வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்

தமிழ் பதிவுலகில் அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெறும். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது மோசமான நிலையை அடைந்திருக்கிறது. அது போலி ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் வைரஸ் உள்ள சுட்டியை பகிர்வது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

சமீபத்தில் நண்பர் சதீஷ் செல்லத்துரை அவர்களின் மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள் என்ற பதிவில் வருன் என்ற (போலி) பெயரில் ஒருவன் பின்னூட்டம் இட்டிருந்தான். அந்த பின்னூட்டத்தில் அவனது பெயரை கிளிக் செய்தால் http://tiny.cc/ibJUN என்ற முகவரிக்கு சென்று, பிறகு வேறொரு முகவரிக்கு செல்லும்.

இந்த முகவரியை கூகிளில் தேடிய போது இது பற்றிய தகவல்கள் கிடைத்தது. இது “exploit” என்னும் ஜாவா ஸ்க்ரிப்ட் நிரலியாகும். இதன் மூலம் எண்ணற்ற Email Windows திறந்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் உங்கள் கணினியின் RAM நிறைந்து ஹேங் (Hang) ஆகிவிடும்.

அப்படி ஏற்பட்டால் நீங்கள் உடனே கணினியை Restart செய்ய வேண்டும். பிறகு CCleaner மென்பொருளை பயன்படுத்தி கணினியை சுத்தப்படுத்துங்கள்.

இந்த வைரஸ் முகவரியை பரப்பும் சிலர் போலி ஐடிக்களை உருவாக்கி பரப்புகின்றனர். உதாரணத்திற்கு ஒன்று கீழே,

உம்மத் என்ற பெயரில் இருப்பது போலி ப்ரொபைல். அந்த பின்னூட்டத்தில் “மனித கேடயமாகும் காஷ்மீர் இளைஞர்கள்” என்ற பெயரில் ஒரு சுட்டி இருக்கிறது. ஆனால் உண்மையில் அது நண்பர் சதீஷ் செல்லத்துரை அவர்களின் பதிவிற்கான சுட்டி இல்லை. இடதுபுறம் பாருங்கள். அது அந்த வைரஸ் உள்ள முகவரி.

எப்போதும் சுட்டிகளை கிளிக் செய்வதற்கு முன் அதன் மீது கர்சரை நகர்த்துங்கள். இடதுபுறம் கீழே அந்த சுட்டியின் உண்மையான முகவரி காட்டும். அதை பார்த்த பிறகு கிளிக் செய்யுங்கள்.

இது இந்த ஒரு தளத்தில் மட்டுமல்ல, நேற்றிலிருந்து வேறு சில தளங்களிலும் இதே போல் பரப்புகிறார்கள். உங்கள் பதிவுகளில் இது போன்ற பின்னூட்டங்கள் வந்தால் நீக்கிவிடவும்.

வாசகர்கள் இது போன்ற ஏமாற்று வேலைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும். கடைசியாக ஒன்று,

“போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்”
டிஸ்கி: இந்த வைரஸ் முகவரி தற்போது சில தமிழ் பதிவர்கள் பரப்பினாலும், இதனை வேறு யாரோ எப்போதோ உருவாக்கியுள்ளார்கள். இந்த வைரஸ் முகவரியைப் பற்றி நேற்று tiny.cc தளத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது அந்த முகவரியை செயல்நீக்கம் செய்துவிட்டார்கள். ஆனால் வேறு முகவரியில் இந்த வைரசை பரப்ப வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.

நீக்கப்பட்ட முகவரி: http://tiny.cc/traffic/ibJUN

58 thoughts on “வைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள்”

 1. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு…

  /// இந்த வைரஸ் முகவரியைப் பற்றி நேற்று tiny.cc தளத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது அந்த முகவரியை செயல்நீக்கம் செய்துவிட்டார்கள். ///

  நல்ல ஒரு செயலை செய்தீர்கள்… நன்றி… நன்றி…

 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  ஹி ஹி ஹி..உம்மத் என்ற பெயரில் லோகோ எல்லாம் உருவாக்கி, நிறைய ஹார்ட்வொர்க் செய்து "வணக்கம் சகோ"-ன்னு ஆரம்பித்து இருக்காங்க பாருங்க, அங்கே நிக்குறாங்க அந்த காமெடி பீஸ்கள். இதுக்கு பேருதான் "போட்டு வாங்கிக்கிறதோ"… 🙂 🙂

  சரியான நேரத்தில் வந்த பதிவு. நன்றி தம்பி

  போலி ப்ரோபைல், வைரஸ் லிங்க் இதெல்லாம் உருவாக்குற வேலை வெட்டி இல்லாத ஆட்கள பாக்கனும்னு ஆவலா இருக்கு. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த வேலை செயுரவங்களால அவங்க எண்ணம் நிறைவேறவே போறதில்லை. மேலும் மேலும் படுகுழில தான் விழனும்.

