ஹேப்பி பர்த்டே கூகுள்!

கூகுள் – இணையத்தில் இதன் ராஜாங்கம் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் இன்று தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

1996-ஆம் ஆண்டு லார்ரி பேஜ் (Larry Page), செர்ஜெரி ப்ரின் (Sergery Brin) ஆகிய இரண்டு பல்கலைகழக மாணவர்களால் ஆராய்ச்சி திட்டமாக தொடங்கப்பட்டது தான் கூகுள். www.google.com என்னும் முகவரி 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் பதினைந்தாம் தேதி பதிவு செய்யப்பட்டது. ஆனால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி தான் நிறுவனமாக உருவானது.

செப்டம்பர் நான்காம் தேதி தொடங்கப்பட்டாலும் செப்டம்பர் 27-ஆம் தேதியை தனது பிறந்தநாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, இன்று கூகுளின் பதினைந்தாவது பிறந்தநாள்!

எங்கே எல்லாரும் சொல்லுங்கள் பார்ப்போம்?

ஹேப்பி பர்த்டே கூகுள்!

வீடியோ: கூகுளின் இந்த வருட பிறந்தநாளையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள டூடுல்!

இதையும் படிங்க:  கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக

4 thoughts on “ஹேப்பி பர்த்டே கூகுள்!”