கருத்து இந்த தளத்தில் இருப்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 63. கைகொடுங்க நண்பா!
  இரண்டாமாண்டு அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்..!
  நிறைய தொழில் நுட்பத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் வாசகர்களின் ஆவல்..

  ReplyDelete