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

 3. குறிப்பிட்ட பதிவில் தங்களின் எச்சரிக்கை பின்னூட்டம் பார்த்தேன்! அப்போதே உசாராகிவிட்டேன்!

  இன்று சதீஷ் செல்லத்துரை தளத்தை திறந்தாலே என் கணினி தறிகெட்டு ஓடுவதை போல் உணர்கிறேன் (பிரம்மையா என்று தெரியவில்லை)

  எச்சரிக்கை செய்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் அதன் மீதான தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை அதாவது tiny.cc தளத்தில் புகார் அளித்து அந்த இணைப்பை நீக்கும்படி செய்தது பாராட்டத்தக்கது!

 4. பின்னூட்டங்களால் பதில் சொல்ல முடியாத கோழைகளின் செயல் இது. எனது இன்றைய பதிவிலும் சகோதரர் குலாமுடைய பெயரில் இதே முறையில் ஒரு பின்னூட்டத்தை அனுப்பியுள்ளான். அதனை நீக்கி விட்டேன்.

  வாழ்நாள் முழுக்க தவறிலேயே காலத்தை ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. அவர்களை பார்த்து எனக்கு பரிதாபம்தான் ஏற்படுகிறது.

 5. கருத்துச்சண்டைங்கிறது வேற, இதுபோல் விஷத்தன்மை உள்ள பின்னூட்டங்கள் போடுவது என்பது மன்னிக்கமுடியாத குற்றம்! இவர் ஒரு தமிழராயிருந்தால் நாம் அனைவருமே தலைகுனியனும் இவர் செய்கைக்காக!

 6. மிக மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு..
  இச் செயலை செய்தவர்கள் யாராக இருப்பினும்
  மிகவும் கண்டிக்கப்படவேண்டியவர்கள்….
  அவர்களை ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்..
  " பிகடி பாப்கி அவுலாத் "

 7. நல்லவேள ஆர்வகோளாறுல நான் எந்த லிங்கும், ப்ரோபைலும் க்ளிக் பண்ணாம விட்டேன் (மெயில் அனுப்பி எச்சரிக்கை செய்த வாஞ்சூர் அப்பாக்கு நன்றி)

  இல்லைன்னா நிச்சயம் லிங்க் ல என்ன இருக்குன்னு ஓபன் பண்ணி, என் லேப்டாப் மக்கராகி……அய்யகோ 🙂 நெனச்சு கூட பாக்க முடியல..

  நானே ஒத்த லேப்டாப் வச்ச்சு ஓட்டிட்டிருக்கேன் 🙂

  பகிர்வுக்கு நன்றி தம்பி!

 8. இது வைரஸாக இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கின்றேன்…Dos சில கோடிங்க அடிச்சு விளையாடுவாங்க…அந்த ஹைதர்அலி கால டெக்னிக் நம்ம சிஸ்டத்தில் இருக்கும் அனைத்து சாப்ட்வேரையும் ஓப்பன் செய்து Ram அடைச்சிக்கும்….தட்ஸ் ஆல் இதுனால பெரிதா பாதிப்பு இல்லை சில கோடிங்ல பார்மட்டிங்கும் பண்ணலாம் அப்புறம் நாம் சேமித்து வைத்துள்ள பைல்களை இழக்க வேண்டியிருக்கும்!ஆகவே இந்த லின்க்கை டச் பண்ணாமல் இருப்பது நன்று…!

 9. நல்ல பதிவு,மிக நல்ல பகிர்வு அப்துல் பாஸித்.
  இது போன்ற எச்சரிக்கை பதிவுகளை அடிக்கடி கொடுங்கள்.
  பலருக்கு பயன்படும்.

 10. இதுக் குறித்து நானும் கேள்விப்பட்டேன் … நல்ல வேளை அவற்றை க்ளிக் செய்யவில்லை… தப்பித்தேன் !

  கூடுமானவரை பதிவர்கள் மட்டறுத்தல் செய்யலாம், அல்லது அனானிகள் கருத்திடுவதை தடை செய்யலாம் …

  உங்களின் இப்பதிவுக்கு எனதுப் பாராட்டுக்கள் சகோ…

 11. இந்த போலி ஐ.டி. கலாச்சாரம் எப்ப ஒழியப் போகுதோ தெரியல?!!! அருமையான விழிப்புணர்வு பகிர்வு. தங்களது சேவை பாராட்டத்தக்கது. தொடரவும் சகோ.

