பொதுவாக பதிவர்களில் அதிகமானோருக்கு சில கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. அவைகளை பதிவர்கள் கெட்ட பழக்கங்களாகவே கருதுவதில்லை. இவற்றை அவர்கள் கைவிட்டால் சிறந்த பதிவர்களாக(?) மாறலாம்.
புதிதாக பதிவெழுத தொடங்கியவர்கள் அனைவரும் செய்யும் செயல் இது. ஒரு நாளுக்கு அதிகமான முறை தமது ப்ளாக்கிற்கு எத்தனை நபர்கள் வந்திருக்கிறார்கள் என்ற stats-ஐ பார்த்துக் கொண்டிருப்பார்கள். புதிய பதிவர்கள் அவ்வாறு செய்வது இயற்கை. ஆனால் அவ்வாறு செய்வதினால் நேரம் தான் விரயம் ஆகிறது. அதற்கு பதிலாக அந்த நேரங்களை நமது ப்ளாக்கை மேம்படுத்தவும், மற்ற பதிவர்களிடம் நட்புறவை ஏற்படுத்துவதிலும் செலவிட்டால் உபயோகமானதாக இருக்கும்.
அவசியம் நீக்கப்பட வேண்டிய பழக்கம் இது. நமது தளத்தை எத்தனையோ நபர்கள் படிக்கலாம். ஆனால் அவர்களில் அத்தனை பேரும் பின்னூட்டம் இடுவதில்லை. உண்மையாகவே பதிவு பிடித்தோ, அல்லது விளம்பரத்திற்காகவோ, எதுவாயினும் சரி, பின்னூட்டம் இடுவதற்காக (நமக்காக) அவர்கள் சிறிது நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டியது பதிவர்களின் கடமையாகும். குறைந்தபட்சம் பின்னூட்டம் இடுபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். இந்த பழக்கம் எனக்கு தெரிந்தமட்டும் அதிகமானோரிடம் இல்லை.
பதிவர்கள் முதலில் அதிகமான பதிவுகளை எழுதுவார்கள். அது ஆர்வத்தின் வெளிப்பாடு. பிறகு அந்த ஆர்வம் குறைந்து பதிவுகளும் குறைந்துவிடும். சில நேரங்களில் பதிவுகள் எழுதாமல் இடைவெளி விட்டுவிடுவார்கள். இதனால் மூன்று விசயங்களை இழக்க நேரிடும்.
ஒன்று பதிவர்களின் நட்பு வட்டாரம். புதிய பதிவுகள் எதுவும் நீண்ட நாள் எழுதவில்லையெனில் சாதாரணமான வாசகர்கள் மட்டுமின்றி, நம்முடைய நண்பர்களின் வரவும் குறைந்துவிடும்.
இரண்டாவது, தேடுபொறியிலும் நம்முடைய ப்ளாக்கின் மதிப்பு குறைந்துவிடும்.
மூன்றாவது, அலெக்ஸா, கூகிள் பேஜ் ரேங்க் போன்றவற்றிலும் நம் ப்ளாக்கின் மதிப்பு குறைந்துவிடும்.
அதனால் திட்டமிட்டு பதிவுகளை இடவும். அவை வாரம் ஒன்றாக இருந்தாலும் சரி.
ஒரு சில பதிவர்களிடம் உள்ள பழக்கம் இது. மற்ற பதிவர்கள் கஷ்டப்பட்டு, மூளையை கசக்கி (?) ஒரு பதிவை எழுதுகிறார்கள். ஆனால் சிலர் அதனை எளிதாக காப்பி&பேஸ்ட் செய்துவிடுகிறார்கள். ஒரு பதிவை திருடுவதற்கும், பகிர்ந்துக் கொள்வதற்கும் சிறு வித்தியாசம் தான் உள்ளது. பதிவு எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அதன் link-ஐ கொடுத்தால் அது பகிர்தல். அதற்கும் அந்த பதிவரின் அனுமதியை பெற வேண்டும். அப்படி செய்யாமல் தானே எழுதியது போல பதிவிட்டால் அது “திருட்டு” ஆகும். இதுவும் அவசியம் நீக்கப்பட வேண்டிய பழக்கம்.
