ரியல் ப்ளேயர் (Real Player Free) – Software Review

 

இன்று முதல் எனக்கு பிடித்த மற்றும் பயனுள்ள மென்பொருள்களை (Softwares) அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். Software Review என்று சொன்னாலும், விமர்சனம் எல்லாம் எனக்கு செய்யத் தெரியாது. மென்பொருள்களில் உள்ள சிறப்பம்சங்களையும், சில குறிப்புகளையும் மட்டும் பகிர்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. இறைவன் நாடினால் பின்னால் ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன்.

Real Player Software Review:

ரியல் ப்ளேயர் (Real Player) என்பது வீடியோக்களுக்கான மென்பொருள் (Video Software) ஆகும். மிகப் பிரபலமான வீடியோ ப்ளேயர்களில் (Video Player) இதுவும் ஒன்று. சில அடிப்படை வீடியோ எடிட்டிங் வசதியை இது தருகிறது.

சிறப்பம்சங்கள்:
  • Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
  • வீடியோக்களை (MP4, WMV, WMA, MP3, QuickTime, AAC, WAV, 3GP போன்று) பல்வேறு ஃபார்மட்களுக்கு மாற்றம் செய்யலாம்.
  • கணினியில் இருந்து வீடியோக்களை இதன் மூலம் மொபைல்களுக்கு மாற்றலாம்.
  • வீடியோ, ஆடியோக்களை சிடி, விசிடியில் ஏற்றலாம்.
  • வீடியோக்களில்  சிலவற்றை கட் செய்து தேவையான பகுதிகளை மற்றும் சேமிக்கலாம்.
  • பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், மைஸ்பேஸ், ஈமெயில் மூலம் கோப்புக்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய: http://uk.real.com/ 

அந்த  தளத்திலேயே மென்பொருளை நிறுவும் முறை படத்துடன் விளக்கப்பட்டிருக்கும்.


Abdul Basith Rating: 4.1/5 Stars

20 thoughts on “ரியல் ப்ளேயர் (Real Player Free) – Software Review”

  1. ஆனால் எனக்கு VLC MP3 playaer ai விட்டால் வேறு எதையுமே பிடிக்க மாட்டேன்கிறது, இதற்கு ஒரு வழி இருந்தால் சொல்லுங்கள் நண்பா….

  2. எனக்கு KM Player-ஐ தவிர வேறெதுவும் பிடிக்க மாட்டேங்குது. 😀 😀 😀

    இந்த பிளேயரை யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்காக வைத்துள்ளேன்.

  3. நான் இதுவரை ரியல் பிளேயர் உபயோகப்படுத்தியதில்லை. வி.எல்.சி மற்றும் கே.எம் பிளேயர்தான்.. யூடியூப் வீடியோக்களை தரவிறக்க ஃபயர் ஃபாக்ஸ் ஆட்ஆன் பயன்படுத்துகிறேன்.
    ரியல் பிளேயரை பதிவிறக்கி பயன்படுத்தி பார்த்துவிடுகிறேன்..
    என்றும் அன்புடன்
    தமிழ்நேசன்

  4. விமர்சனம் செய்ய தெரியாது என்று சொல்லிவிட்டு சிறப்பம்சங்களை அழகாய் பட்டியலிட்டு விட்டீர்களே! 🙂

  5. Abdul Basith Rating: 4.1/5 Stars

    //////////என்ன கொடுமை இது

    எல்லாத்தையும் தாங்கிகொள்ளலாம் ஆனால் இதை

  6. அண்ணா நல்லாவே review பண்ணி இருக்கீங்க நான் இது வரை பயன்படுத்தியது இல்லை….நான் அந்த அளவிற்கு வீடியோ பயன்படுத்துவது இல்லை அதனால் vlc மட்டும் தான்…இனி எந்த சாப்ட்வேர் டவுன்லோட் செய்வதாய் இருந்தாலும் Basith Rating பார்த்து விட்டு தான் டவுன்லோட் செய்வேன்

  7. சலாம் சகோ.

    நானும் Real Player இன்ஸ்டால் செய்துள்ளேன். ஆனால் அவ்வளவாக பயன் படுத்துவதில்லை, Youtube வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது தவிர. ஆனாலும் Download செய்யப்படும் கோப்பின் அளவு (மிக குறைவான resolution செலக்ட் செய்தாலும்) மிகவும் அதிகமாக இருக்கிறது. Youtube கோப்புகளை சாதாரண அளவில் டவுன்லோட் செய்ய வேறு வழி உண்டா? (Ex: தமிழ் படங்கள் 700 MB க்குள்)