கணினிகளின் வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். மேசை கணினி (Desktop PC), மடிக்கணினி (Laptop) என்று மாறி வந்த கணினியின் அடுத்த பரிமாணமாக இருப்பது டேப்லட் (Tablet) எனப்படும் கையடக்கக் கணினியாகும். தற்போது ஆப்பிள் ஐபேட், ஆன்ட்ராய்ட் டேப்லட்கள் பிரபலமான நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் Surface என்னும் புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் புகைப்படங்கள்:
 |
Specifications |
 |
Kickstand |
 |
9.3mm thick |
 |
Colourful Keyboards |
தற்போது இரண்டு விதமான டேப்லட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்றில் Windows RT (டேப்லட் சாதனங்களுக்கான) இயங்குதளமும், மற்றொன்றில் Windows 8 இயங்குதளமும் உள்ளது. 9.3மி.மீ மெல்லிய இந்த டேப்லட் நீக்கக் கூடிய ரப்பரால் ஆன விசைபலகையைக் கொண்டது. விதவிதமான கலரில் வரும் இந்த விசைப்பலகை டேப்லட்டின் மூடியாகவும் (Cover) பயன்படுகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க்கவே சும்மா கலக்கலா இருக்கு எங்க நாம வாங்குற அளவுக்கு போடா போறான்…விண்டோஸ் டேபிலேட் ஆண்ட்ராய்ட் நல்லா இருக்கும்….வந்த பிறகு தான் வெற்றி அடையுமா தோல்வியானு தெரியும்…
இதுவும் Zune மாதிரி ஃபிளாப் ஆகம இருந்தா சரிதான்!
நன்றாக உள்ளது .விலை அறிவிக்கப்பட்டவுடன் சொல்லுங்கள்
தமிழ்மணம் என்ன ஆச்சு
அண்ணா எப்படி இந்த கமெண்ட் பாக்ஸ் கலர் மாத்தினிங்க…
ஆப்பிள், ஆண்டிராய்ட் எங்கயோ போய்ட்டாங்க.. ஆனா மைக்ரோசாப்ட் இப்பதான்
இதுல காலடி வைக்குது.. பாப்போம்..
அட., நல்லா இருக்கே.!
nice info
இந்த TABLET நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பலாம்
இதையாவது நாம் சொந்தமாக எடுத்துக்க முடியுமா?
இல்லை உபயோகப்படுத்த மட்டும் தான் உரிமமா (லைசென்சு)?
தகவலுக்கு நன்றி
புதிய தகவல் ! நன்றி நண்பரே !
பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு பகிர்ந்த நண்பனுக்கு நன்றி
ஒன்னு அரக்கிலோ, இன்னொன்னு ஒரு கிலோ. வெயிட்டான Tablet-ங்க தான் ;-)))
கவர்ச்சியாகயாக இருக்கு..பார்போம்..எப்படி மார்கட் இருக்குதுன்னு..
தகவலுக்கு நன்றி நண்பா..
குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
Weight jaasthi boss confirm ah flop aagidum
பார்க்க நல்லா இருக்கு ஆனா introductionல ஹேங் ஆகி பல்பு கொடுத்திச்சாமே? நம்பி வாங்கலாமே…
super anna