மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

பதிவுகள் மூலம் மட்டுமே அறியப் பெற்ற பதிவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் பொருட்டு அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பதிவர் சந்திப்புகள் நடைபெற்று வருகிறது. இது பதிவர்களிடையே அன்பையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும். இதற்கு முத்தாய்ப்பாக சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் செய்யுங்கள்
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு:

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

நாள் : ஆகஸ்ட் 26, 2012 – ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ​புண்ணியக்கோட்டி திருமண மண்டபம், ​1, சக்ரபாணி தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னைநிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

 • நீங்கள் இதுவரை சந்தித்திராத பல பதிவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
 • வெளியூரிலிருந்து  வரும் பதிவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 •  சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
 • சகோதரி  சசிகலா சங்கர் அவர்களின் “தென்றலின் கனவு” நூல் வெளியிடப்படுகிறது.
 • டிஸ்கவரி புக் பேலஸ் சிறிய புத்தக கண்காட்சி பதிவர்களுக்காக 10% தள்ளுபடியுடன் நடைபெறவுள்ளது.
 •  பதிவர்களுக்கு வருமானம் வரும் வழிகள் (How to earn by ads) குறித்து “மக்கள் சந்தை” தளத்தின் சீனிவாசன் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.
 • மக்கள்சந்தை.காம் சார்பாக  “நான் பதிவன்” என்ற ஒரு லட்ச ரூபாய் பரிசுப்போட்டி அறிவிக்கப்படவுள்ளது.

இவை  எல்லாவற்றையும் விட முக்கியமாக  “மதிய உணவு” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 🙂 🙂 🙂

மேலும் விவரங்களுக்கு நண்பர் மதுமதி அவர்களின் தூரிகையின் தூறல் தளத்தை பார்க்கவும். மறக்காமல் அங்கே உங்கள் வருகையினை பதிவு செய்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் என்னால் கலந்துக் கொள்ள முடியாததில் வருத்தமே! நீங்கள் இந்தியாவில் இருந்தால் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.

டிஸ்கி: இந்த பதிவில் தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது. அதனை விரைவில் இதே பதிவில் சொல்கிறேன்.மறக்காமல் திரும்ப வாருங்கள்!

இதையும் படிங்க:  ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..

25 thoughts on “மாபெரும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு”

 1. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக "மதிய உணவு" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 🙂 🙂 ://

  அதானே முக்கியம் ஹா ஹா

  இந்த பதிவில் தொழில்நுட்பமா எங்க எங்க ?

 2. ஹிஹிஹிஹி…

  தொழில்நுட்பம் பற்றி அறிவிக்க கொஞ்ச நேரம், அல்லது நாட்கள் ஆகலாம். அது கூகுள் கையில் தான் உள்ளது.

  😀 😀 😀

 3. கலந்து கொள்ளும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  தொழில்நுட்பம் ;

  கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கும் வர வாய்புள்ளதா நண்பரே…?

 4. பாசித் நானும் மும்பையிலேந்து போயி கலந்துக்கலாம்னு இருக்கேன். என்ன ஒன்னு எதிலயுமே டிக்கட்டே கிடைக்கலே. ஏ ஆர் சி ல புக் பண்ணிருக்கேன். போகனும்னு நினச்சாச்சு வேர எதப்பத்தியும் நினக்கக்கூடாதுல்லியா?எழுத்துமூலமே அறிமுகமானவங்களை நேரில் பாக்கப்போரோங்கர ஆர்வம் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு. நா இதுவரை இதுபோல எந்தக்கூட்டங்களிலும் கலந்துகிட்டதே இல்லே. இதான் முதல் முறை

 5. தண்ணியில்லாத காடுகளில் தனித்து விடப்பட்டவர்கள் (உங்களையும் என்னையும் போன்றோர்கள்) இங்கிருந்தே வாழ்த்தத்தான் முடிகிறது அல்லவே பாஸித் பாய்?! 🙂

 6. மிக்க மகிழ்ச்சி பாசித்..தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி..

 7. இந்த பதிவில் தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது ???
  // //
  நான் கண்டு பிடித்து விட்டேன்.

