மாயப் படம் உருவாக்குவது எப்படி?

மேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்
பாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா?

இதுவும் ஒரு வகையான மாயத் தோற்றம் (Illusion) ஆகும். இது போல படங்களை இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். இதனை நாமே செய்வது எப்படி? கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



1. MS Paint-ஐ கணினியில் திறந்துக் கொள்ளுங்கள்.

2. அதில் மாற்றப் போகும் படத்தை திறந்துக் கொள்ளுங்கள்.

3. Select All செய்துக் கொள்ளுங்கள். (“Cntrl + A” அழுத்தியும் செய்துக் கொள்ளலாம்)

4. படத்தின் மீது Right Click செய்யுங்கள்.

5. “Invert Colour” என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. படத்தில் இருக்கும் உருவத்தின் மூக்கில் சிவப்பு கலரிலோ அல்லது பளிச்சென்று தெரியும்விதமாக வேறு நிறத்திலோ புள்ளி ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.

7. பிறகு Save செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! உங்களுக்கு மாயப் படம் தயாராகிவிடும். நண்பர்களுடன் அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Update:

இது  எப்படி வேலை செய்கிறது? என்ற அறிவியல் நுட்பத்தை நண்பர் அருண் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதனை பார்க்கவும்.

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )

இதையும் படிங்க:  தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]

22 thoughts on “மாயப் படம் உருவாக்குவது எப்படி?”

  1. படம் உருவாக்கும் விதத்தைவிட, அது செயல்படும் வித்தையைச் சொல்லியிருக்கலாம். (நெகட்டிவ்வை 30 செகண்ட் பாத்தா, அப்புறம் நிஜ படம் எப்படி தெரியுது?)

  2. மாயப்படம் என்றவுடன் பெரிய கட்டுர்ரையாக இருக்கும் என்று நினத்தேன் இவ்வளவு எளிதாகயிருக்கும் என்று நினக்கவில்லை மிக்க நன்றி.

  3. சந்தானத்தை எப்படி பார்த்தாலும் எனக்கு நெகட்டிவ் இமேஜாகவே தெரிகிறார்…! ஹி…ஹி…!!!!

  4. @ஹாரி

    பார்த்ததில்லையா? என் நண்பர் ஒருவர் harry2g என்ற புது ப்ளாக் தொடங்கியுள்ளார். அங்கே பார்க்கவும்.

    🙂 🙂 🙂

  5. @Abdul Basith
    போச்சு…
    ஊர்ல இருக்குற எல்லாரும் இனி குச்சியைத் (Paint brush) தூக்கிட்டு, ஒரு கோட் போட்டுகிட்டு 'ஹாரி பாட்டர்' மாதிரி சுத்தப் போறாங்க.. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்!!