விண்டோஸ் 8 – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய இயங்குதளம். இது பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்… நினைத்தேன்… இன்னும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். சரி, விரிவாக எழுதுவதற்கு முன் சிறப்பு சலுகைபற்றி மட்டும் இப்போது பார்ப்போம்.
விண்டாஸ் 8 அறிமுகச் சலுகையாக, மற்ற விண்டோஸ் இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 8 Pro-விற்கு மாறுவதற்கு (Upgrade) 40 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். இது இணையத்தில் இருந்து விண்டோஸ் 8 நேரடியாக பதிவிறக்கம் செய்து மேம்படுத்துவதற்கு மட்டுமே!
Windows 8 இணையத்தில் வாங்க: http://windows.microsoft.com/hi-IN/windows/buy
மேலே சொன்ன முகவரிக்கு சென்றால் Windows Upgrade assistant என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்ய சொல்லும். டவுன்லோட் செய்து Run செய்தால், தற்போது உங்கள் கணினியில் உள்ள எந்தெந்த மென்பொருள்கள் விண்டோஸ் எட்டுக்கு மாறிய பின் வேலை செய்யும்/செய்யாது என்று சொல்லும். உங்களுக்கு சரி என்றால் ஆன்லைனிலேயே வாங்கி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மேலும் 2, ஜூன் 2012 – 31, ஜனவரி 2013 இடைவெளியில் நீங்கள் விண்டோஸ் 7 கணினி/லேப்டாப் வாங்கியிருந்தால் சிறப்பு சலுகையாக 15 அமெரிக்க டாலருக்கு (699 ரூபாய்) விண்டோஸ் எட்டை பெறலாம்.
இந்த சலுகையை பெற (விண்டோஸ் 8 பதிவிறக்கம் செய்வதற்கு முன்னால்) http://www.windowsupgradeoffer.com என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
மேலே சொன்ன அனைத்தும் கடந்த வருடமே எழுத நினைத்தேன், எழுத முடியவில்லை.
இப்போது செய்தி என்னவெனில், இந்த சலுகை வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பிப்ரவரி ஒன்னாம் தேதி முதல் இதன் விலை 200 அமெரிக்க டாலர்கள் ஆகும். விருப்பமுள்ளவர்கள் அதற்குள் வாங்கிவிடவும்.
விண்டோஸ் 8 பற்றிய மேலோட்ட காணொளி:
தகவலுக்கு நன்றி. ஒரிஜனல் வச்சிருக்குவங்க அப்கிரேட் பண்ணட்டும்
நானும் இந்த சலுகை பற்றிப் படித்தேன் ஆனால் ஒரிஜினல் வைத்திருப்பவர்களுக்கு என்பதால் அது குறித்து பெரிதாக யோசிக்கவில்லை. இப்போது வசதியாக மொழியாக்கம் செய்துள்ளீர்கள் எனவே என் முக நூலில் பகிர்கிறேன்
தகவலுக்கு மிக்க நன்றி.
பப, உங்கள் பிரச்சினைக்கு இன்னுமொரு விளக்கம். ஜனவரிக்கு அப்புறம் விலை 200 டாலர், அதாவது 10000 ரூபாய்க்கு மேல்.
வணக்கம் சகோ .பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி .எனது தளத்தின்
alexa rang no dada என்று மாறியுள்ளதன் காரணத்தை அறிய எனக்கொரு
வழி சொல்வீர்களா ?……..(இந்த மாற்றம் இடையில்தான் ஏற்ப்பட்டது )
தகவலுக்கு மிக்க நன்றி.
சரியாக காட்டுகிறது சகோ.!
http://www.alexa.com/siteinfo/http://rupika-rupika.blogspot.com
rank சரியாகக் காட்டப் படுகிறது .ஆனால் இதனுடைய widget தான் இப்போதும் என் தளத்தில் இணைத்து உள்ளேன் no data என்று வருகிறதே சகோ !..அது எதனால் ?….என் தளத்தில் உள்ளதைப் பாருங்கள் .
முகவரி தவறாக உள்ளது. rupika-rupika என்பதற்கு பதிலாக rupika-rupika என்று சேர்த்துள்ளீர்கள். அதனை மாற்றினால் சரியாக தெரியும்.
Thank u friend
நன்றிங்க……
பயனுள்ள தகவல் . நன்றி