ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-16]

ப்ளாக் பற்றி கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் பார்த்துவிட்டோம். தற்போது நமது ப்ளாக்கின் அனைத்து அமைவுகளையும் மாற்ற உதவும் Settings பகுதி பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

இத்தொடரின் அனைத்துபகுதிகளும் இங்கே ஒரே பக்கத்தில்..

Settings பகுதியில் மொத்தம் ஐந்து பிரிவுகள் இருக்கும்.

1. Basic – அடிப்படை அமைவுகள்
2. Posts and Comments – பதிவு மற்றும் பின்னூட்டங்களின் அமைவுகள்
3. Mobile and Email – மொபைல் மற்றும் மின்னஞ்சல் அமைவுகள்
4. Language and Formatting – மொழி மற்றும் வடிவமைப்பு அமைவுகள் 
5. Other – மற்ற அமைவுகள்

Basic:

Blogger Dashboard => Settings பகுதிக்கு சென்றால் பின்வருமாறு வரும். இதில் Basic, Publishing, Permissions என்று மூன்று பகுதிகள் இருக்கும்.
 

Title – ப்ளாக்கின் தலைப்பு. Edit என்பதை க்ளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

Description –  ப்ளாக் பற்றிய சிறு குறிப்பு. Edit என்பதை க்ளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

Privacy –  இதில் Edit என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு இரண்டு தேர்வுகள் வரும்

அவைகள் இரண்டிலும் Yes என்றே இருக்கட்டும்.

Publishing

Blog Address – உங்கள் ப்ளாக் முகவரி. எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல.

அதற்கு கீழே Add a Custom Domain என்பதை க்ளிக் செய்து .com, .in, .net போன்ற கஸ்டம் டொமைன்களை முகவரியாக வைக்கலாம். இது பற்றி கற்போம் தளத்தில் கஸ்டம் டொமைன் தொடரில் பார்க்கலாம்.

Permissions

Blog Authors – நம்முடைய ப்ளாக்கில் நாம் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் பதிவு எழுதவோ, ப்ளாக்கை நிர்வகிக்கவோ செய்யலாம். இதில் உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கும். அதற்கு கீழே Add Authors என்பதை க்ளிக் செய்து மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் அவர்களுக்கு அழைப்பு சென்றுவிடும்.

அனுப்பப்பட்டவர் அழைப்பிதழை ஏற்றுக் கொண்ட பிறகு பின்வருமாறு இருக்கும்.

அவருக்கு Author என்று கொடுத்தால், அவர் நமது ப்ளாக்கில் பதிவு மட்டும் எழுத முடியும், எழுதிய பதிவை திருத்தம் செய்ய முடியும்.

Admin என்று கொடுத்தால் ப்ளாக்கில் நாம் செய்யும் அனைத்தையும் அவரால் செய்ய முடியும்.

அதற்கு பக்கத்தில் X குறியை க்ளிக் செய்து அவரை ப்ளாக்கில் இருந்து நீக்கிவிடலாம்.

Blog Readers – நம்முடைய ப்ளாக்கை யாரெல்லாம் படிக்கலாம்? என்பதை தேர்வு செய்யும் பகுதி. இதில் Anybody என்பதை தேர்வு செய்யவும்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? - Word Verification [பகுதி - 22]

இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் Posts and Comments பற்றி பார்ப்போம்.

8 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-16]”

  1. மிக அருமையான விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளது,வாழ்த்துக்கள் வெற்றிகரமாக பிலாக் பற்றி 16 விளக்கங்கள் வாழ்த்துக்கள்

  2. அருமையான விளக்கம் ! சிறிய சந்தேகங்கள் இருந்தன. அவற்றையும் விளக்கி விட்டீர்கள். உங்களின் சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ! தொடருங்கள் ! நன்றி நண்பரே !

  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    சகோதரர் அவர்களே!

    உங்களது அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி. அல்லாஹ் தாங்களுக்கு நல்லருள் செய்யட்டுமாக!

    அன்புடன் சகோதரன்
    கீழை ஜமீல் முஹம்மது.