ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-18]

நாம் பயணத்தில் இருக்கும் போதோ அல்லது மற்ற சமயங்களிலோ கணினியை அணுக முடியாமல் இருக்கலாம். சில நேரங்களில் ப்ளாக்கர் தளத்தை பார்க்க முடியாமல் இருக்கலாம். அது போன்ற சமயங்களில் மொபைல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பதிவிடும் வசதியை ப்ளாக்கர் தந்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

Blogger Dashboard => Settings => Mobile and Email பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.

Mobile:

மொபைல் மூலம் பதிவிடுவதற்கு SMS/MMS வசதி இருக்க வேண்டும். இந்த வசதி நமக்கு தேவையில்லாததால் இது பற்றிய வீடியோ மட்டும் இணைத்துள்ளேன். அதனை பார்க்கவும்.

Email:

Posting using email – இதில் நீங்கள் ரகசிய குறியீடு (எண் அல்லது எழுத்து) கொடுக்க வேண்டும். அதனுடன் சேர்த்து உங்களுக்கென்று தனி மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். அந்த முகவரிக்கு உங்கள் மின்னஞ்சலில் இருந்து மெயில் அனுப்பினால் அது பதிவாக எடுத்துக் கொள்ளப்படும்.

 • Publish email immediatly – நாம் அனுப்பும் மெயிலை உடனடியாக பிரசுரித்துவிடும்.
 • Save emails as draft post – நாம் அனுப்பும் மெயிலை பதிவிடாமல் Draft பகுதியில் வைத்திருக்கும்.
 • Disabled – இந்த வசதியை நிறுத்திவிடும்.

Comment Notification Email – இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் (பத்து முகவரிகள் வரை கொடுக்கலாம்) கொடுத்தால் நமது தளத்தில் பின்னூட்டங்கள் பிரசுரமானதும் நமது மெயிலுக்கு அது பற்றிய செய்தி அனுப்பும்.

Email Posts to – இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் (பத்து முகவரிகள் வரை கொடுக்கலாம்) உங்கள் தளத்தில் பதிவுகள் இட்டதும் அந்த பதிவு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். பதிவுகளை Backup எடுப்பதற்கு இது நல்ல வசதியாகும்.

இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் Language and Formatting பகுதியை பார்ப்போம்.

இதையும் படிங்க:  SEO - கூகுளில் முதல் பக்கத்தை பிடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

15 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-18]”

 1. வணக்கம் நண்பரே..

  இதில் தாங்கள் கடைசியாக குறிப்பிட்ட EMAIL POST TO பயன்பாடு இதுவரை அறியாமல் இருந்தேன்.முற்றிலுமாக அறிந்துகொண்டேன்.

  தொடரட்டும்

  நன்றியுடன்
  சம்பத்குமார்

 2. வணக்கம்,
  கீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.
  http://www.thamilworld.com/forum/index.php?showtopic=19026

 3. ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற இந்த தொடர் பதிவு என்னை போன்ற LKG-பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

  தொடரட்டும் இந்த தொடர் பதிவு…!