12-12-12 ஸ்பெஷல் பிட்.. பைட்… மெகாபைட்….!

நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் 12-12-12 தேதியான இன்று, 12 பகுதிகளைக் கடந்து 13-ஆவது பிட்…பைட்…மெகாபைட்…! பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த சிறப்பு பகுதியில் கடந்த வாரம் இணையத்தில் நடந்தவைகளை மேலோட்டமாக பார்ப்போம்.

ட்விட்டரை கைவிட்ட இன்ஸ்டாகிராம்:

பேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட Instagram மொபைல் அப்ளிகேசன் ட்விட்டருக்கு வழங்கி வந்த ஆதரவை நீக்கிக் கொண்டது. முன்பு இன்ஸ்டாகிராம் மென்பொருளில் இருந்து ட்விட்டருக்கு புகைப்படங்களை பகிர்ந்தால் ட்விட்டர் தளத்திலேயே படங்கள் தெரிந்தது. இது போல படங்கள், வீடியோக்கள் ட்விட்டர் தளத்திலேயே பார்ப்பதற்கு Twitter Cards என்று பெயர். இனி Instagram படங்கள் அப்படி தெரியாது, மாறாக அந்த புகைப்படங்களைப் பார்க்க Instagram தளத்திற்கான இணைப்பை பகிர்கிறது. இன்ஸ்டாகிராம் படங்களை இணையத்தில் பார்க்கும் வசதியை சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் பதிலடி:

என் மொபைலில் இருந்து..

 Instagram அப்ளிகேசனுக்கு போட்டியாக ட்விட்டர் தனது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் அப்ளிகேசன்களில் Photo Filters என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புகைப்படங்களைப் பகிரும் போதே இன்ஸ்டாகிராம் போன்று வண்ணங்கள் கொடுத்து அழகுப்படுத்தும் வசதியாகும்.


ட்விட்டருக்கு கை கொடுத்த Pinterest:

Pinterest என்பது புகைப்படங்களை பகிர்வதற்கான சமூக இணையதளமாகும். Twitter Card-லிருந்து இன்ஸ்டாக்ராம் வெளியேறிய அதே நேரத்தில் பின்டெரெஸ்ட் தளம் Twitter Card வசதியில் இணைந்துள்ளது. இனி பின்டெரெஸ்ட் படங்களை ட்விட்டரில் பகிரும் போது அங்கேயே அந்த படங்களைப் பார்க்கலாம்.

கூகுளின் Snapseed அப்ளிகேசன் – Follow-up:

புகைப்படங்களை அழகாக்க உதவும் Instagram மென்பொருளை பேஸ்புக் வாங்கியது பற்றி தெரியும். அதற்கு போட்டியான Snapseed என்னும் அப்ளிகேஷனை உருவாக்கிய NIK Software நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளது. இதன் மூலம் Snapseed அப்ளிகேஷனை மேலும் மெருகூட்டி கூகிள் அறிமுகப்படுத்தும் என நம்பலாம்.

மேலே உள்ள பத்தி கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி பிட்.. பைட்… மெகாபைட்….! பகுதியில் எழுதியது. முன்பு சொன்னது போலவே கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் அளவுக்கெல்லாம் இல்லை. பயன்படுத்திய சில மணி நேரங்களிலேயே நீக்கிவிட்டேன்.

அமெரிக்காவில் அன்பளிப்பு:

பேஸ்புக் நிறுவனம் தனது Facebook Gifts என்னும் அன்பளிப்பு வசதியை ஐக்கிய அமெரிக்காவில் (United States) உள்ள அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் மற்ற நாடுகளுக்கும் கொண்டு வரலாம்.

யாஹூவின் புதிய (உத்)வேகம்:

யாஹூவின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸ்ஸா மேயர் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறார் என்பதை நாம் முன்பு பார்த்தோம். தற்போது யாஹூ மெயிலின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளனர். முன்பு யாஹூவின் மெயில் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும், இப்போது கொஞ்சம் வேகமாக இருக்கிறது.


ஜனவரியில் Samsung Galaxy S4?

இதையும் படிங்க:  பிட்.. பைட்... மெகாபைட்....! (23/01/2013)

சாம்சங் நிறுவனத்தின் முதன்மை (Flagship) மொபைலான Samsung Galaxy S3 கடந்த மே மாதம் அறிமுகமானது. மெகா ஹிட்டான அந்த மொபைல் அறிமுகமாகி ஏழெட்டு மாதங்களே ஆன நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகளாவிய Consumer Electronics Association (CES) நிகழ்ச்சியில் அடுத்த மொபைலாக Galaxy S4 மொபைலை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெள்ளித்திரையில் ஆங்க்ரி பேர்ட்ஸ் (Angry Birds):

பிரபல விளையாட்டான ஆங்க்ரி பேர்ட்ஸ் வெளிவந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு நேற்று 30 புதிய லெவெல்களை அறிவித்துள்ளது. மேலும் 2016-ஆம் ஆண்டு ஆங்க்ரி பேர்ட்ஸ் அனிமேசன் படமாகவும் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கூகுள் நடத்தும் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா:

கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்களுடன் சேர்ந்து இன்று ஒரு நாள் மட்டும் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா நடத்துகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்குகின்றன.

மேலும் விபரங்களுக்கு: www.gosf.in/

வாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):

Log out!

6 thoughts on “12-12-12 ஸ்பெஷல் பிட்.. பைட்… மெகாபைட்….!”