ரகசியத் தகவல்களை அனுப்புவது எப்படி?

நாம் நம்முடைய கடவுச்சொற்கள், வங்கி விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பவோம். நாம் யாருக்கு அனுப்பினோமோ அவரின் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டால் நம்முடைய ரகசியத் தகவல்களும் களவாடப்படும். இதனை தவிர்ப்பதற்காக தகவல்களை ரகசியமாக ஒருமுறை மட்டும் படிக்கும்படி அனுப்பலாம்.

இந்த வசதியை https://oneshar.es/ என்னும் தளம் நமக்கு தருகிறது.

அங்கு சென்று Create One New என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு உங்கள் ரகசிய செய்திகளை கொடுத்து Create Link என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு உங்களுக்கென்று ஒரு சுட்டி (URL) கிடைக்கும். அதில் நீங்கள் க்ளிக் செய்துவிடாதீர்கள். யாருக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ? அவர்களுக்கு அந்த சுட்டியை அனுப்புங்கள்.

அந்த சுட்டியை அவர்கள் க்ளிக் செய்தவுடன் அவர்களுக்கு செய்தி தெரியும். இதை ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மீண்டும் அந்த சுட்டியை க்ளிக் செய்தால் அந்த செய்தி இருக்காது.

இதையும் படிங்க:  Word/Excel கோப்புகளுக்கு பாஸ்வோர்ட்

14 thoughts on “ரகசியத் தகவல்களை அனுப்புவது எப்படி?”

  1. அருமையான தகவல், இக்காலத்தில் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    ————————————
    ஒருவர்: ஏம்பா இங்க வா.., இந்த லைட்டரை கொஞ்சம் படிச்சு சொல்லு ..,

    இன்னொருவர்: அண்ணே படிச்சவுடன் கிழித்துவிடவும்-ன்னு போடிருக்குன்னே

    ஒருவர்: அப்படியா …, அப்ப அதை கிழிச்சு போட்டிரு.,சரி இப்போ படிச்சதை சொல்லு ..,

    இன்னொருவர்: அண்ணே அதுல படிச்சதும் கிழித்துவிடவும்-ன்னு மட்டும் தானே போட்டிருந்துச்சு ..,

    ஒருவர்: அய்யோக்கிய பயலே… யாருகிட்ட காட்டுற உன் சேட்டைய…..,

  2. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு.
    ஒரு நிமிஷம் அப்படியே என் பக்கம் உள்ள விருதை பெற்ற்று கொள்ளவும்.