முகவரியை சுருக்குவதும், கண்காணிப்பதும்

இணையதள முகவரிகளை சுருக்குவதற்கு URL Shortening Service என்று பெயர். இந்த வசதியை பல தளங்கள் தருகின்றன. தற்போது கூகுள் மூலம் முகவரிகளை சுருக்குவது பற்றியும், அதனை கண்காணிப்பது பற்றியும் பார்ப்போம்.

இந்த முகவரியை சுருக்கும் வசதியை Tinyurl.com தளம் தான் 2002-ஆம் ஆண்டு முதலில் அறிமுகப்படுத்தியது. அதன் பின் பல்வேறு தளங்கள் இந்த வசதியை தருகின்றன.

இந்த வசதி நீண்ட முகவரிகளை சுருக்குவதற்கும், சமூக தளங்களில் பகிர்வதற்கும், நாம் பகிரும் முகவரியை எத்தனை பேர் கிளிக் செய்கிறார்கள்? என்று கண்காணிப்பதற்கும் பயன்படுகிறது.

கூகுள் தரும் இவ்வசதியைப் பெற http://goo.gl/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

கூகுள் கணக்கு இல்லாமலேயே இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் சுருக்கும் அனைத்து முகவரிகளையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமானால், கூகுள் கணக்கில் உள்நுழையுங்கள்.

நீங்கள் ஏற்கனவே இதன் மூலம் முகவரிகளை சுருக்கியிருந்தால், அவைகளைக் காட்டும்.

அங்குள்ள பெட்டியில் சுருக்க வேண்டிய முகவரிகளைக் கொடுத்து “Shorten URL” என்ற பட்டனை க்ளிக் செய்தால் நீங்கள் கொடுத்த முகவரியை சுருக்கி, புதிய முகவரி கொடுக்கும். அந்த முகவரியை தான் நீங்கள் விரும்பும் இடத்தில் பகிர வேண்டும்.

அந்த முகவரிக்கு கீழே Details என்ற என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு விபரங்களைக் காட்டும்.

இதன் மூலம் அந்த முகவரியை மொத்தம் எத்தனை நபர்கள் க்ளிக் செய்தார்கள்? எந்த தளத்திலிருந்து க்ளிக் செய்தார்கள்? அவர்கள் இருக்கும் நாடுகள், அவர்கள் பயன்படுத்தும் உலவிகள், இயங்குதளங்கள் ஆகிய விபரங்களைப் பார்க்கலாம்.

(படத்தை பெரிதாக பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்)

க்ளிக் செய்தவர்கள் எண்ணிக்கை, மற்றும் நாள்

எங்கிருந்து க்ளிக் செய்தார்கள், உலவிகள்

நாடுகள் , இயங்குதளங்கள்

இதன் மூலம் நாம் தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

கவனிக்க: இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நீங்கள் மட்டுமே பார்க்க வேண்டுமெனில் வேறு தளங்களைப் பயன்படுத்துங்கள்.

மேலும்  சில URL Shortner தளங்கள்:

  1. https://bitly.com/
  2. http://tinyurl.com/
  3. http://ow.ly/
  4. http://is.gd/

எந்தவொரு பொருளும் நன்மைக்கு பயன்படுவது போல தீமைக்கும் பயன்படுகிறது. அதே போல இந்த முகவரிகளை சுருக்கும் வசதியும் மால்வேர், வைரஸ் ஆகியவைகளை பரப்பவும் பயன்படுகின்றது.

இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க மூன்று வழிகள் உள்ளன. ஒன்று பலமான ஆன்டி-வைரஸ் மென்பொருளைப் பயன்படுத்துவது, அல்லது அந்த முகவரிகளை க்ளிக் செய்வதற்கு முன் அது எந்த தளத்திற்கான முகவரி? என்பதை பார்ப்பது.

சுருக்கப்பட்ட முகவரிகளின் உண்மை முகவரிகளைப் பார்க்கும் வசதியையும் பல்வேறு தளங்கள் தருகின்றன. அவற்றில் ஒன்று,

இதையும் படிங்க:  கூகுள் பிறந்தநாள் எப்போது?

http://longurl.org/

இங்கு சென்று சுருக்கப்பட்ட முகவரிகளைக் கொடுத்தால், அதன் உண்மையான முகவரியைக் காட்டும்.

மூன்றாவது வழி, அதனை க்ளிக் செய்யாமல் இருப்பது…!

17 thoughts on “முகவரியை சுருக்குவதும், கண்காணிப்பதும்”

  1. இந்த அருமையான வசதியை விளக்கி,அதில் உள்ள நன்மை தீமை இரண்டையும் விவரித்து,கடைசியில் அதற்கான பாதுகாப்பு தீர்வுகளையும் தெரிவித்துள்ளீர்கள்.
    நன்றி……

  2. தவறாக பயன்படுத்த வாய்ப்பிருந்தாலும் இதனை அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டியது முக்கியம் நண்பா அந்த வகையில் இது நல்ல தகவல்..!

  3. ரிஸ்க் எடுக்குறது எலலாம் எனக்கு ரஸ்க் சாப்பிட மாதிரி அப்படியென்று பெருமைக்கு வேண்டுமானல் என்னால் பீற்றிக் கொள்ள முடியும்.. மெய்யாலுமே முடியாதுங்க.. ஏற்கனவே வலைப்பூவு, கணினி என பக்கத்திற்கு பக்கம் தட்டிக் கொண்டு நிற்கின்றது.

    நன்மையொடு கலந்திருக்கும் தீமைதனையும் பகிர்ந்தமைக்கு நன்றி.!

  4. என்னுடைய வேண்டுகோளை ஏற்று எனது http://www.mindsbuilding.com தளத்தில் இணைந்ததற்கு மிக்க நன்றி பாசித்! மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தால் மேலும் மகிழ்வேன்!

  5. நல்ல தகவல்தான் ஆனால் இது எவ்வாறு தள உரிமையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் சுருக்கமான முகவரியைப் பகிர்வது தவிர?

  6. சலாத்தினை சொனனவனாக…
    நல்ல பயனுள்ள பல பதிவுகளை பதிவிடுகிறீர்கள்… உங்கள் எழுத்துலக பணி தொடர என் வாழ்த்துக்கள்…

    இதையும் பார்வையிடலாமே…
    சிரிக்க சிந்திக்க சில புகைப்படங்கள்
    http://www.noornpm.blogspot.in/2012/10/blog-post_23.html#comment-form

  7. I have a problem in my site, Could you please help me. I have accidentally changed my blogger template and do not have saved template but got the recently used source code cached page. If I copy and paste the code entirely it shows error message. How to copy and paste the cache code to get back my template with full customization? Please help me and consider as urgent. My site url is http://www.mindsbuilding.com