ஒரு பதிவை எழுதி முடித்த உடனே அதனை பதிவிடக் கூடாது. அதனை ஒரு முறை proof reading பார்த்துவிட்டு பிறகு பதிவிட வேண்டும். எழுத்து பிழைகளோ, அல்லது வேறு ஏதோ பிழைகளோ இருந்தால் அதனை சரி செய்துவிட்டு பிறகு publish செய்யவும். இது அவ்வளவு பெரிய கெட்ட பழக்கம்(?) கிடையாது. ஆனால் இதனை தவிர்த்தல் நன்று.
இதனால் பதிவுலக நண்பர்களே! மேலே சொன்ன ஐந்து கெட்ட பழக்கங்களையும்(?) கைவிட்டு சிறந்த பதிவர்களாக (???) திகழ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..!
டிஸ்கி: இந்த பதிவு கொஞ்சம் மொக்கையா இருக்கோ? எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனாலும் இதை நான் பதிவிட காரணம் ஒன்னு தான். இந்த பதிவை ஆங்கில தளத்தில் படித்த போது தான் என்னுடைய தவறுகள் என் மண்டையில் உரைத்தது. இனி அதனை திருத்திக் கொள்கிறேன். பதிவு பிடிக்கவில்லையெனில் மன்னிக்கவும்..!
நன்றி: http://www.dailyblogtips.com/
1. ஒரு நாளில் அதிக முறை stats-ஐ பார்த்தல்
விளக்கம்:
ஹிஹிஹி... இதற்கு நான் ஒன்னும் விதிவிலக்கு அல்ல. நானும் புதிதாக ப்ளாக்கை தொடங்கிய பொழுது stats-ஐ பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டேன். இப்பொழுது ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு தடவைக்கு மேல் பார்ப்பதில்லை... 2. பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்காமல் இருத்தல்
அவசியம் நீக்கப்பட வேண்டிய பழக்கம் இது. நமது தளத்தை எத்தனையோ நபர்கள் படிக்கலாம். ஆனால் அவர்களில் அத்தனை பேரும் பின்னூட்டம் இடுவதில்லை. உண்மையாகவே பதிவு பிடித்தோ, அல்லது விளம்பரத்திற்காகவோ, எதுவாயினும் சரி, பின்னூட்டம் இடுவதற்காக (நமக்காக) அவர்கள் சிறிது நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டியது பதிவர்களின் கடமையாகும். குறைந்தபட்சம் பின்னூட்டம் இடுபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள். இந்த பழக்கம் எனக்கு தெரிந்தமட்டும் அதிகமானோரிடம் இல்லை.
விளக்கம்:
நான் சமீபமாக பதில் அளிக்காததற்கு இணைய வசதி இல்லாததே காரணம். மற்றபடி வாசகர்களின் பின்னூட்டங்கள் தான் என்னை அதிகம் எழுத தூண்டுகிறது. அவைகள் ஆயிரம் Hits-களைவிட மேலானது. 3. திட்டமற்ற பதிவிடும் முறை
ஒன்று பதிவர்களின் நட்பு வட்டாரம். புதிய பதிவுகள் எதுவும் நீண்ட நாள் எழுதவில்லையெனில் சாதாரணமான வாசகர்கள் மட்டுமின்றி, நம்முடைய நண்பர்களின் வரவும் குறைந்துவிடும்.
இரண்டாவது, தேடுபொறியிலும் நம்முடைய ப்ளாக்கின் மதிப்பு குறைந்துவிடும்.
மூன்றாவது, அலெக்ஸா, கூகிள் பேஜ் ரேங்க் போன்றவற்றிலும் நம் ப்ளாக்கின் மதிப்பு குறைந்துவிடும்.
அதனால் திட்டமிட்டு பதிவுகளை இடவும். அவை வாரம் ஒன்றாக இருந்தாலும் சரி.
விளக்கம்:
நான் பதிவிடாததற்கு முன் சொன்னது போல இணையம் இல்லாததே காரணம். இனி தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன்.4. காப்பி அடித்தல்
விளக்கம்:
பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள் என்ற பதிவில் நான் கூறியது போல பல தளங்களிலிருந்து சேகரித்து பதிவு எழுதுவதால் link-ஐ தெரிவிக்காமல் இருந்தேன். இனி நானும் என்னை மாற்றிக் கொள்கிறேன். இனி ஆங்கில தளத்தின் சுட்டியையும் சேர்த்து எழுதுகிறேன்.5. பதிவை படிக்காமல் பதிவிடுதல்
விளக்கம்:
நான் எப்பொழுதும் பதிவிடும் முன் preview பார்த்து பிறகு தான் publish செய்வேன். ஆனாலும் என்னையும் மீறி சில பிழைகள் வந்துவிடுகிறது. இதனால் பதிவுலக நண்பர்களே! மேலே சொன்ன ஐந்து கெட்ட பழக்கங்களையும்(?) கைவிட்டு சிறந்த பதிவர்களாக (???) திகழ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..!
