வேண்டாம் விட்ஜியோ (widgeo Counter)

நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. இந்த வசதியை பல தளங்கள் தருகின்றன. அவற்றில் நான் அதிக வலைப்பதிவுகளில் கண்ட ஒன்று “விட்ஜியோ (Widgeo Counter)”.

ஆனால் Widgeo Counter-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் ஒரு விஷயத்தை பலர் தெரிந்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை.

எந்த தளத்தில் Widgeo Counter நிறுவப்பட்டுள்ளதோ, அந்த தளத்தை படிக்கும் பொழுது எதையாவது க்ளிக் செய்தால் திடீரென்று ஒரு Pop-Up window வந்துவிடுகிறது. அதில் விளம்பரம் வருகிறது.


அப்படி வரும் விளம்பரத்தால் படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படலாம். அதனால் விட்ஜியோ அல்லாத வேறு Stats Counter-ஐ பயன்படுத்துவது நன்று.

சில மாற்று Stats Counter-கள்:

இது என்னுடைய எண்ணம் தான். இது பற்றிய உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யலாம்...

Update: பல தமிழ் தளங்களில் இது இருப்பதால் மீள்பதிவு செய்துள்ளேன்.

Post a Comment

26 Comments

  1. i thing, google analytics better than everything.. www.google.com/analytics

    ReplyDelete
  2. Google analytics counter blogla podura mathiri thantha nalla irukum.

    ReplyDelete
  3. @அஸ்பர்-இ-சீக்,
    ஆம், google analytics மற்றதைவிட முக்கியமானது. சேர்க்க மறந்துவிட்டேன். நினைவு படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  4. @Anonymous
    அடுத்ததாக அதை பற்றி பதிவிடுகிறேன், இறைவன் நாடினால்..

    ReplyDelete
  5. இணைய தள ஜாம்பவானின் பயனுள்ள சேவை இந்த google அனலிடிக்ஸ். மிகவும் சிறப்பானது

    ReplyDelete
  6. @கவிக்குயில்கள்

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே..!

    ReplyDelete
  7. நன்றி அண்ணா
    www.zeyaan.blogspot.com - ஈழத்தில் இருந்து ஒரு பதிவு.

    ReplyDelete
  8. // zeyaan said... 7

    நன்றி அண்ணா
    www.zeyaan.blogspot.com - ஈழத்தில் இருந்து ஒரு பதிவு.
    //

    நன்றி சகோ.!

    ReplyDelete
  9. நம் ப்ளகில் பெவிகோன் (fevicon) ஐ கொண்டு வருவது எப்படி நண்பரே.

    ReplyDelete
  10. //sharf said... 9

    நம் ப்ளகில் பெவிகோன் (fevicon) ஐ கொண்டு வருவது எப்படி நண்பரே.//

    இதனை பாருங்கள் நண்பரே!

    http://bloggernanban.blogspot.com/2011/06/favicon.html

    ReplyDelete
  11. Pls Tell me a Best "Flash Banner" Site For My Blog

    ReplyDelete
  12. ஆம்! விட்ஜியோ வைத்துள்ள தளங்களில் இந்த விளம்பரத் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. என் தளத்தில் ஹிட்சாட்ஸ் இணைக்க முடியவில்லை! பயனுள்ள பதிவு! நன்றி!

    ReplyDelete
  13. நான் என் தளத்தில் கூகிளின் விட்ஜெட்டினை தான் பயன்படுத்துகின்றேன். ஆனாலும் http://feedjit.com குறித்து சொல்லுங்களேன்.

    அது போல திருக்குறள் (விளக்க உரையுடன்) விட்ஜெட் கிடைக்குமா?

    ReplyDelete
  14. நல்ல பதிவு சகோ. நிறைய பேர் இதைப் பற்றி தெரியாமல் தான் வைத்து உள்ளனர்.

    ReplyDelete
  15. பயனுள்ள தகவல் என்னை பொறுத்தவரை எந்த விட்ஜியோ counter களும் தேவையில்லாதது என்று நினைக்கிறன்

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி.. ப்ளாக்கரில் உள்ள புள்ளிவிவரங்ளே போதுமானது.

      Delete
  16. ஆமா பாஸ் இந்த Stats Counter சொல்லுற.. புள்ளி விபரங்களை வச்சி என்னா பண்ணுவாங்க .? எனக்கு உண்மையிலேயே தெரியலை பாஸ் அதான் கேக்குறேன் :D

    ReplyDelete
  17. தகவலுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  18. payanulla pathivu.nandri nanbarea...

    ReplyDelete
  19. நல்ல பதிவு நண்பா...

    ReplyDelete
  20. how to show google ads in tamil sites like yours???
    please help me brother...

    ReplyDelete