வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி?

அலெக்ஸா என்பது Amazon.com-ஆல் நடத்தப்படும் தளமாகும். இதன் வேலையே இணையத்தளங்களின் (வலைப்பதிவுகள் உட்பட) மதிப்புகளை பட்டியலிடுவதாகும். அந்த மதிப்பு Alexa Rank எனப்படும்.
 


எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

அலெக்ஸாவின் மதிப்பு, கடந்த மூன்று மாதங்களில் உங்கள் தளத்திற்கு எத்தனை பேர் வருகை தந்துள்ளார்கள் (No. of visitors)? உங்கள் தளத்தின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது (No. of pageviews)? உங்கள் தளத்திற்கு வருபவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் தளத்தில் இருக்கிறார்கள்? என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. Alexa Rank-ல் குறைந்த எண்ணுக்கு அதிக மதிப்பு, பள்ளிக்கூடங்களில் நாம் வாங்கும் Rank போல..

நம் தளத்தின் தகவலை எப்படி பெறுகிறது?

Alexa ToolBar நிறுவியுள்ள உலவிகளின் மூலமாகவும், அலெக்ஸா Widget நிறுவியுள்ள தளங்களின் மூலமாகவும், இன்னும் சில தொழில்நுட்பங்களின் மூலமாகவும் நம்முடைய தளங்களின் தகவலை பெறுகிறது.
 

அலெக்ஸா widget-ஐ நம் தளங்களில் சேர்ப்பது எப்படி?
 

1. முதலில் http://www.alexa.com/siteowners/widgets தளத்திற்கு செல்லுங்கள்.


2. Alexa Site Stats Button என்ற இடத்தில் உங்கள் தள முகவரியை கொடுத்து, Build Widget என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
3. பிறகு வரும் பக்கத்தில் மூன்று விதமான widget-ம் அதற்கான Code-ம் வரும். உங்களுக்கு எந்த widget பிடித்திருக்கிறதோ அதனுடைய code-ஐ copy செய்துக் கொள்ளுங்கள்.4. பிறகு Blogger Dashboard => Design => Page Elements செல்லுங்கள்.

5. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, பிறகு வரும் window-ல் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

6. நீங்கள் Copy செய்து வைத்திருந்த Code-ஐ Paste செய்து, Save பட்டனை க்ளிக் செய்யவும்.
 

அவ்வளவுதான்... இனி உங்கள் தளத்தில் Alexa Rank தகவல் தெரியும்.

Post a Comment

14 Comments

 1. நீங்கள் சொலியபடி செய்துவிட்டேன் மக்கள் வருவதற்கு வழி சொல்லுங்கள் .நன்றி

  ReplyDelete
 2. உபயோகமான தகவல் ...நன்றி நண்பா..!

  ReplyDelete
 3. இது மட்டுமல்... தொடர்ந்து பல உபயோகமான தகவல்களை கொடுத்து வருகிறீர்கள்... நன்றி...

  ReplyDelete
 4. @nidurali
  //மக்கள் வருவதற்கு வழி சொல்லுங்கள்//

  அதற்கு இரண்டு விஷயங்கள் அவசியம்.

  1. பதிவுகள்.
  ஆங்கிலத்தில் சொல்வார்கள், "Content is a king"
  உங்கள் பதிவுகள் மக்கள் ரசிக்கக் கூடியதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால், புதிய வாசகர்கள் மட்டுமல்லாமல் பழைய வாசகர்களும் தொடர்ந்து வருகை தருவார்கள்.

  2. விளம்பரம்
  உங்கள் பிளாக்கை விளம்பரப்படுத்துவதும் அவசியமானதாகும். அதற்கான வழிகளை பற்றித் தான் இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!

  ReplyDelete
 5. @சரவணன்.D
  @Praveen-Mani
  @philosophy prabhakaran
  @Assouma Belhaj

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி, நண்பர்களே...!

  ReplyDelete
 6. //அலெக்ஸா என்பது Amazon.com-ஆல் நடத்தப்படும் தளமாகும்.
  முதல் வரியிலேயே இதுவரைத் தெரியாத தகவலைத் தெரிந்து கொண்டேன். நன்றி

  ReplyDelete
 7. ithula namma siteai pathivu seyyanuma bhai? naan verumanee antha widgetai mattum paste senjirukken...??

  ReplyDelete
 8. @Rajkumar Ravi
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

  ReplyDelete
 9. //அன்னு said...

  ithula namma siteai pathivu seyyanuma bhai? naan verumanee antha widgetai mattum paste senjirukken...??
  //

  இல்லை சகோதரி! அந்த நமது தள முகவரியை மட்டும் கொடுத்தால் போதும்.

  ReplyDelete
 10. உபயோகமான தகவல்களுக்கு மிக்க நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!
  kalakumaran
  http://eniyavaikooral.blogspot.com

  ReplyDelete
 11. நல்ல தகவல்..
  இதைப் பின்பற்றி இணைத்து விட்டேன்!!

  ReplyDelete
 12. மிக்க நன்றி சகோ .சரியாக வந்துவிட்டது .

  ReplyDelete