புதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது உங்கள் ஆன்ட்ராய்ட் போனை டச் செய்யாமல் குரல் வழியாக இயக்குவதற்கு Voice Access என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை குறிப்பாக மாற்று திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்ட் 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு இருக்க வேண்டும்.
பிறகு கூகுள் ப்ளே சென்று Voice Access அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மேலும் கூகுள் ஆப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும்.
பிறகு கூகுள் ஆப் உள்ளே Settings பகுதியில் Voice என்பதை க்ளிக் செய்து, “OK Google Detection” என்பதை On செய்ய வேண்டும்.
பிறகு மொபைலில் Settings => Accessibility சென்று Voice Access என்பதை க்ளிக் செய்து On செய்ய வேண்டும்.
மேலே உள்ள படத்தில் உள்ளதுபோல், உங்கள் மொபைலில் Tap செய்யக்கூடிய இடத்தில் எண்கள் இருக்கும். அந்த எண்ணை கூறினால் அது க்ளிக் செய்யப்படும்.
மேலும் குரல் வழியாக நீங்கள் கட்டளையிடலாம். உதாரணத்திற்கு “Open Gmail” என்று கூறினால் ஜிமெயில் ஆப் ஓபன் ஆகும், “Go Home” என்று கூறினால் மொபைல் முகப்பு பக்கத்திற்கு செல்லும். இப்படி நீங்கள் குரல் வழியாக உங்கள் போனை இயக்கலாம்.
பின்வரும் கட்டளைகளை நீங்கல் இடலாம்.
- Open [app]
- Go back
- Go home
- Show notifications
- Show Quick Settings
- Show recent apps
- What can I say?
- Show all commands
- Open tutorial
- Hide numbers
- Show numbers
- What is [number]?
- Stop Voice Access
- Turn on Wi-Fi
- Turn off Wi-Fi
- Turn on Bluetooth
- Turn off Bluetooth
- Turn up volume
- Turn down volume
- Turn [media/alarm/phone]
- volume up
- Turn [media/alarm/phone]
- volume down
- Mute
- Silence
- Unmute
- Mute [media/alarm/phone]
- volume
Unmute [media/alarm/phone] - volume
Turn device off
படங்கள் உதவி: கூகுள்
You must log in to post a comment.