ப்ளாக்கர் அமைவுகளில் இறுதியாக இருப்பது “Other” பகுதியாகும். சில முக்கிய அமைவுகள் இந்த பகுதியில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Export Blog – நமது ப்ளாக்கில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்களை Backup எடுப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்து .xml கோப்பாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
Import Blog – நாம் ஏற்கனவே எடுத்திருந்த Backup கோப்பை பயன்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. ஒரு ப்ளாக்கில் இருந்து பதிவிறக்கியதை புதிய அல்லது வேறு ப்ளாக்கில் பதிவேற்றிக் கொள்ளலாம்.
அவ்வாறு Import செய்தபின் Post பகுதிக்கு சென்று, பதிவுகளை தேர்வு செய்து Publish என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Delete Blog – உங்கள் ப்ளாக்கை நீக்கிவிடுவதற்கு இது பயன்படுகிறது. அவ்வாறு Delete செய்த ப்ளாக்கை 90 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். அதன் பின் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். மேலும் நீக்கப்பட்ட ப்ளாக் பெயரில் வேறு புதிய ப்ளாக்கை நீங்கள் உருவாக்கலாம். மற்றவர்கள் அந்த பெயரில் உருவாக்க முடியாது.
உங்கள் டாஷ்போர்டில் இடதுபுறம் உள்ள Deleted Blogs என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் Delete செய்த வலைப்பூக்கள் வரும். அதில் Undelete என்பதை க்ளிக் செய்து வலைப்பூவை திரும்பப் பெறலாம்.
உங்கள் ப்ளாக் வயதுவந்தவர்களுக்கான தளம் என்றால் Yes என்றும், பொதுவானதாக இருந்தால் “No” என்றும் தேர்வு செய்ய வேண்டும். “Yes” என்பதை தேர்வு செய்தால் உங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் வரும் போது பின்வரும் எச்சரிக்கை செய்தி காட்டும்.
Google Analytics பற்றி ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். முன்பு அதில் நமக்கு கொடுக்கப்படும் நிரலை நம் ப்ளாக்கில் இணைக்க வேண்டும். தற்போது அதற்கு பதிலாக கூகிள் அனாலிடிக்ஸில் உள்ள ID-ஐ இங்கு கொடுத்தால் போதுமானது.
இந்த பகுதியில் உள்ள OpenID நமக்கு தேவையில்லாததால் அதனை தவிர்த்துவிட்டேன்.
இந்த பகுதியில் உள்ள Site Feed பற்றி இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் விரிவாக காணலாம்.
இந்த பதிவு மூலம் தெரியாத ஒன்றை கற்றுக்கொண்டேன்..தகவலுக்கு நன்றி ..நண்பா..
சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
நன்றி நண்பா
export & Import பயன்பாடுகளின் விளக்கம் அருமை ..,
விரிவான விளக்கம் ! நன்றி நண்பரே !