நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 1

ப்ளாக் வைத்திருக்கும் அனைவர் மனதிலும் எழும் கேள்வி இது. அதற்கான பதிலாக இந்த தொடர் பதிவை எழுதுகிறேன். இந்த தொடரில் நான் பதியவிருக்கும் அனைத்து முறைகளும் நான் இதுவரை கற்றுகொண்டவைகள். நிச்சயம் இது உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.

முன்குறிப்பு:

எனக்கு கோர்வையாக எழுதத் தெரியாது. ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும். சொல்ல வரும் விஷயங்களை மட்டும் புரிந்துக் கொண்டால் போதும்.

விளம்பரம்:

ஐம்பது பைசா மிட்டாய்க்கு கூட ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் போது நம்முடைய வலைப்பதிவுக்கும் விளம்பரம் தேவை அல்லவா? ஆனால் நம்முடைய ப்ளாக்கை விளம்பரப்படுத்த பணத்தை செலவிடத் தேவையில்லை. கொஞ்சம் நேரத்தை மட்டும் செலவிட்டாலே போதும்.
இந்த தொடரில் முதலில் நாம் பார்க்க இருப்பது "திரட்டிகள்" பற்றி.


திரட்டி என்றால் என்ன?

நம்முடைய பதிவுகளை திரட்டும் இணையதளங்கள் தான் திரட்டிகள். ஆங்கிலத்தில் "Aggregator" எனப்படும். இந்த தளங்களில் நாம் முதலில் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். பிறகு நம்முடைய பதிவுகளை அந்த தளங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த தளங்களுக்கு வரும் வாசகர்கள் உங்கள் பதிவின் தலைப்பு பிடித்திருந்தால் உங்கள் பிளாக்கிற்கு வருகை தருவார்கள்.
பெரும்பாலான திரட்டிகள் நமது ப்ளாக்கில் ஓட்டு பட்டையை நிறுவுவதற்கான வாய்ப்பை தருகின்றன. அப்படி நிறுவுவதால், நமது பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் நம்முடைய பதிவுகளுக்கு ஓட்டு போட முடியும். ஓட்டு போடுவதற்கு அவர்கள் அந்தந்த திரட்டிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

திரட்டிகள் அதிகம் இருக்கின்றன. புதிது புதிதாய் திரட்டிகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பிரபலமான (எனக்கு தெரிந்த மட்டும்) சில திரட்டிகளை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.

இன்ட்லி 
tamil
தற்பொழுது திரட்டிகளில் முன்னிலையில் இருப்பது இன்ட்லி தான். இது முதலில் தமிழிஷ் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு வரும் வாசகர்களில் அதிகமானோர் இன்ட்லி தளத்திலிருந்து தான் வருகிறார்கள். இது நமது தளத்தில் ஓட்டு பட்டையை நிறுவும் வாய்ப்பை தருகிறது. 

முகவரி: http://ta.indli.com

தமிழ்மணம்
tamil
இன்ட்லிக்கு அடுத்ததாக பிரபலமான திரட்டி தமிழ்மணம். இந்த தளம் முதலில் தானியங்கியாக தொடங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இது தானியங்கி சேவையை நிறுத்திவிட்டது. தற்பொழுது இன்ட்லி போல ஒவ்வொரு பதிவையும் நாம் தான் சமர்ப்பிக்க வேண்டும். இது தரும் ஓட்டு பட்டையை நிறுவிவிட்டால் ஒரு சொடுக்கில் நமது பதிவை சமர்ப்பித்துவிடலாம். தற்பொழுது செய்தித்தளங்கள், இணையத்தளங்கள், தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனங்கள் சாராத தனியார் அமைப்புகளின் தளங்கள், பிரச்சாரத் தளங்கள் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கிறது. இதன் சமீப நடவடிக்கைகளால் இதற்கு வரவேற்பு குறைவதாக கருதுகிறேன்.

முகவரி: http://tamilmanam.net/

தட்ஸ் தமிழ்
tamil
தட்ஸ் தமிழ் என்பது oneindia.in தளத்தின் திரட்டியாகும். ஓட்டு பட்டையை நமது ப்ளாக்கில் நிறுவும் வாய்ப்பை இது நமக்கு தரவில்லை. ஆனால் நாம் அந்த தளத்திலேயே ஓட்டு போடும் வசதியை தந்துள்ளது. இதில் ஓட்டு போடுவதற்கு நமக்கு கணக்கு தேவையில்லை. இதிலிருந்தும் அதிக வாசகர்கள் வருகிறார்கள்.

