கடந்த பகுதியில் அடிப்படை அமைவுகளைப் (Basic Settings) பார்த்தோம் அல்லவா? தற்போது நம்முடைய பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் தொடர்பான அமைவுகளை மாற்ற உதவும் Posts and Comments பகுதி பற்றி பார்ப்போம்.
Show at most – முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். (முகப்பில் முழுப்பதிவும் தெரியும்படி வைத்திருந்தால் அதிகபட்சம் இரண்டுக்கு மேல வைக்க வேண்டாம். முகப்பில் பதிவின் சிறுபகுதி மட்டும் தெரியும்படி வைத்திருந்தால் அதிகபட்சம் எட்டு, பத்துக்கு மேல வைக்க வேண்டாம்.)
Post Template – இதில் நாம் ஏதாவது வார்த்தைகளையோ, அல்லது HTML நிரல்கலையோ எழுதிவைக்கலாம். இங்கு நாம் என்ன எழுதுகிறோமோ அது நாம் புதிய பதிவு எழுதும் போது அதில் தானாகவே இருக்கும்.
Showcase images with Lightbox – இது நமது தளத்தில் புகைப்படங்களை Lightbox என்னும் முறையில் பார்க்கும் வசதி. இதை செயல்படுத்த “Yes” என்றும் வேண்டாம் என்றால் “No” என்றும் கொடுக்கவும். (Lightbox பற்றி ப்ளாக்கரில் புதிய பட வசதி – LightBox என்ற பதிவில் பார்க்கவும்.)
Comment Location – பின்னூட்ட பெட்டியின் தோற்றத்தை இங்கு தேர்வு செய்யலாம்.
- Embedded – பதிவின் கீழே பின்னூட்டப் பெட்டி இருக்கும். (இத்தளத்தில் இருப்பது போல)
- Full Page – Post a Comment என்பதை க்ளிக் செய்தால் தனி பக்கத்தில் பின்னூட்ட பெட்டி வரும்.
- Pop-up window – Post a Comment என்பதை க்ளிக் செய்தால் Pop-up window-ல் பின்னூட்ட பெட்டி வரும்.
- Hide – இதனை தேர்வு செய்தால் யாரும் பின்னூட்டம் இடமுடியாது.
Who can comment? – உங்கள் பதிவுகளுக்கு யாரெல்லாம் பின்னூட்டம் இடலாம் என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
- Anyone – யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம்.
- Registered Users – Google, wordpress, OpenID, AIM போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் பின்னூட்டம் இடலாம்.
- Users with Google Account – Google கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் பின்னூட்டம் இடலாம்.
- Only Members of this blog – ப்ளாக்கின்உறுப்பினர்கள் மட்டும் பின்னூட்டம் இடலாம்.
Comment Moderation – பின்னூட்டங்களை மட்டுறுத்தல்.
- Always – எப்பொழுதும் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்த பிறகே பிரசுரிப்பதற்கு
- Sometimes – பழைய பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்ய
- Never – மட்டுறுத்தல் செய்யாமல் பின்னூட்டங்களை உடனடியாக பிரசுரிக்க
Show Backlinks – மற்ற தளங்களில் நமது பதிவிற்கான இணைப்பை கொடுத்திருந்தால் அந்த இணைப்பு (Link) Backlink எனப்படும். “Show” என்று கொடுத்தால் எந்த தளங்களில் இணைப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை பதிவின் கீழே காட்டும். “Hide” என்று கொடுத்தால் காட்டாது.
Comment Form Message – பின்னூட்டப் பெட்டிக்கு மேலே (சில சமயங்களில் கீழே) ஏதாவது வார்த்தைகளை இணைக்கலாம். உதாரணத்திற்கு “உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது”.
மாற்றங்கள் செய்தபின் மேலே உள்ள Save Settings என்பதை க்ளிக் செய்ய மறக்காதீர்கள். அதனை க்ளிக் செய்தால் தான் மாற்றங்கள் பதிவாகும்.
இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
சேவை தொடரட்டும் …வாழ்த்துக்கள்!
அருமையான தொடர்..என்னை போன்ற பதிவுலகத்துக்கு புதிதானவர்களுக்கு மிகப் பெரிய துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.நன்றி.
