ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?

சமீப பதிவில் நமது ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைப்பது பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த பதிவில் நமது கணினியில் இருக்கும் வீடியோக்களை அல்லது யூடியூப் (Youtube) வீடியோக்களை நமது பதிவில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.


தற்போது வீடியோக்களை பதிவில் இணைக்கும் முறையை எளிமைப்படுத்தியுள்ளது ப்ளாக்கர் தளம்.

முதலில் உங்கள் ப்ளாக்கர் தளத்தின் புதிய பதிவிடும் (New Post) பக்கத்திற்கு செல்லுங்கள்.

அங்கு Insert a Video என்ற பட்டன் இருக்கும்(படத்தை பார்க்கவும்). அதனை க்ளிக் செய்யுங்கள்.

(படங்களை பெரிதாக காண, படங்கள் மீது க்ளிக் செய்யவும்.)க்ளிக் செய்த பிறகு வரும் Window-ல் மூன்று Options வரும்.

1. Upload

2. From YouTube

3. My YouTube Videos


1. Upload

உங்கள் கணினியில் உள்ள வீடியோக்களை இணைக்க இடது புறம் உள்ள Upload என்பதை தேர்வு செய்து, Browse என்பதை க்ளிக் செய்து, உங்கள் வீடியோவை தேர்வு செய்யுங்கள். பிறகு கீழே உள்ள Upload பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் வீடியோ Upload ஆகத் தொடங்கும். உங்கள் வீடியோவின் கொள்ளளவை(Memory)  பொறுத்து பதிவேற்றம் ஆக நேரம் ஆகும்.

2. From YouTube


யூட்யூப் வீடியோக்களை பதிவில் இணைக்க இரண்டாவதாக இருக்கும் From YouTube என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பிறகு வரும் தேடுபொறியில் குறிச்சொற்களை இட்டு Search Videos என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் இட்ட குறிச்சொற்கள் தொடர்பான பல்வேறு Youtube வீடியோக்களை அது காட்டும். உங்களுக்கு விருப்பமான வீடியோவை க்ளிக் செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.

 3. My YouTube Videos


மூன்றாவதாக உள்ள My YouTube Videos என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் யூட்யூப் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களின் தொகுப்பை காட்டும். உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்வு செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.


யூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2:

நாம் யூடியூப் தளத்தில் பார்க்கும் வீடியோக்களை வலைப்பதிவுகளில் இணைப்பதற்கான வசதியை அந்த தளமே தருகிறது.  நீங்கள் யூட்யூபில் பார்க்கும் வீடியோவுக்கு கீழே Embed என்ற பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் அந்த வீடியோவிற்கான Code உருவாகும். அதனை Copy செய்து நமது ப்ளாக்கில் Paste செய்ய வேண்டும். அந்த வீடியோ நமது ப்ளாக்கில் தெரியும்.


**வீடியோவின் அளவை மாற்ற அந்த Code-ல் உள்ள Width, Height என்ற இடத்தில் நமக்கு தேவையான அளவை மாற்றிக் கொள்ளலாம்.

*Width - அகலம்

*Height - உயரம்

Post a Comment

26 Comments

 1. மிகவும் பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ்
  புதியவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்
  தொடரட்டும் உங்கள் பணி...
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. முற்றிலும் புதியவர்களுக்கு என்று தலைப்பிட்டிருந்தால் சால பொருந்தியிருக்கும்..
  நன்றி..! வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 3. தங்கள் பயனுள்ள் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. எவ்வளவு தெளிவா சொல்லியிருக்கீங்க? மிக்க நன்றி

  யூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2://இதை பயன்படுத்தி தான் நான் யூட்டூப் வீடியோ சேர்ப்பேன்

  ReplyDelete
 5. //மாணவன் said...

  மிகவும் பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ்
  புதியவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்
  தொடரட்டும் உங்கள் பணி...
  பகிர்வுக்கு நன்றி
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 6. //தங்கம்பழனி said...

  முற்றிலும் புதியவர்களுக்கு என்று தலைப்பிட்டிருந்தால் சால பொருந்தியிருக்கும்..
  நன்றி..! வாழ்த்துக்கள்..!
  //

  தங்கள் ஆலோசனைப்படி தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!

  ReplyDelete
 7. //நிலாமதி said...

  தங்கள் பயனுள்ள் பகிர்வுக்கு நன்றி
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி!

  ReplyDelete
 8. //ஆமினா said...

  எவ்வளவு தெளிவா சொல்லியிருக்கீங்க? மிக்க நன்றி

  யூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2://இதை பயன்படுத்தி தான் நான் யூட்டூப் வீடியோ சேர்ப்பேன்
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி!

  ReplyDelete
 9. //ஹரிஸ் said...

  நன்றி நண்பா..
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 10. //விக்கி உலகம் said...

  நன்றிங்கோ
  //


  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 11. Nice explanation Basith... Keep up the good work !!

  ReplyDelete
 12. //Premkumar Masilamani said...

  Nice explanation Basith... Keep up the good work !!
  //

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 13. ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 14. சிறந்த பயனுள்ள பதிவு!

  ReplyDelete
 15. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே!

  ReplyDelete
 16. .எனக்கு தங்கள் தளத்தின் முகவரி இன்றுதான் கிடைத்தது . .ஒவ்வொரு பதிவும் அருமை நண்பரே .உபயோகமாக உள்ளது .நன்றி நண்பரே .

  ReplyDelete
 17. //M.R said... 20

  .எனக்கு தங்கள் தளத்தின் முகவரி இன்றுதான் கிடைத்தது . .ஒவ்வொரு பதிவும் அருமை நண்பரே .உபயோகமாக உள்ளது .நன்றி நண்பரே .//

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. //swjf said... 21

  v good ser sooper
  //

  Thank You friend!

  ReplyDelete
 19. unagal pathivugalai paarthukkondirukkiren unmaiyileye sirantha arivupporvamana pathivugal ..ungal sevai engalukku thevai

  ReplyDelete
 20. u r a good computer guide thank u&goahead

  ReplyDelete