நமக்கும் உருவாக்கலாம் Facebook Fan Page

முகப்புத்தகம், முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக் தளம் இணைய உலகை ஆட்சி செய்துக்கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அதிகமான தளங்களில் காணப்படும் "ரசிகர் பக்கம்" எனப்படும் Fan Page ஆகும். நமக்காக ஒரு ரசிகர் பக்கத்தை உருவாக்கும் முறையை இங்கு பார்ப்போம்.

1. முதலில் உங்கள் Facebook கணக்கைக் கொண்டு உள்நுழையுங்கள். உங்களுக்கு ஐடி இல்லையென்றால் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

2. பிறகு http://www.facebook.com/pages/create.php/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

3. அங்கு ஆறு விதமான Options இருக்கும். அதில் “Brand or Product” என்பதை க்ளிக் செய்யவும்.

4. பிறகு Drop Down Box-ல் Website என்பதை  தேர்வு செய்து, கீழே உங்கள் ரசிகர் பக்கத்திற்கான பெயரை டைப் செய்து, பின் "I agree to Facebook Pages terms" என்பதில் Check செய்து, "Get Started" என்பதை க்ளிக் செய்யவும்.

5. பிறகு உங்கள் Fan Page-ன் Dashboard பக்கத்திற்கு வந்துவிடும். அங்கு மீண்டும் ஒரு முறை உங்கள் Fan Page-ன் பிரிவை (Category) உறுதி செய்ய சொல்லும்.

6. அங்கு முதல் Drop Down Box-ல் "Websites&Blogs" என்பதனையும், இரண்டாவது Drop Down Box-ல் "Personal Blog" அல்லது உங்களுக்கு விருப்பமான பிரிவை தேர்வு செய்து, "Update Category" என்பதை க்ளிக் செய்யவும்.

7. பிறகு "Upload an Image" என்பதை க்ளிக் செய்து, உங்கள் ஃபேன் பேஜ் காக உங்கள் விருப்பமான படத்தை மாற்றிக் கொள்ளவும். 

8. பிறகு "Edit Info" என்பதை க்ளிக் செய்து, பின் Basic Information என்பதை க்ளிக் செய்யவும்.

9. அங்கு உங்கள் தளம் பற்றிய விபரங்களை கொடுத்து "Save Changes" என்பதை க்ளிக் செய்யவும். [இதனை செய்யும் போது ஒழுங்காக Update ஆகவில்லைஎனில், ஒவ்வொன்றாக கொடுத்து Update செய்யவும்.]

10.  பிறகு இடது புறத்தில் "Manage Permissions" என்பதை க்ளிக் செய்து, சில மட்டுறுத்தல்களை  உங்கள் விருப்பப்படி செய்துக் கொள்ளலாம்.

நாம் உருவாக்கிய பேஸ்புக் பக்கத்தின் முகவரியை அறிய:

மேற்சொன்னவாறு நாம் மாற்றங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது, வலது புறம் மேலே View Page என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யுங்கள். உங்கள் பக்கம் வந்துவிடும். அங்கு Address Bar-ல் இருக்கும் முகவரி தான் உங்கள் ரசிகர் பக்கத்தின் முகவரியாகும்.

உங்கள் ரசிகர் பக்கம் பின்வருமாறு காட்சி அளிக்கும்.

நமது ரசிகர் பக்கத்திற்கான Like Gadget-ஐ உருவாக்குவது எப்படி? என்றும்,  நமது பக்கத்தை மேம்படுத்துவது எப்படி? என்றும் இறைவன் நாடினால் அடுத்தடுத்துப் பார்ப்போம்.

கவனிக்க: நாம் ஒருஒரு ரசிகர் பக்கத்தை Like செய்தால், அது எப்படி வேலை செய்யும் என்று தெரிய வேண்டுமா? அப்படியென்றால் "ப்ளாக்கர் நண்பன்" பேஸ்புக் பக்கத்திற்கு சென்று Like செய்து பாருங்கள். [ச்சும்மா ஒரு விளம்பரம் தான்..!]

Post a Comment

15 Comments

 1. நல்ல .....புதிய .தகவல் .நன்றி !

  ReplyDelete
 2. You can use RSS Graffiti (Facebook Apps) to publish your article on faceboook.

  ReplyDelete
 3. சூப்பர் உடனே ப்ளாக்ல போடணும்..பகிர்வுக்கு நன்றி!!

  ReplyDelete
 4. தெளிவாக விளக்கியிருக்கீங்க.. பாராட்டுக்கள்..!! நன்றி! வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 5. //koodal bala said... 1

  நல்ல .....புதிய .தகவல் .நன்றி !
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 6. //Anony 1 said... 2

  You can use RSS Graffiti (Facebook Apps) to publish your article on faceboook.
  //

  தகவலுக்கு நன்றி நண்பா! ஆனால் அது மாதிரியான Applications நமக்கு தெரியாமலேயே நமது தகவலை எடுக்க வாய்ப்புள்ளதால் இவற்றை நான் பயன்படுத்துவதில்லை.

  ReplyDelete
 7. //ஆர்.கே.சதீஷ்குமார் said... 3

  சூப்பர் உடனே ப்ளாக்ல போடணும்..பகிர்வுக்கு நன்றி!!
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 8. //தங்கம்பழனி said... 4

  தெளிவாக விளக்கியிருக்கீங்க.. பாராட்டுக்கள்..!! நன்றி! வாழ்த்துக்கள்..!!
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 9. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்...
  பாதி கிணறு தாண்டிட்டேன்...
  ஆனால்....
  அப்படியே...
  அந்தரத்தில் நான்...
  ஸ்டில்லாய்...!?!?!

  மீதி கிணறையும் எப்போது தாண்டிக்குதிப்பது சகோ...?

  ReplyDelete
 10. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

  ஸலாம் சகோ.அப்துல் பாஸித்...
  பாதி கிணறு தாண்டிட்டேன்...
  ஆனால்....
  அப்படியே...
  அந்தரத்தில் நான்...
  ஸ்டில்லாய்...!?!?!

  மீதி கிணறையும் எப்போது தாண்டிக்குதிப்பது சகோ...?
  //

  வ அலைக்கும் சலாம் சகோ.! pause செய்து வையுங்கள். நாளை தாண்டலாம்..
  :)

  ReplyDelete
 11. பயனுள்ள பதிவு..!!

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நானும் பாதிகினறு தாண்டலாம் என பார்த்தேன் ஒன்னும் புரியல நீங்கள் எப்பவாவது சும்ம இருந்தால் எனது வலைப்பூவின் போஸ்ட் பேஸ்புக் சென்றடைய வழிகாட்டுங்கள் வேற என்ன நான் செய்ய முடியும் இரண்டுநாள் இதுக்காக மெனக்கெட்டேன் இதுக்கு முன்னாடி தம்பி சசி குமார்தான் பேஜ் உருவாக்கித்தந்தாறு

  ReplyDelete
 13. பல மாதங்களுக்கு முன் கிரியேட் செய்தேன் - ஒரு பயலும் எட்டிப் பார்ப்பதில்லை! :D

  ReplyDelete
 14. அது எப்பிடிங்க.....நாங்க தேடும் விடயம் எல்லாமே மொத்தமா வைச்சு ஜமாய்க்கிறிங்கப்பா....................

  ReplyDelete
 15. உங்க ஐடியா வைச்சு இப்போ தாங்க create பண்ணிகொண்டு இருக்கிறன்

  ReplyDelete