டிஸ்கி: இந்த பதிவு கொஞ்சம் மொக்கையா இருக்கோ? எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனாலும் இதை நான் பதிவிட காரணம் ஒன்னு தான். இந்த பதிவை ஆங்கில தளத்தில் படித்த போது தான் என்னுடைய தவறுகள் என் மண்டையில் உரைத்தது. இனி அதனை திருத்திக் கொள்கிறேன். பதிவு பிடிக்கவில்லையெனில் மன்னிக்கவும்..!
நன்றி: http://www.dailyblogtips.com/
30 Comments
நல்ல விசயத்தை சொல்லியிருக்கிறீங்கள் !உங்கள் ஆலோசனையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்!
ReplyDeleteபதிவர்களுக்கு பயனுள்ள பல கருத்துக்களை பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பு .
ReplyDeleteஇதில் சொல்லி இருக்கும் ஒரு சில விஷயங்கள் கெட்ட பழக்கங்கள்
ReplyDeleteஎன்பதைவிட நேரமின்மை என்றுதான் சொல்லவேண்டும்
sarithan
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.அப்துல் பாஸித்,
நல்ல ஆலோசனைகள். வரவேற்கிறேன். மிக்க நன்றி.
அத்துடன் உங்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது..!
அதாங்க... மாதத்துக்கு ஒரு பதிவு மட்டும் போடுதல்..!
ஜனவரி மற்றும் ஏப்ரலில் அதுவும் கூட இல்லை..! ஏன் இப்படி..?
வணக்கம் நண்பரே நலமா?
ReplyDeleteநல்ல தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)
//Nesan said...
ReplyDeleteநல்ல விசயத்தை சொல்லியிருக்கிறீங்கள் !உங்கள் ஆலோசனையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்!
//
நன்றி, நண்பா..!
//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said... 2
ReplyDeleteபதிவர்களுக்கு பயனுள்ள பல கருத்துக்களை பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பு .
//
நன்றி, நண்பா..!
//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said... 3
ReplyDeleteஇதில் சொல்லி இருக்கும் ஒரு சில விஷயங்கள் கெட்ட பழக்கங்கள்
என்பதைவிட நேரமின்மை என்றுதான் சொல்லவேண்டும்
//
உண்மை தான் நண்பா! அதனால் தான் கடைசியில் கெட்டபழக்கம் என்பதற்கு பக்கத்தில் கேள்விக்குறியை சேர்த்திருக்கிறேன்.
//இரவு வானம் said...
ReplyDeletesarithan
//
நன்றி, நண்பா!
// முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said... 5
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...//
வ அலைக்கும் சலாம் வரஹ்..
// சகோ.அப்துல் பாஸித்,
நல்ல ஆலோசனைகள். வரவேற்கிறேன். மிக்க நன்றி.
//
நன்றி சகோ.!
// அத்துடன் உங்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது..!
அதாங்க... மாதத்துக்கு ஒரு பதிவு மட்டும் போடுதல்..!
ஜனவரி மற்றும் ஏப்ரலில் அதுவும் கூட இல்லை..! ஏன் இப்படி..?
//
இணையம் கிடைக்காததும், (நண்பர் பனித்துளி சங்கர் அவர்கள் சொன்னது போல) நேரமின்மையும் தான் அதற்கு காரணம் சகோ.! இறைவன் நாடினால், தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன்.
உமது நல்ல பழக்கம் ப்ளாக்கர் டிப்ஸ் கொடுப்பது உமது கெட்ட பழக்கம் மிகவும் இடைவெளி கொடுப்பது
ReplyDeleteமாப்ள சூப்பரா சொல்லி இருக்கீங்கோ 7 வது ஓட்டு என்னோடது!
ReplyDeletewelcome back Abdul... Expecting more posts from you !!!
