மீண்டும் ஜாவா எச்சரிக்கை!

கணினி மற்றும் இணைய பயன்பாடுகள் அதிகமானவற்றுக்கு பயன்படும் மென்பொருள்களில் ஒன்று ஜாவா (Java). சமீபத்தில் ஜாவாவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! என்ற பதிவில் பார்த்தோம் அல்லவா?

இதனையடுத்து அந்த பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்து Java 7 Update 15-ஐ வெளியிட்டது. ஆனால் இன்னும் ஜாவாவால் ஆபத்து இருப்பதாக நேற்றைய முன்தினம் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஜாவா பாதுகாப்பு குறைபாட்டினால் (Security Vulnerability) ஹேக்கர்கள் McRAT என்னும் தொலைவில் இருந்து இயக்கக் கூடிய மென்பொருளை உங்கள் கணினிகளில் பதிவிறக்கம் செய்து, நிறுவ முடியும்.


தற்போது இதிலிருந்து பாதுகாப்பு பெற இரண்டு வழி தான் உள்ளது.


உங்கள் கணினியில் இருந்து ஜாவா மென்பொருளை நீக்க வேண்டும் அல்லது உங்கள் உலவியில் Java-வை நீக்க வேண்டும்.

Java-வை உலவியில் இருந்து நீக்க:

1. Google Chrome உலவியில் chrome://plugins/ என்ற முகவரிக்கு சென்று Java நீட்சியை நீக்கிவிடுங்கள்.

2. Firefox உலவியில் தானாக Disable ஆகியிருக்கும். Add-On பகுதிக்கு சென்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த ஜாவா தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில் Apple, Twitter, Facebook, Microsoft நிறுவனங்களும் அடங்கும்.

Image: Shuttershock

இதையும் படிங்க:  முகவரியை சுருக்குவதும், கண்காணிப்பதும்

11 thoughts on “மீண்டும் ஜாவா எச்சரிக்கை!”

  1. தகவலுக்கு நன்றி சகோ.

    //Google Chrome உலவியில் chrome://plugins/ என்ற முகவரிக்கு சென்று Java நீட்சியை நீக்கிவிடுங்கள்//

    chrome://plugins/ யில் 'Disable' என்ற ஆப்ஷன்தானே உள்ள‌து? Disable பண்ணினால் அது போதுமா? அல்லது முழுவதுமாக நீக்குவதுபோல் எதுவும் செய்யவேண்டுமா?

  2. உலவியிலும்,கணினியிலும் ஜாவாவை நீக்குவதால் மற்ற மென்பொருள்கள் இயங்குவதில் ஏதேனும் பிரச்சினை வருமா..?!

  3. ஜாவா மென்பொருள் அவசியம் என்றால் ப்ரவ்சரில் மட்டும் Disable என்பதை க்ளிக் செய்தால் போதும்.

  4. வராது. ஒருவேளை அந்த மென்பொருள்கள் ஜாவாவில் இயங்கினால் ஜாவாவை நிறுவச்சொல்லும்.