யூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க

யூட்யூப் – வீடியோக்களுக்கான கூகிளின் பிரத்யேக தளம். வீடியோக்களை பார்க்க மட்டுமின்றி, நமக்கென்று தனி சேனல் (Channel) கொடுத்து நம் வீடியோக்களைப் பதிவேற்றும் வசதியையும் தருகிறது. நம்முடைய யூட்யூப் சேனலுக்கான Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
 
Blogger Dashboard => Layout பகுதிக்கு சென்று, Add a Gadget என்பதை கிளிக் செய்து, Html/JavaScript என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே பின்வரும் நிரலை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<iframe src=”http://www.youtube.com/subscribe_widget?p=thespidertech
       style=”overflow: hidden; height: 105px; width: 300px; border: 0;”
       scrolling=”no” frameBorder=”0″>
    </iframe>

*சிவப்பு நிறத்தில் உள்ள thespidertech என்பதை நீக்கிவிட்டு, உங்கள் சேனலின் பெயரை கொடுக்கவும்.

பிறகு Save செய்துக் கொள்ளுங்கள். இந்த Widget பின்வருமாறு தெரியும்.

யூட்யூபில் (வேறு மெயில் ஐடி மூலம்) நான் உருவாக்கிய சேனலின் முகவரி:

http://www.youtube.com/user/TheSpidertech

இதில் TheSpidertech என்பது Channel Name ஆகும்.

என்னுடைய  யூட்யூப் சேனலில் Subscribe செய்து உங்கள் பேராதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙂 🙂 🙂

இன்று பதிவேற்றிய வீடியோ:

இறைவன் நாடினால், விரைவில் “How to Start a Blog?” என்ற வீடியோ தொடர் அந்த சேனலில் வரவிருக்கிறது.

Youtube பற்றிய கற்போம் தளத்தின் பதிவுகள்:

Youtube – சில அடிப்படை தகவல்கள்

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

இதையும் படிங்க:  ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]

11 thoughts on “யூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க”

  1. //
    என்னுடைய யூட்யூப் சேனலில் Subscribe செய்து உங்கள் பேராதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙂 🙂 🙂
    //

    நல்கிட்டோம் நல்கிட்டோம்! வருத்தமான விஷயம் என்னென்னா ஒருத்தர் ஒரு தடவ தான் "Subscribe" பண்ண முடியுது. இல்லாங்காட்டி ஒரு பத்து தபா "Subscribe" பண்ணியிருக்கலாம் 🙂

  2. என்னுடைய யூட்யூப் சேனலில் Subscribe செய்து உங்கள் பேராதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙂 🙂 🙂

    உங்களுக்கும் அரசியல் வியாதி வந்துடுச நண்பா

  3. கண்ணுக்கு குளிர்ச்சியான காணொளிகளையும், காதுக்கு குளிர்ச்சியாக உங்கள் குரலையும் கேட்க youtube-லும் Subscribe செய்து விட்டோம். 🙂