நல்ல பயனுள்ள வலை தளம். சேவை தொடரட்டும் …வாழ்த்துக்கள்!
பிர்தௌஸ் ராஜகுமாரன் , கோவை
பிர்தௌஸ் ராஜகுமாரன் , கோவை
:: நன்றி ::
பகிர்வுக்கு நன்றி சகோ .தொடருங்கள்
தொடரட்டும் உங்கள் சேவை ! நன்றி நண்பரே !
நண்பா Word verification மாற்றுவது எப்படி?
நண்பா! புதிய blogger interface-ல் அதனை மாற்ற முடியாது. பழையதுக்கு மாறி Settings => Comments பகுதிக்கு சென்று மாற்றவும்.
My Blog is loading slowly and also it shows an error message "the script in this page slow down the adobe flash player" so what can i do
மாப்ள தெளிவா புரிஞ்சிக்கிட்டு வரேன்..தொடர்கிறேன்..நன்றி!
Coming Soon…
http://faceofchennai.blogspot.in/
வணக்கம் நண்பரே ..,
நான் நீண்டநாளாக தங்கள் தளத்தை வாசித்து வருகிறேன். நான் கடந்த ஒரு மாதமாக புதிதாய் வலைத்தளம் தொடங்கி எழுதி வருகிறேன் (http://varalaatrusuvadugal.blogspot.com/), எனது வலைத்தளத்திர்க்காக ஒரு இலவச template உபயோகித்து வருகிறேன். அந்த template-ல் ஒரு பிரச்சனை உள்ளது நண்பரே. என்னால் அதை சரி செய்ய இயலவில்லை. தாங்கள் அதை சரிசெய்ய இயலுமா?
என்ன பிரச்சனை என்றால் footer-பகுதியில் உள்ள Comments area-ல் வாசகர்கள் இடும் comments-கு பின்புல வண்ணமாக sky blue உள்ளது. தற்போது எனது வளைத்தளத்தின் பின்புல வண்ணம், white-ஆக இருப்பதால் எந்த வித வித்தியாசமும் இருப்பதில்ல. ஆனால் பின்புல வண்ணத்தை நான் கருப்பாக மாற்ற முயற்சித்தால். வாசகர்கள் இடும் கருத்துரையின் பின்புல வண்ணமும் சேர்ந்து கருப்பாக மாறாமல் தற்போது என்ன வண்ணம் பின்புல வண்ணமாக இருக்கிறதோ அதுவேதான் இருக்கிறது.
நண்பரே இவ்விசயத்தில் நீங்கள் எனக்கு உதவ முடியுமா?
வணக்கம் அன்பரே
புதியவர்களுக்கு மிக எளிமையாக பிளாக்கர் பற்றிய விளக்கங்கள் நன்றாக உள்ளன.தங்களிடம் ஒரு கேள்வி.என்னிடம் mp 3 வடிவில் உள்ள பாடல்களை எவ்விதம் பிளாக்கரில் பதிவது என்பதை விளக்க முடியுமா.?
மிக்க நன்றி.
அன்பன்
தாஸ்
ktthas@yahoo.co.uk
நன்றி நண்பா!
மிக்க மகிழ்ச்சி நண்பா!
நன்றி நண்பா!
தங்கள் தளத்தில் யூட்யூப், வீடியோக்கள் உள்பட அதிகமான flash gadgets வைத்துய்ல்லீர்கள். இதனால் அந்த பிழை வரலாம்.
மிக்க மகிழ்ச்சி நண்பரே!
உங்களை மெயிலில் தொடர்பு கொள்கிறேன் நண்பரே!
உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன் நண்பரே!
நண்பருக்கு வணக்கம்..,
தங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு நேரம் கிடைப்பது என்பது அரிது என்பதை நான் அறிவேன். உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்கள் எனக்காக ஒதுக்கியதர்க்காக நன்றிகள் கோடி நண்பரே.
எனது மின்னஞ்சல் முகவரி.. varalatrusuvadugal@gmail.com
மிக்க நன்றி
மிக்க நன்றி தகவல்களுக்கு