வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?

நம்மில் பலர் நம்முடைய வலைப்பதிவுகளின் முதல் பக்கத்தில் (Home Page) ஐந்து அல்லது பத்திற்கு மேற்பட்ட பதிவுகளை கொண்டுவர நினைப்போம். ஆனால் அப்படி செய்தால் முதல் பக்கத்தின் நீளம் அதிகமாகிவிடும். அதை குறைக்க உதவுவது தான்  Read More Option. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நம்முடைய ஒவ்வொரு பதிவுகளை முதல் பக்கத்தில் முழுவதும் பிரசுரிக்காமல், சில பத்திகளை மட்டும் பிரசுரித்து, முழுவதும் படிக்க அந்த பதிவை க்ளிக் செய்தால் முழு பதிவையும் படிக்குமாறு வைக்க உதவுகிறது Read More Option.
புதிய பதிவுகளை எழுதும் பக்கத்தில் சென்று பதிவுகளை எழுதி முடித்திடுங்கள். எழுதி முடித்த பின் எந்த பகுதி வரை முதல் பக்கத்தில் தெரிய வேண்டுமோ அந்த இடத்தில் Cursor-ஐ வைத்து, மேலே இருக்கும் பட்டன்களில் Jumb Break என்ற பட்டனை அழுத்துங்கள். உடனே ஒரு கோடு நீங்கள் Cursor-ஐ வைத்த இடத்தில் தெரியும். பிறகு Publish Post என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு  தான்.. இனி உங்கள் வலைப்பதிவுகளின் முதல் பக்கத்தின் நீளம் அதிகமாகாமல் அதிக பதிவுகளை தெரிய வைக்கலாம்.
வேர்ட்ப்ரஸ் தளத்தில் Jumb Break என்ற பட்டனுக்கு பதிலாக More என்ற பட்டன் இருக்கும்…
ஆனால் ப்ளாக்கரில் Automatic Read More  உள்ள டெம்ப்ளேட்டை பயன்படுத்துபவர்களுக்கு பக்கங்கள் (Pages)  உருவாக்குவதில் பிரச்சனை ஏற்படும். அதை எப்படி சரிசெய்வது என்று அடுத்த பதிவில் காண்போம், இறைவன் நாடினால்…
இதையும் படிங்க:  ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

20 thoughts on “வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?”

 1. @மதுரை சரவணன்

  ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க பாஸ்.. நாளை மறுநாள் பதிவிடுகிறேன், இறைவன் நாடினால்..

  இப்ப எனக்கு நல்லா தூக்கம் வருது..

 2. //
  Lakshmi said…

  என் ந்யூ போஸ்ட் பக்கத்தில் ஜம்ப் ப்ரேக் என்ற பட்டனே இல்லியே??? இப்ப நா எப்படி ரீட் மோர்
  பட்டன் கொண்டு வரமுடியும்.
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி!

  நீங்கள் compose mode-ல் வைத்து தானே எழுதுகிறீர்கள்? ஏனெனில் Edit html mode-ல் வைத்து எழுதும் போது jump break option வராது.

 3. விளக்கத்துக்கு நன்றி. நான் அதை கவனிக்கலியே.
  இனிமேல கம்போஸ்மோட்லவா, எடிட் மோட்லவான்னு கவனிச்சுட்டு ஜம்ப் ப்ரேக் பட்டன் வரதான்னு செக்பண்ரேன். மீண்டும் நன்றிகள்.

 4. //Lakshmi said…

  நண்பா , கம்போஸ்மோடில் வைத்துஎழ்தும்போதும் ஜம்ப் ப்ரேக் பட்டன் வரமாட்டேங்குதே. என்ன செய்யனும்.
  //

  சகோதரி,

  நீங்கள் http://www.blogger.com முகவரியை பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். சரி என்றால் dashboard=> settings=> basic பக்கத்திற்கு சென்று, அங்கு Select post editor என்ற இடத்தில் Updated editor (Recommended) என்பதை தேர்வு செய்யவும்.

  இல்லை என்றால் http://www.blogger.com என்ற முகவரிக்கு பதிலாக draft.blogger.com என்ற முகவரியை பயன்படுத்தலாம்.

 5. //mathivanan said…

  Read more option இடப்புறம் ஓரமாக வருகிறது. வலதுபுறம் வர என்ன செய்ய வேண்டும் நண்பரே! எனது http://oorulagam.blogspot -க்கு வருகை தரவும்.
  //

  இந்த பதிவை பாருங்கள், நண்பரே!
  http://bloggernanban.blogspot.com/2010/11/read-more-button.html

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே!

 6. //cool said…

  நண்பா…
  முன்பே இட்ட பதிவுகளை ‘Read More’ கொண்டு வருவது எப்படி.
  //

  நண்பா! Blogger Dashboard => Edit Posts பக்கத்திற்கு சென்றால், அங்கு இதுவரை நீங்கள் பதிவிட்ட பதிவுகள் இருக்கும். எந்த பதிவிற்கு நீங்கள் Read More கொடுக்க விரும்புகிறீர்களோ, அதனை க்ளிக் செய்து, பதிவில் சொன்ன வாறு Read More கொடுங்கள். பிறகு Publish என்பதை க்ளிக் செய்யுங்கள்.

 7. இப்படி ஒரு தகவலை ரொம்ப நாளாக தேடிட்டு இருந்தேன்.நன்றி தலைவா