முகவரி: http://thatstamil.oneindia.in/bookmarks


உலவு
tamil
உலவு தளமும் பிரபலமான திரட்டி தான். சமீபத்தில் இந்த தளத்தை மேம்படுத்தி உள்ளார்கள். இந்த திரட்டியும் நமது தளத்தில் ஓட்டு பட்டையை நிறுவும் வசதியை தருகிறது. சில வாரங்களுக்கு முன் இந்த தளத்தை திறந்த போது என்னுடைய Mozilla Firefox உலவி இதை திறக்க அனுமதிக்கவில்லை. வைரஸ் இருப்பதாக காட்டியது. தற்பொழுது நன்றாக வேலை செய்கிறது.

முகவரி: http://ulavu.com

தமிழ் 10
tamil
இந்த திரட்டியில் நான் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அதனால்இதை பற்றி முழுமையாக தெரியவில்லை. ஒரே வாரத்தில் இந்த தளத்திலிருந்து குறிப்பிடத்தக்க வாசகர்கள் வந்துள்ளார்கள். இதுவும் ஓட்டு பட்டை வசதியை தருகிறது.

முகவரி: http://tamil10.com/

இன்னும் சில திரட்டிகள்:

http://thiratti.com
http://tamilveli.com
http://namkural.com
http://yaaldevi.com
http://dinamani.com/edition/BlogUpload.aspx
http://newspaanai.com
http://bogy.in
http://thalaivan.com/blog

திரட்டிகளின் ஓட்டுப் பட்டையை நமது பிளாக்கில் இணைப்பது எப்படி? என்று இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் காண்போம்.

Post a Comment

54 Comments

 1. உங்களது இந்த பதிவை படித்த பின்தான் தான் oneindia வில் எனது வலைத்தளத்தை இணைத்தேன்.


  நன்றி

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்ல பகிர்வு பாஸித்!

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //THOPPITHOPPI said... 1

  உங்களது இந்த பதிவை படித்த பின்தான் தான் oneindia வில் எனது வலைத்தளத்தை இணைத்தேன்.

  நன்றி
  //

  தங்களுக்கு உதவியாக இருந்ததில் மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 4. //
  ஆமினா said...

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்ல பகிர்வு பாஸித்!

  வாழ்த்துக்கள்
  //

  வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி..!

  ReplyDelete
 5. திரட்டிகளின் ஓட்டுப்பட்டையை, நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி? என்னும் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிரேன்

  ReplyDelete
 6. புதியதாய் வலைப்பூ தொடங்குபவர்களுக்கு பயனுள்ளதாய் உள்ளது...!

  மேலும் எனக்கு தெரிந்த சில திரட்டிகள்

  www.ww2.aranijothish.com

  www.etamil.net

  www.tamilarkalblogs.com

  கடந்த சில நாட்களாக பதிவுகளை காணவில்லை வேலைப்பளுவோ...!
  அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்நோக்கி....காத்திருக்கிறேன்....

  நன்றி நண்பா

  ReplyDelete
 7. awesome basith... i am in tamilmanam already, let me join indli also... thanks for the valuable informations... you rock !!!

  ReplyDelete
 8. உங்கள் பதிவின் மூலம் மேலும் சில திரட்டிகள் பற்றி தெரிந்துக்கொண்டேன்...

  ReplyDelete
 9. தகவல்களுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 10. தட்ஸ்தமிழ் திரட்டி பற்றி தெரியாமல் இருந்தது, உங்கள் தளத்தை படிதத பிறகுதான் தெரிந்து கொண்டேன், இனிமேல் இணைக்கிரேன், தகவல் தெரிவித்ததுக்கு நன்றி

  ReplyDelete
 11. தகவல்களுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 12. //komu said...

  திரட்டிகளின் ஓட்டுப்பட்டையை, நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி? என்னும் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிரேன்
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி..!

  ReplyDelete
 13. //Praveen-Mani said...

  புதியதாய் வலைப்பூ தொடங்குபவர்களுக்கு பயனுள்ளதாய் உள்ளது...!

  மேலும் எனக்கு தெரிந்த சில திரட்டிகள்

  www.ww2.aranijothish.com

  www.etamil.net

  www.tamilarkalblogs.com

  கடந்த சில நாட்களாக பதிவுகளை காணவில்லை வேலைப்பளுவோ...!
  அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்நோக்கி....காத்திருக்கிறேன்....

  நன்றி நண்பா
  //

  தங்கள் கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி, நண்பா..!

