வந்துவிட்டது கூகிள் ப்ளஸ் Share பட்டன்

கூகிள் ப்ளஸ் வந்தவுடன் பதிவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு,  “பேஸ்புக் பட்டன், ட்விட்டர் பட்டன்”  போன்று கூகிள் ப்ளஸ்ஸில் பதிவுகளை பகிரும் வசதி என்று வரும்? என்பது தான். தற்போது அந்த வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளஸ் ஒன் பட்டனே ஷேர் பட்டனாகவும் வேலை செய்கிறது. இதன் மூலம் நாமும், நமது நண்பர்களும் கூகிள் ப்ளஸ்ஸில் நமது பதிவுகளை எளிதாக பகிரலாம்.

மேலும் நாம் படிக்கும் பதிவை நமது நண்பர்கள் பகிர்ந்திருந்தால் அவர்களின் புகைப்படங்களும் காட்டும். ஆனால் இந்த வசதி சில நபருக்கு மட்டும் தான் என நினைக்கிறேன். எனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை.

“அடுத்த பதிவு ரெடி” என்று அந்த பக்கத்திற்கு போனால், ஒரே குழப்பம். கூகிள், மைக்ரோசாஃப்ட், யாஹூ இவையெல்லாம் இணைந்து ஏதோ Schema.org என்று ஏதோ கொண்டுவந்திருக்கிறதாம். அதன் நிரலையும் சேர்க்க வேண்டும் என சொன்னது. அதை பற்றி தெரிந்துக் கொள்ளப்போனால் இன்னும் குழப்பம். அப்புறம் ஒருவழியாக அந்த Code-ஐ வேறு மாதிரியாக கொடுக்கலாம் என்று, அந்த Code-ஐ மாற்றி அமைத்து முயற்சித்தேன். சரியாக வந்தது.

பிறகு எதேச்சையாக இன்னொரு தளத்திற்கு சென்று பார்த்தால், பழைய Code-களிலும் இது நன்றாக வேலை செய்கிறது. செம டென்ஷன்…!

நான்  ஏன் குழம்பினேன் என்று அறிய: http://www.google.com/webmasters/+1/button/

சரி விசயத்துக்கு வருவோம்.

கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்வது எப்படி?

பதிவுகளை ப்ளஸ் ஒன் பட்டனில் ப்ளஸ் செய்தவுடன், நீங்கள் ப்ளஸ் செய்த தகவலும், அதன் கீழே Share On Google+ என்று வரும். கூகிள் ப்ளஸ்ஸில் எப்படி பகிர்வோமோ அது போல பகிர வேண்டியது தான். இன்னொன்று, நீங்கள் ப்ளஸ் ஒன் செய்தால் தான் பகிர முடியும்.

இந்த ஒரு பத்தியை எழுதுவதற்கு கூகிள் என்னை ஒருமணி நேரம் டென்ஷன் படுத்திவிட்டது.

இதுவரை கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனை நிறுவாதவர்கள் பின்வரும் Code-ஐ, எந்த இடத்தில் பட்டனை வைக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு Edit Html பகுதிக்கு சென்று Paste செய்யவும்.

<script src=’https://apis.google.com/js/plusone.js’ type=’text/javascript’/> <g:plusone annotation=’inline’ size=’medium’ width=’200’/>

நன்றி: இத்தகவலை எனக்கு சொல்லி ஒருமணிநேரம் டென்ஷன் ஆக்கிய சகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி!

இன்றைய  இணையம்:

பேஸ்புக்  மாற்றங்கள்:

ஃபேஸ்புக் தளத்தில் விரைவில் பல மாற்றங்கள் வர இருக்கின்றன. அவற்றில் ஒன்று, கூகிள் ப்ளஸ் போன்று, நாம் பகிர்பவற்றை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பகிரும் வசதி. மேலும், பேஸ்புக்கில்  இனி நமது நண்பர்கள் நம்மை அவர்களின் புகைப்படங்களில் Tag செய்தால், நாம் அனுமதி கொடுத்தால் தான் Tag ஆகும். மேலும் சில வசதிகளும் வரையறுக்கின்றன.

இதையும் படிங்க:  ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்..

ட்விட்டர் மாற்றங்கள்:

ட்விட்டர் தளமும் சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. யூட்யூப் வீடியோ சுட்டியை நமது நண்பர்கள் பகிர்ந்தால், ட்விட்டரிலேயே பார்க்கலாம்.

மேலும், நமது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் நண்பர்களின் பெயரை க்ளிக் செய்தால் வலதுபுறம் ஒரு விண்டோ வருமல்லவா? அதில் தற்போது சமீபத்தில் அவர்கள் பகிர்ந்த புகைப்படங்களும் இடம்பெறும்.

28 thoughts on “வந்துவிட்டது கூகிள் ப்ளஸ் Share பட்டன்”

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    ஹை….உங்க ட்விட்டர் படத்துல என்னோட ப்ரோபைளும் தெரியுதே.
    தகவலுக்கு நன்றி… நன்றி….

  2. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said… 1

    Assalaamu alaikkum warah…

    Google invents..!

    'Blogger Nanban' Discovers..!

    I just asked u Q..!
    Even though it was already 'floating' in my blogg,
    that was unknown to me up to your 'exploration'..!

    Nice post.

    Once again thanks Brother Abdul Basith for mentioning my name aslo.//

    Va alaikkum salam. You are welcome Brother!

  3. //ஐத்ருஸ் said… 6

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    ஹை….உங்க ட்விட்டர் படத்துல என்னோட ப்ரோபைளும் தெரியுதே.
    தகவலுக்கு நன்றி… நன்றி….//

    வ அலைக்கும் ஸலாம். நன்றி நண்பா!

  4. Facebook அப்புடியே இந்த குரூப் விஷயத்தையும் கொஞ்சம் கவனித்தால் தேவல. அது முடியல அவ்வ்வ்வ்வ்.

  5. சலாம் சகோ

    எல்லாருக்கும் பயன் தரும் பதிவு (எனக்கு??? ஹி..ஹி..ஹி…)
    //இத்தகவலை எனக்கு சொல்லி ஒருமணிநேரம் டென்ஷன் ஆக்கிய//
    அப்ப அவர்கிட்ட எந்த தகவலும் கேட்க கூடாதுன்னு சொல்றீங்களா? 😉

  6. //பலே பிரபு said… 15

    Facebook அப்புடியே இந்த குரூப் விஷயத்தையும் கொஞ்சம் கவனித்தால் தேவல. அது முடியல அவ்வ்வ்வ்வ்.
    //

    🙂 🙂 🙂

    மாற்றம் வரும் என்று நம்புவோம். நன்றி நண்பா!

  7. //ஆமினா said… 17

    சலாம் சகோ

    எல்லாருக்கும் பயன் தரும் பதிவு (எனக்கு??? ஹி..ஹி..ஹி…)
    //இத்தகவலை எனக்கு சொல்லி ஒருமணிநேரம் டென்ஷன் ஆக்கிய//
    அப்ப அவர்கிட்ட எந்த தகவலும் கேட்க கூடாதுன்னு சொல்றீங்களா? ;-)//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.!

  8. இந்த பதிவைப் பார்த்து கூகிள் பிளஸ் பட்டனை சேர்த்துவிட்டேன். நன்றி.

  9. //மென்பொருள் பிரபு said… 28

    இந்த பதிவைப் பார்த்து கூகிள் பிளஸ் பட்டனை சேர்த்துவிட்டேன். நன்றி.//

    நன்றி நண்பரே!