மாறுகிறது ப்ளாக்கர்

நாளுக்கு நாள் புதிய சேவைகளை அளித்து வரும் ப்ளாக்கர் தளம் விரைவில் புதிய தோற்றத்தில் வர இருக்கிறது. அதை பற்றிய தகவலை ப்ளாக்கர் தளம் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளது.
அலெக்ஸா தளத்தின் உலக இணையதளங்களின் தர வரிசையில் ப்ளாக்கர் தளம் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இதுவரை ப்ளாக்கர் (ப்ளாக்ஸ்பாட்) தளங்களில் ஐம்பது கோடிக்கும் மேலான பதிவுகள் பதியப்பட்டுள்ளன. உலகெங்கும் 40 கோடிக்கும் மேலான வாசகர்கள் தினமும் படித்து வருகிறார்கள்.

அதனை கொண்டாடுவதற்காக ப்ளாக்கர் தளம் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. முதலாவதாக ப்ளாக்கர் தளத்தின் தோற்றத்தை விரைவில் மாற்ற போகிறது. புதிய தோற்றத்தின் படங்களையும் அது வெளியிட்டுள்ளது.


ப்ளாக்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்:

(படத்தை பெரிதாக காண, படத்தின் மேல் க்ளிக் செய்யவும்.)

தற்போதைய Post Editor
புதிய Post Editor
தற்போதைய  Dashboard
புதிய Dashboard

ப்லாக்கர் வெளியிட்டுள்ள வீடியோ:



மேலும் படிக்க: Blogger Buzz: What’s New With Blogger

ப்ளாக்கரின் புதிய தோற்றம் எனக்கு பிடித்துள்ளது. உங்களுக்கு? பின்னூட்டத்த்ல் தெரிவிக்கவும்.

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் புதிதாக +1 Counter வசதி

26 thoughts on “மாறுகிறது ப்ளாக்கர்”

  1. நல்ல தகவல்.எனது வலைத்தளத்தில் இதுகாறு குறித்து பதிவு ஒன்று எழுதியுள்ளேன். காப்புரிமைக்கு உட்பட்ட படங்களைப் பயன்படுத்தும் போது கவனமாய் இருங்கள் ! கூகிள் கணக்கை இரத்து செய்துவிடலாம்.

  2. 1.எனது ப்ளாக்கில் social network subscribe me பட்டனை வைக்க விரும்புகிறேன்.அதற்கு
    http://widgetsforfree.blogspot.com
    ப்ளாக்கின் சைடுபாரில் உள்ள twitter,facebook……….முதலிய பட்டன்களை அதே அளவில் அதைப்போலவே வைக்க விரும்புகிறேன்.அதில் உள்ளதை விட மேலும் சில தளங்களை இணைத்து ஒரே விஜ்ஜெட் டாக வைக்க விரும்புகிறேன்.எனக்கு தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாததால் இதற்கான html கோட்டிங்கை யும் எங்கெல்லாம் எனது url ஐ உள்ளீடு செய்யவேண்டும் என்று கூறமுடியுமா?எனக்கு தனியாக கூறினாலும் சரி,இதையே ஒரு பதிவாக போட்டாலும் சரி.தயவு செய்து உதவவும்.

    நான் வைக்கவிரும்பும் பட்டன்கள்:
    1.Follow us on twitter
    2.Follow us on google buzz
    3.subscribe via RSS Feed
    4.subscribe via Email
    5.subscribe us on YOUTUBE
    6.Subscribe us on facebook

    ஆகிய 6 தளங்களின் லோகோவுடன் கூடிய பட்டன்களை(http://widgetsforfree.blogspot.com)தளத்தின் சைட் பாரில் உள்ள அதே அளவில் அதேபோல் லோகோவில் ஒரே விஜ்ஜெட்டாக அமைக்க உதவும் html கோடிங்கை அளிக்க உதவுமாறு தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலை tvetsi@gmail.comக்கு அனுப்ப முடியுமா?

  3. கருத்துக்களை பதிவு செய்த அனைத்து சகோக்களுக்கும் நன்றி! நேரம் மற்றும் இணையம் இல்லாததினால் என்னால் பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்!

  4. //இக்பால் செல்வன் said…

    ………..காப்புரிமைக்கு உட்பட்ட படங்களைப் பயன்படுத்தும் போது கவனமாய் இருங்கள் ! கூகிள் கணக்கை இரத்து செய்துவிடலாம்.
    //

    தகவலுக்கு நன்றி நண்பா..! ப்ளாக்கர் தளத்தை பற்றி நான் எழுதி வருவதினால் பிரச்சனை வராது என நினைக்கிறேன்.

  5. //அன்னு said…

    அஸ் ஸலாமு அலைக்கும் சகோ. எப்ப இருந்து புது பிளாகர் அமலுக்கு வரும்?? 🙂
    //

    வ அலைக்கும் ஸலாம்..
    தெரியவில்லை சகோதரி! குலுக்கல் முறையில் சிலருக்கு மட்டும் தற்போது கொடுத்திருப்பதாக ப்ளாக்கர் தளம் சொல்கிறது. மற்றவர்களுக்கு விரைவில் (?) வருமென்றும் கூறுகிறது. அந்த செய்தியை கீழுள்ள முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.

    Blogger in Draft: Blogger, Redesigned

  6. //விக்கி உலகம் said… 22

    மாப்ள சூப்பரா சொல்லி இருக்கீங்கோ!..பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி நண்பா!

  7. //விஜய் said… 23

    எனது ப்ளாகில் முன்பு பதிவிடப்பட்ட படங்கள் எல்லாம் வெறும் கருப்பு கட்டங்களாக உள்ள்ளதே எதனை எப்படி சரி செய்வது http://kadamburtemple.blogspot.com/2011/10/blog-post.html
    //

    நண்பா! தற்போது ப்ளாக்கர் தளங்களில் இணைக்கும் படங்கள் எல்லாம் பிகாஸா தளம் மூலம் பதிவேற்றப்படுகிறது. பிகாஸா அல்லது கூகிள் ப்ளஸ்ஸில் போடோ ஆல்பங்களை அழித்துவிட்டால், அந்த படங்கள் எல்லாம் நீங்கள் சொன்னது போல கருப்பு நிறமாக வரும். அந்த புகைப்படங்களை நீங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.