மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்

படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள்
நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும்
கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி
பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை
அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.


கூகுள் சேவைகளுக்கு மூடுவிழா என்னும் பதிவின் தலைப்பை மாற்றி இந்த பதிவு. அந்த பதிவில் உள்ள முதல் பத்தியையே இங்கும் கொடுத்துள்ளேன்.

சில சமயம் மற்ற வசதிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக சில வசதிகளை நீக்கும்.

Adsense for feeds:

நம் தளத்தின் செய்தியோடைகளில் ஆட்சென்ஸ் விளம்பரம் வைக்கும் வசதி இருந்தது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் புதிதாக யாரும் அதனை பயன்படுத்தமுடியாது. ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், வரும் டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்து அதில் விளம்பரங்கள் தெரியாது.

Classic Plus:

Classic Plus என்பது கூகுளின் முகப்பு பக்கத்தில் நமக்கு விருப்பமான படங்களை வைக்கும் வசதியாகும். வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் படங்களை நாம் அப்லோட் செய்ய முடியாது. நவம்பர் மாதம் முதல் இந்த வசதி முற்றிலும் நீக்கப்படும்.

Google Storage:

கூகுளின் Cloud Storage வசதியான  கூகிள் ட்ரைவ் தளத்தில் நமது கோப்புகளை சேமித்து வைப்பதற்கு இலவசமாக 5 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. அதே போல நமது போட்டோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியான பிகாஸா தளத்தில் இலவசமாக 1 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. இன்னும் சில மாதங்களில் இரண்டையும் ஒன்றிணைக்கப் போகிறது கூகுள். இதன் மூலம் Google Drive, Picasa இரண்டையும் சேர்த்து 5 GB கொள்ளளவு மட்டுமே கிடைக்கும்.

நம் ப்ளாக்கில் ஏற்றும்  படங்கள் பிகாஸாவில் சேரும் என்பது நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் சில:

 • நம் அருகில் உள்ள இடங்களை தேடுவதற்கு உதவும் Places Directory என்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை நீக்கிவிட்டது. மொபைல்களுக்கான கூகுள் மேப்பிலேயே தேடலாம் என்று கூறியுள்ளது.
 •  Insights for Search என்னும் வசதியை Google Trends வசதியுடன் சேர்த்துள்ளது. http://google.com/trends என்ற முகவரியில் அதிகம் தேடப்படுபவைகள் அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளின் தேடுதல் மதிப்பு ஆகியவற்றைப் பார்க்கலாம்.
 •  கூகுள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் இதுவரை நமது தளத்தை (கூகுள்) ப்ளஸ் ஒன் செய்யப்பட்டவைகளின் தகவலைக் கட்டியது. வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் அதனை நீக்கவுள்ளது. இந்த தகவலை கூகுள் அனாலிடிக்ஸ் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

27 thoughts on “மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்”

 1. என்னது விழிப்புணர்வு பதிவா? ப்ளாக் மாறி வந்துட்டீங்களா?

  🙂 🙂 🙂

  ப்ரொபைல் போட்டோ மாறியிருக்கு போல?

 2. எனக்கு இணையும் தொழில் நுட்பம் தான் தெரியும் நண்பர்க்ளே 🙂

  இணையத் தொழில் நுட்பம் தெரியவே தெரியாது 🙁

 3. மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .இங்கேயும் ஏதாவது குழப்பம்
  வந்தால் உங்களிடம்தான் உதவி கோரச் சொல்லி goole
  சொல்லி இருக்கு சகோ :)))))

 4. Adsense for feeds // இது மூடப்படுவது கொஞ்சம் அதிர்ச்சிதான். போகட்டும் வேறு ஏதாவது புதிதாய் வரும் என்று நம்புவோம்.

 5. பகிர்வுக்கு மிக நன்றி..அதே நேரத்தில் அதிர்ச்சியாகவும் உள்ளது…

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)