  வெளியூர் அலைச்சலாக இருந்ததால் பதிவிட முடியவில்லை.

  ReplyDelete
 14. //Premkumar Masilamani said...

  awesome basith... i am in tamilmanam already, let me join indli also... thanks for the valuable informations... you rock !!!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 15. //philosophy prabhakaran said... 8

  உங்கள் பதிவின் மூலம் மேலும் சில திரட்டிகள் பற்றி தெரிந்துக்கொண்டேன்...
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 16. //விக்கி உலகம் said...

  தகவல்களுக்கு நன்றி நண்பரே
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே..!

  ReplyDelete
 17. //இரவு வானம் said...

  தட்ஸ்தமிழ் திரட்டி பற்றி தெரியாமல் இருந்தது, உங்கள் தளத்தை படிதத பிறகுதான் தெரிந்து கொண்டேன், இனிமேல் இணைக்கிரேன், தகவல் தெரிவித்ததுக்கு நன்றி
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே..!

  ReplyDelete
 18. //சரவணன்.D said...

  நன்றி நண்பா!!!
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 19. //ragavjanu said...

  தகவல்களுக்கு நன்றி நண்பரே
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே..!

  ReplyDelete
 20. புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைக்கலாம்.

  ReplyDelete
 21. அருமையான தகவல் நண்பரே
  நன்றி
  http://dilleepworld.blogspot.com

  ReplyDelete
 22. மிகவும் பயனுள்ள தொடர்..நன்றி.

  --செங்கோவி

  ReplyDelete
 23. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  நல்ல தகவல்கள் நன்றி
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 24. டிலீப் said... 23

  அருமையான தகவல் நண்பரே
  நன்றி
  http://dilleepworld.blogspot.com

  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 25. //செங்கோவி said... 24

  மிகவும் பயனுள்ள தொடர்..நன்றி.

  --செங்கோவி
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 26. உபயோகமான தகவல். நன்றி நண்பரே! நானும் உங்கள் பதிவை கண்டபின்பே One India tamilலில் இணைத்தேன். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 27. timesjob super pls don't remove this....

  ReplyDelete
 28. //சாதாரணமானவள் said...

  உபயோகமான தகவல். நன்றி நண்பரே! நானும் உங்கள் பதிவை கண்டபின்பே One India tamilலில் இணைத்தேன். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி!

  ReplyDelete
 29. //சரவணன்.D said...

  timesjob super pls don't remove this....
  //

  நண்பா, அது என் கையில் இல்லை.. அந்த விளம்பரம் தானியங்கியாக செயல்படுவதால் மாற வாய்ப்பிருக்கிறது.

  ReplyDelete
 30. புதிய திரட்டி
  http://tamilblogs.corank.com/

  ReplyDelete
 31. வலைச்சரம் என்றொரு திரட்டியையும் பார்த்தேன்.... www.valaicharam.com

  தமிழில் உள்ள அனைத்து திரட்டிகளையும் காண இதைப் பாருங்க!!! tamiltim.es/aggregators

  ReplyDelete
 32. //tamil said... 32

  புதிய திரட்டி
  http://tamilblogs.corank.com/
  //

  //இக்பால் செல்வன் said... 33

  வலைச்சரம் என்றொரு திரட்டியையும் பார்த்தேன்.... www.valaicharam.com

  தமிழில் உள்ள அனைத்து திரட்டிகளையும் காண இதைப் பாருங்க!!! tamiltim.es/aggregators//

  பார்க்கிறேன்.. தகவலுக்கு நன்றி, நண்பர்களே!

  ReplyDelete
 33. தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 34. //யோவ் said...

  தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
  //

  தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி, நண்பா!

  நீங்கள் சொல்லிய பிறகு தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 35. you are doing a great job, all info are useful.
  keep it up. Thank You.

  ReplyDelete
 36. மிக்க நன்றி தலைவா...
  பயனுள்ள பதிவு

  ReplyDelete
 37. @செல்வன்
  @mani

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி, நண்பர்களே!

  ReplyDelete
 38. தகவலுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 39. //நேசமுடன் ஹாசிம் said...

  தகவலுக்கு நன்றி நண்பரே
  //

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 40. thanks for ur information.i also paste any one voter box.