ReplyDeleteபதிவுகள் பழகி விட்டதால் உங்களுக்கு மொக்கையாக தெரிய்லாம்..ஆனால் புது பதிவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்...அருமையான அவசிய,பதிவு
ReplyDelete// nidurali said...
ReplyDeleteஉமது நல்ல பழக்கம் ப்ளாக்கர் டிப்ஸ் கொடுப்பது உமது கெட்ட பழக்கம் மிகவும் இடைவெளி கொடுப்பது
//
இறைவன் நாடினால், இ ணி அதை மாற்ற முயற்சிக்கிறேன், நன்றி!
//விக்கி உலகம் said...
ReplyDeleteமாப்ள சூப்பரா சொல்லி இருக்கீங்கோ 7 வது ஓட்டு என்னோடது!
//
நன்றி நண்பா!
// Premkumar Masilamani said... 14
ReplyDeletewelcome back Abdul... Expecting more posts from you !!!
//
Thank you, Friend!
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபதிவுகள் பழகி விட்டதால் உங்களுக்கு மொக்கையாக தெரிய்லாம்..ஆனால் புது பதிவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்...அருமையான அவசிய,பதிவு
//
நன்றி, நண்பா!
நல்ல பதிவு
ReplyDelete// sarujan said...
ReplyDeleteநல்ல பதிவு
//
நன்றி, நண்பா!
//...பதிவு பிடிக்கவில்லையெனில் மன்னிக்கவும்..!
ReplyDeleteஎன்ன தப்பு செய்துடீங்கன்னு மன்னிப்பு கேட்குறீங்க?
திட்டமற்ற பதிவிடும் முறை.. இது என்னிடம் இருக்கிறதென நினைக்கிறேன். மற்ற பழக்கங்கள் இல்லை.
இதே தவறை நானும் செய்து கொண்டு தான் இருந்தேன் இனிமேல் இதனை தவிர்த்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்..
Delete//ந.ர.செ. ராஜ்குமார் said...
ReplyDelete//...பதிவு பிடிக்கவில்லையெனில் மன்னிக்கவும்..!
என்ன தப்பு செய்துடீங்கன்னு மன்னிப்பு கேட்குறீங்க?
திட்டமற்ற பதிவிடும் முறை.. இது என்னிடம் இருக்கிறதென நினைக்கிறேன். மற்ற பழக்கங்கள் இல்லை.
//
நன்றி, நண்பா..!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே...
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்தானே...எதற்க்கு மொக்கை என்றெல்லாம் சொல்கிறீர்கள்...?
எங்களோடு இது போன்ற நல்ல விஷயங்களை பகிந்து கொள்வதற்க்கு மிக்க நன்றி...
அன்புடன்,
அப்சரா.
கமாணட் பகுதி இல்லாமலும் ஓட்டு பட்டைகள் இல்லாமலும் எங்கும் தனது இடுக்கைகளை இணைக்காமலும் சைடுலே லேபிள் கிடையாது அந்த பிளாக்குல எழுதிய முந்தைய பதிவுகளையும் பார்க்க முடியாது ஆனாலும் அது வெற்றி பிளாக்காக ஜொலிப்பது தெரியுமா. அதுதான் www.koyam1.blogspot.com பருங்க தெரியும் . இதிலே இருந்து தெரிவது என்ன மக்களுக்குதேவையானதை எழுதினா கண்டிப்பா வெற்றி பெறும் என்பதுதான்
ReplyDelete//apsara-illam said... 24
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே...
நல்ல பயனுள்ள தகவல்தானே...எதற்க்கு மொக்கை என்றெல்லாம் சொல்கிறீர்கள்...?
எங்களோடு இது போன்ற நல்ல விஷயங்களை பகிந்து கொள்வதற்க்கு மிக்க நன்றி...
அன்புடன்,
அப்சரா.
//
வ அலைக்கும் ஸலாம்.
நன்றி சகோதரி!
@Anonymous
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா!
//விஜயன் said... 26
ReplyDeleteNice post//
Thank You Friend!
நானும் இந்த விடயங்களை கடைப்பிடித்து கிடையாது "இன்ஷா அல்லாஹ்" இனிமேலும் இதனை தவிர்த்துக் கொள்கிறேன்..
ReplyDeleteநன்றி...