 12. தகவலுக்கு நன்றி!. இது போல் விஷமத்தனம் செய்கிறவர்களுக்கு இதனால்
  என்ன கிடைக்கிறது என்று தான் தெரியவில்லை.

 13. லட்சம் ஓட்டுக்கள் தலைவா…எனக்கே என் தளத்தை திறக்க இனி பயமா இருக்கும் போல….ஏன் இந்த கோழை வெறி?என்னை கொன்று விடலாம் ஆனால் ஜெயிக்க முடியாதுன்னு இன்றுதான் சேகுவேரா படத்துடன் முகநூலில் பார்த்தேன்.இங்கே சேகுவேரா இடத்தில் 'உண்மைகள் ' என்று பொருத்தி படித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்.

  ஆனாலும் அப்துல் பசித் சகோ உங்க கணினி அறிவுக்கும் எச்சரிக்கை பதிவிற்கும் மாபெரும் நன்றி சகோ.எந்த காலத்து டெக்னிக் என்றாலும் என்னை போல அறிவாளிகளுக்கு இது லேட்டஸ்ட் குண்டுதான்.உங்கள் எச்சரிக்கைகள் தொடரட்டும்.நன்றி சகோ.

 14. எலிகள் தோல்லை தாங்க முடியவில்லை ஒவ்வொரு நாட்டிலும் குந்திக்கிட்டு பிளேக் பாரப்பிக்கொண்டு இருக்கு… எலிகள் எப்படி ஓசிச்சாலும் ஃக்கரைக்ட்ட போரி வைச்சு பிடிச்சிறீங்களே… எலிகள் 10 மாதத்தில் 1 million குட்டி போடுமாம இப்போ புதுச போலி குட்டிபோட்டுகிட்டு இருக்கிறாது. இந்த போலி குட்டிகள் எப்பொழுது மாட்டும். போலிகள் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தகவலுக்கு நன்றி

 15. பேஸ்புக்கிலதான் பேக் ஐ.டி பிரச்சனைன்னா இங்கையுமா தொல்ல தாங்கலப்பா தகவலுக்கு நன்றி

 16. அடுத்தவரை கெடுப்பதில் தான் எத்தனை இன்பம்? இதற்கு தொழில்நுட்பம் ஓரு கேடா? விழிப்புணர்வுடன் கூடிய பதிவு !நன்றி

 17. ஸலாம்.

  நானும் அந்த வைரஸ் லிங்க் அ கிளிக் பண்ணேன் … ஒன்னும் ஆகலை என் லேப்டாப் RAM க்கு ..

  நம்ம லேப்டாப் ல வெள்ளை அணுக்கள் அதிகம் போல … ஓவர் ஆ வைரஸ் கூட சண்டை பிடிக்குது …

  ஆமாம் .. நீங்க கூட GOOGLE SHORTNER URL உஸ் பண்ண்றீங்கள …

  நீங்களும் ANTI வைரஸ் ஆ ??

 18. பதிவர்களே, வாசகர்களே,

  தாங்களுடைய கவனத்திற்கு

  "UNMAIKAL" பெயரில் அசல் "UNMAIKAL" அடையாளமான தங்க தராசு படத்தையும் காப்பி செய்து போட்டு

  ஆள்மாறாட்ட‌ம் செய்து

  தீய நோக்கத்துடன் "UNMAIKAL" பெயரில் போலியாக‌
  வ‌லைத்தள‌ங்க‌ளில் க‌ருத்துக்கள் பதிவு செய்ய ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் விஷ‌மிக‌ள்.
  ————————-
  அச‌ல் " "UNMAIKAL"

  IF YOU CLICK UNMAIKAL IN COMMENT

  THE PROFILE SHOULD APPEAR LIKE BELOW

  http://www.blogger.com/profile/14079258396999150015

  THIS IS TRUE UNMAIKAL BLOGGER ID.

  UNMAIKAL

  View Full Size

  On Blogger since October 2011

  Profile views – 526

  About me

  ——————–

  IF YOU CLICK "UNMAIKAL" IN COMMENT BY THE FORGERER

  THE PROFILE SHOULD APPEARING LIKE BELOW

  THIS IS FALSE / FORGERY UNMAIKAL. PROFILE.

  ஆள் மாறாட்ட‌ போலி “UNMAIKAL”

  http://www.blogger.com/profile/16399483917260181454

  Profile Not Available

  The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.

  If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.