  ReplyDelete
 41. வணக்கம்,
  உங்கள் பதிவுகள் அனைத்துமே வலைபதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்று புதிதாய் வருவோற்கு மிக மிக மிக பயனுள்ள தகவல்கள் உங்கள் தளத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் ஒரு தகவல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.அதாவது நம்முடைய வலைப்பதிவுகளை வலைப்பூக்கள் ,தமிழ்நிருபர் போன்ற திரட்டிகளில் இணைக்கும் வழிமுறைகளை விவரித்தால் மகிழ்ச்சி அடைவேன். நான் இணைக்க முயற்சி செய்தேன் என்னால் சரிவர செயல்பட முடியவில்லை.இணைக்கும் போது பல காளங்கள் வருகின்றன அவற்றை எவ்வாறு நிரப்புவது என்றும் தெரியவில்லை.குறிப்பாக trackback என்றொரு காளம் இருக்கிறது அது எதெற்கென்றே தெரியவில்லை.உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் கொஞ்சம் விவரித்து சொல்லுங்களேன்.
  ilavarasan.tn@gmail.com

  ReplyDelete
 42. //'ஒருவனின்' அடிமை said... 42

  தகவலுக்கு நன்றி brother//

  நன்றி சகோ.!

  ReplyDelete
 43. //umaiyer said... 43

  thanks for ur information.i also paste any one voter box.
  //

  Welcome Friend!

  ReplyDelete
 44. //ilavarasan said... 44

  வணக்கம்,
  உங்கள் பதிவுகள் அனைத்துமே வலைபதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்று புதிதாய் வருவோற்கு மிக மிக மிக பயனுள்ள தகவல்கள் உங்கள் தளத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் ஒரு தகவல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.அதாவது நம்முடைய வலைப்பதிவுகளை வலைப்பூக்கள் ,தமிழ்நிருபர் போன்ற திரட்டிகளில் இணைக்கும் வழிமுறைகளை விவரித்தால் மகிழ்ச்சி அடைவேன். நான் இணைக்க முயற்சி செய்தேன் என்னால் சரிவர செயல்பட முடியவில்லை.இணைக்கும் போது பல காளங்கள் வருகின்றன அவற்றை எவ்வாறு நிரப்புவது என்றும் தெரியவில்லை.குறிப்பாக trackback என்றொரு காளம் இருக்கிறது அது எதெற்கென்றே தெரியவில்லை.உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் கொஞ்சம் விவரித்து சொல்லுங்களேன்.//

  நன்றி நண்பா! தங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

  ReplyDelete
 45. http://thatstamil.oneindia.in/bookmarks

  இணைக்கமுடியவில்லை.

  ReplyDelete
 46. உங்கள் பதிவின் மூலம் பல திரட்டிகளைப் பற்றி தெரிந்து கொண்டேன்...
  நன்றி

  பி.கு:
  * தமிழ்மணம் எனது இடுகையைத் திரட்டியது (இலவச திரட்டல்) என காட்டினாலும், எனது இடுகை பட்டியலில் வருவதில்லையே!!
  * உலவு திரட்டியில் பல முறை முயன்றும் பதிவை இணைக்க முடிவதில்லை..

  வழி இருந்தால் சொல்லுங்கள்!

  ReplyDelete
 47. நண்பரே, வணக்கம்.

  பெயருக்கு ஏற்ற மாதிரி நீங்கள் பிளாக்கர் நண்பன் தான். ஆம், புதிதாக டெம்ப்ளேட்டை மாற்றிய எனக்கு தங்களின் பதிவின் உதவியால் மெருகு படுத்தியுள்ளேன்.தங்கள் வலைப்பதிவிற்கு இணைப்புக் கொடுத்துள்ளேன். நன்றி.

  அன்புடன்
  முனி பாரதி
  http://muneespakkam.blogspot.com/

  ReplyDelete
 48. நான் கண்ட இன்னும் சில திரட்டிகள்:

  யுடான்ஸ்: http://www.udanz.com/
  ஈகரை: http://eegarai.com/net/
  தமிழ் புக்மார்க்: http://tamilbookmark.co.cc/
  இனியதமிழ்: http://iniyatamil.striveblue.com/
  வலையகம்: http://valaiyakam.com/

  ReplyDelete
 49. குருடனுக்கு குச்சி கொடுத்தது மாதிரி இருக்கிறது உங்கள் முயற்சி, நன்றி நண்பரே
  idhayampesukiren .blogspot .com

  ReplyDelete
 50. தமிழ் 10, உலவு ஆகியவற்றில் இப்பொழுது புதிதாக வலைப்பூக்களை இணைக்க முடிவதில்லை. வாக்களிப்புப் பட்டை மட்டும்தான் வைத்துக்கொள்ள முடிகிறது. உங்கள் மேலான கவனத்துக்கு!

  ReplyDelete