யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய

இணையத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அதிகமாக பயன்படுவது யூட்யூப் தளம் தான். எந்த வீடியோக்களை பார்ப்பதாக இருந்தாலும் அதிகமானவர்கள் முதலில் செல்வது இந்த தளத்திற்கு தான். இணையத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய யூட்யூப் தளத்தில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பதற்கு பல வசதிகள் உள்ளன. அதில் எளிமையான ஒன்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தற்போது நாம் பார்க்கப்போவது மொஜில்லா ஃபயர்பாக்ஸில் நீட்சி (Add-on) மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் முறை.

முதலில் இங்கு க்ளிக் செய்து “Easy YouTube Video Downloader” என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி யூட்யூப் தளத்திற்கு சென்றால் அங்கு வீடியோக்களுக்கு கீழே Download என்னும் பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோ Format-ஐ தேர்வு செய்து உங்கள் கணினியில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

இது பற்றிய வீடியோ செய்முறை:

மற்றுமொரு வசதி:

www.real.com என்ற முகவரிக்கு சென்று Real Player என்னும் வீடியோ பிளேயரை நிறுவிக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் யூட்யூபில் வீடியோக்களை பார்க்கும் போதெல்லாம் Download this Video என்று காட்டும். அதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஆனால் flv Format-ல் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

Update: வீடியோ மாற்றப்பட்டுள்ளது

இதையும் படிங்க:  Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]

23 thoughts on “யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய”

 1. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
  நல்லதொரு அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ.
  என்னிடம் Internet Download Manager இருப்பதால்… அது எந்த வீடியோ ஆடியோ உள்ள பக்கத்தை எந்த பிரசவுரில் திறந்தாலும் அதற்கு மேலே "Download this Video" அல்லது "Download this Audio" என்று கேட்கும்..!

 2. எத்தனை பிரவுசர்கள் வந்தாலும் இந்த பைர்பாக்ஸ் சூப்பர்தான். எனக்கென்னமோ குரோமை விட பைர்பாக்ஸ் தான் பிடித்திருக்கிறது. இதுவரை மற்ற யூடியூப் டவுண்லோடர்களை பயன்படுத்தி வந்தேன். இனி இந்த டவுண்லோடரை பயன்படுத்துகிறேன். அருமையான தகவலுக்கு நன்றி பாஸ்!

  தமஓ 3.

 3. நண்பா எந்த ஒரு சாப்ட்வேரும் டவுன்லோடு செய்யாமல் http://www.saveyoutube.com என்ற இணையதளம் யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய உதவுகிறது.

  Just write 'save' in front of the URL in the address bar and hit enter. For example: http://saveyoutube.com/watch?v=dXP2GdqYCOM

 4. நன்பர் பாஸித் ,நான் எப்பொழுதும் கூகிள் குரோம் தான் பயன் படுத்துவேன் அதற்கு ஏதாவது வழி இருந்தால் தெரிவிக்கவும்.

 5. வணக்கம் நண்பா, நான் தமிழ்தாசன் , நான் புதிதாக ப்ளாக் தொடங்கி இருக்கிறேன் , எனது ப்ளாக்கிள் யூடியூப் வீடியோ upload பன்னினேன், அது சிறியதாக உள்ளது , மற்றும் அந்த வீடியோ Full Screen வரவில்லை , எனக்கு உதவ முடியுமா ?? நன்றி .. எனது மெயில் முகவரி tamilthasan05@gmail.com. நன்றி நண்பா ……..

 6. நன்பர் பாஸித் ,நான் எப்பொழுதும் கூகிள் குரோம் தான் பயன் படுத்துவேன் அதற்கு ஏதாவது வழி இருந்தால் தெரிவிக்கவும்.

 7. உங்கள் தகவல் அருமை இதேபோல் மொசில்லா வில் இன்னொரு ஆட்ஆன் இருக்கிறது அது downloadhelper இதை நிறுவியதும் எந்த நாம் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்தில் ஒடும் வீிடியோவை இதன் மூலம் தரவிறக்கம் செய்யலாம் பயன்படுத்த மிகவும் சுலபமானது
  இனி நான் Easy YouTube Video Downloader பயன்படுத்த போகிறேன்