  போட்டோக்களின் மீது கிளிக் செய்யும் பொது கருநிற Background விண்டோவில் போட்டோக்கள் தொன்றுகின்றன.

  இதற்கு "Light Room Slide Show View" என்று பெயர். ப்ளாக்கில் உள்ள படங்களை பாதுகாக்க இந்த முறை பயன்படுத்த படுகின்றது.
  சரியா ???

 8. ஹா..ஹா..ஹா.. இலை நண்பரே! நீங்கள் சொல்லும் வசதி "Light Box". இதை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

  http://www.bloggernanban.com/2011/09/lightbox.html

  இந்த பதிவில் வேறொன்று இருக்கிறது. கூகிளின் முடிவிற்காக காத்திருக்கிறேன். வந்தால் தான் தெரியும்.

 9. ஹா…ஹா..ஹா.. இல்லை நண்பரே! இது வேறு தொழில்நுட்பம்.

  தமிழுக்கு ஆட்சென்ஸ் பற்றி சரியாக சொல்ல முடியாது. அதுவும் கூகிளின் கையில் தான் உள்ளது.

 10. பங்கேற்க முடியாமைக்கு வருந்துகிறேன். என்ன தொழில்நுட்பம் என்று அறிய ஆவலாய் உள்ளேன் ;-))))

 11. ஒரு நட்சத்திரமல்ல பலக்கோடி
  நட்சத்திரங்கள் வானில் ஒன்ருகூடிடவே
  வெளிச்சம் பூமிக்காகும் !காணும் கண்களுக்கு பிரமிப்பூட்டும்
  எழில் களிக்கும் விழிகளுக்கு வரப்பிரசாதம் !

  காண ஏங்கிட வைக்கும் பூந்தோட்டம்
  மலர் கண்காட்சியில் வண்டுகளின் ஆட்டம்பாட்டம்
  அதிசய நிகழ்வுகள் புதிய வரவுகள்
  மன நிறைவுத்தந்திடும் சிறகுகள் !

  மக்கள் சந்தையில் ""தென்றலின் கனவு
  பட்டுக்கோட்டையாரின் எழுத்துப்பரிவு
  டிஸ்கவரி நூலகத்தின் விற்பனை விரிவு
  கண்டும் ,கொண்டும் சென்றிட்டால் வளர்ந்திடும் அறிவு !

  ஆர்வத்தோடு கண்டு களிப்பவர்களையும் ,
  உண்டு செல்பவர்களையும் கற்கண்டாய் இனிக்கும்
  பந்தியில் எழுத்து உபசரிப்பு விரிவாக உரையாக
  தமிழ் வலைப்பதிவாளர்கள் கூட்டிடும் கூடல் திரட்டியின் தேடல் !

  சங்கமிக்கும் இடமே புண்ணியக்கோடி அரங்கம்
  கூடி வந்தால் கோடிப்புண்ணியம் தேடி செல்வோருக்கும்
  நாடி வந்தோருக்கும் முதலுரிமை அரங்கம்
  கொண்டிடும் பெருமை அருமையிலும் அருமை !

 12. நண்பா நானும் கலந்து கொள்கிறேன் அதற்கு சங்க தலை நீ தான் உதவி
  செய்ய வேண்டும் ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் ஓரு டிக்கெட் போட்டு குடு நண்பா
  சவுதி அரேபிய /கொழும்பு .. //////

  கொழும்பு யில் இருந்து திருச்சி என்னோட செலவில் போகிகிறேன்

  சங்க தலைவா முடியாது என்று மட்டும் சொல்லிடாதே :)- :)- :)-

  ப்ளாக் தொடங்குவது எப்படி? பக்கத்தில் நீங்கள் எழுதிய ப்ளாக்
  தொடங்குவது எப்படி புத்தகத்தை வெளியீடு செய்யவும் என்னோட ஆசை

  என்னோட தளத்தில் நான் எழுதிய புத்தகத்தையே 25 download ஆகிருக்கு
  (2odays )

  நீங்கள் எழுதிய ப்ளாக் தொடங்குவது எப்படி அதிகம் பெயரை சென்ற அடைய வேண்டும்