வாங்க ஒலிம்பிக்கில் ஓடலாம்!

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதனை முன்னிட்டி கூகிளில் நாள்தோறும் ஒவ்வொரு விளையாட்டைக் குறிக்கும் வகையில் DOODLE வெளியிட்டு வருகிறார்கள். இன்று Google Doodle-ல் தடகளப் போட்டிக்கான (Hurdle) Doodle இடம்பெற்றுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை நாம் விளையாடும் வகையில் உருவாக்கியுள்ளார்கள்.

Google Doodle-ல் உள்ள Play Button-ஐ அழுத்தினால் அதில் இருக்கும் வீரர் (நீங்க தாங்க!) ஓடத் தொடங்குவார். கீபோர்டில் உள்ள Left Arrow மற்றும் Right Arrow-க்களை வேகமாக மாறி, மாறி அழுத்திக் கொண்டிருந்தால் அந்த வீரர் வேகமாக ஓடுவார். தடைகள் (Hurdle) வரும் போது Space Bar கீயை அழுத்தினால் Jump செய்வார். உயரமாக Jump செய்வதற்கு நன்றாக அழுத்த வேண்டும்.

விளையாடி முடித்ததும் உங்களுடைய ஸ்கோர் காட்டும். பிறகு நீங்கள் மறுபடியும் விளையாடலாம் அல்லது அந்த ஸ்கோரை நண்பர்களுடன் கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்ந்துக் கொள்ளலாம்.

இந்த விளையாட்டின் வீடியோ:

இதையும் படிங்க:  இஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று

9 thoughts on “வாங்க ஒலிம்பிக்கில் ஓடலாம்!”

  1. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்…..

    ஆகஸ்ட் – 26-ல் சென்னை மாநகரில்…..

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்…..

    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215

  2. நண்பா நான் ஓரு உண்மையை கண்டு புடிச்சு விட்டேன் இந்த பதவில் ஆனா

    சொல்லமாட்டேன் நல்ல இருக்கு இந்த பதிவு