  Help Centre | Terms of Service | Privacy | Content Policy | Developers

  Copyright © 1999 – 2012 Google

  =================================================

  அச‌ல் " "UNMAIKAL" BLOGGER ID:

  http://www.blogger.com/profile/14079258396999150015

  ==========================================

  ஆள் மாறாட்ட‌ போலி
  FORGED: “ UNMAIKAL “ BLOGGER ID:

  http://www.blogger.com/profile/16399483917260181454

 19. அஸ்ஸலாமு அலைக்கும்,
  அன்பின் தம்பி அப்துல் பாசித்
  வாஞ்சூர் அப்பா மெயில் வருவதற்கு முன்னாடியே அந்த வருண் வைரசை கிளிக் பண்ணிட்டு நான் பட்ட பாடு. அதற்கு பிறகு தம்பி அப்துல் பாசித் மூலம் தான் சிசிகிளினர் சிஸ்டம்ல போட்டு இப்போ தான் ஒழுங்கா இருக்கேன். ஆனால் வைரஸ் ஆட்டத்தை தொடங்கிட்டானுங்க போல இந்த முட்டாள்கள். எனவே எந்த ஒரு புரபைளையும் கிளிக் பண்ணாம இருக்குறது தான் நமக்கு நல்லது.

 20. வ அலைக்கும் ஸலாம்.

  தற்போது அந்த வைரஸ் லிங்க் செயல் நீக்கம் செய்யப்பட்டுவிட்டது.

  // நீங்க கூட GOOGLE SHORTNER URL உஸ் பண்ண்றீங்கள … //

  ஆம், சில முகவரிகளில் மட்டும். நண்பர் சீனுவுக்காக இது பற்றிய பதிவு எழுதி பாதியில் நிற்கிறது. அதற்குள் இந்த மோசடி நடைபெற ஆரம்பித்துள்ளது.

 21. இதில் தலைகுனிவதற்கு ஒன்றுமில்லை நண்பரே! ஒரு தனிப்பட்ட நபரின் குற்றச்செயலுக்கு ஒட்டுமொத்த இனமும் பொறுப்பாக முடியாது.

 22. என் கவனத்திற்கு வரும் மோசடிகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் நண்பரே! முயற்சிக்கிறேன்.

 23. பிளாக்கர் நண்பன் மேல் நமக்கு தனிப்பட்ட விதத்தில் மரியாதை வருவதற்கு காரணமே அவரது பகிர்தல் பண்புதான்.

  இன்றும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வலைத்தளத்தை அறிமுகம் செய்து வைக்கையில் பிளாக் துவங்குவது குறித்த, பிளாக்கர் நண்பனை தான் துணைக்கு வைத்துக்கொள்கிறோம்..

  தொடர்க தோழா,,,

  என்றும் இணைந்திருப்போம்… தமிழால் – இணையத்தால்,,,

 24. இது சாதரண விசயமுனு சொல்ல முடியாது..
  இப்படி பட்ட Program மூலம்.. நீங்கள் gmail, yahoo, etc.. login செய்திருக்கும் நிலையுள்ள, உங்கள் login session யை hijack செய்து, எதிரி உங்கள் Mail account யை access செய்யலாம்..!!

  ஆதலால் எந்த link click பன்னூனாலும், கவனமாக இருக்கவும்..!!

  -ஏதோ தெரிந்ததை சொன்னேன்..

  முதல்ல password ah change பன்னுங்க.. பாஸ்..!!

 25. பதிவு எழுத மசாலா கிடைக்காதவங்கள் பண்ற இம்சைதான் இது நண்பா. மசாலா வேண்டியவர்கள் http://www.googlesri.com/ பக்கம் வாருங்கள்.

 26. வணக்கம் சகோ ஒரு சின்ன சந்தேகம் .நான் google + இணைந்த பின்னர்
  இட்டு இதுவரைக்கும் நான் எந்த ஆக்கத்தை வெளியிட்டாலும் வெளியிட்ட
  அடுத்த கணமே online னில் germany 2 என்று காட்டுகின்றதே நட்ட நடுச்
  சாமம் என்றாலும் .ஏன் இவ்வாறு ?…பதில் தெரிந்தால் தயவு செய்து
  சொல்லுங்கள் சகோ .

 27. இப்போது வெளியிட்ட ஆக்கத்திலும் ஒரே நிகழ்வுதான் சகோ
  பார்க்க முடிகிறது .இது goole + இணைக்கும்போதுதான் ஜெர்மனி 2
  என்று online ல் காட்டுகிறது .

 28. ஆம் சகோ எனது ப்ளக்கில்தான் வேணும் என்றால் இலங்கை
  நேரம் சரியாக இரவு பத்து மணிக்கு ஆக்கம் ஒன்றினை
  வெளியிடுகின்றேன் முடிந்தால் நீங்களும் பாருங்கள் சகோ .