ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-15]

ப்ளாக் வைத்திருக்கும் அனைவருமே டெம்ப்ளேட் (Template) என்று சொல்லப்படும் நமது ப்ளாக் வடிவமைப்பு அழகாக இருக்க வேண்டும் என நினைப்போம். ப்ளாக்கர் தளமே நமக்காக பல்வேறு டெம்ப்ளேட்களை தருகிறது. அதில் உள்ள டெம்ப்ளேட்கள் நமக்கு பிடிக்கவில்லையெனில் பிற தளங்களில் இருந்து பதிவிறக்கி பயன்படுத்தும் வசதியையும் தருகிறது. அதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனை க்ளிக் செய்து Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.


Template பகுதியில் உள்ள வசதிகள்:

Backup/Restore – நமது டெம்ப்ளேட்டை பேக்கப் எடுக்கவும், புதிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தவும்
என்ற பட்டன் பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.

இதில் என்ற பட்டனை க்ளிக் செய்து தற்போது நமது ப்ளாக்கில் உள்ள டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

அதற்கு கீழே Choose file என்பதை க்ளிக் செய்து நமது கணினியில் இருக்கும் டெம்ப்ளேட் ஃபைலை தேர்வு செய்து, Upload என்பதை க்ளிக் செய்தால் புதிய டெம்ப்ளேட்டிற்கு மாறிவிடும்.

புதிய டெம்ப்ளேட் மாற்றுவது தொடர்பாக ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ப்ளாக்கரில் உள்ள Dynamic Template-களை பற்றி ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற பதிவில் பார்க்கவும்.

டெம்ப்ளேட்டில் மாற்றங்கள் செய்ய:


Live on Blog என்பதற்கு கீழே Customise, Edit HTML என்று இரண்டு பட்டன்கள் இருக்கும்.

Customize என்பதை க்ளிக் செய்தால் Template Designer பகுதிக்கு செல்லும். அதனைப் பற்றி இத்தொடரின் பகுதி-11-ல் பார்த்தோம்.

Edit HTML என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு ஒரு அறிவிப்பு வரும்.

அதாவது HTML பற்றி தெரிந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும் என்று சொல்லும். காரணம் சிறு பிழை செய்தாலே ஏதாவது மாறிவிடும். அதில் Proceed என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.

இங்கு HTML-ல் உங்களுக்கு விருப்பமான மாற்றங்களை செய்துக் கொள்ளலாம்.

டெம்ப்ளேட்டில் உள்ள கோடிங் பற்றி தனியாக (தொடர்???)பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது. அதை எப்போது எழுதுவேன்? அல்லது எழுதுவேனா? என்று சரியாக தெரியவில்லை.

மொபைல் டெம்ப்ளேட்:

ப்ளாக்கர் தளங்களை மொபைல்களில் எளிதாக பார்க்க வசதியாக மொபைல் டெம்ப்ளேட் என்பதை அறிமுகப்படுத்தியது. இதை பற்றி ப்ளாக்கரில் புதிய வசதி: Mobile Template என்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

அதில் உள்ள பட்டனை க்ளிக் செய்து, Yes என்பதை தேர்வு செய்து Save கொடுக்கவும்.

இதில் பல டெம்ப்ளேட்கள் இருக்கும். உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க:  தேடுபொறி ரகசியங்கள்

Custom என்பதை மட்டும் தேர்வு செய்ய வேண்டாம். அதை தேர்வு செய்தால் கணினியில் தெரிவது போல தான் மொபைலிலும் தெரியும். பிறகு கஷ்டம் ஆகிவிடும்.

டெம்ப்ளேட் பகுதியில் கீழே Revert to Classic Template இருக்கும். அது ப்ளாக்கரின் பழைய டெம்ப்ளேட்களை பயன்படுத்தும் வசதி. இதனை பயன்படுத்தினால் புதிய வசதிகள் பலவற்றை பயன்படுத்த முடியாது. அதனால் இது தேவையில்லை

இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் Settings பற்றி பார்ப்போம்.

6 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-15]”