பதிவில் படத்தை இணைத்தப்பின் அதன் அளவை மாற்ற படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.
அவ்வாறு க்ளிக் செய்தபின் அதில் Small, medium, Large, X-Large, Original Size இவற்றில் ஒன்றை தேர்வு செய்து அளவை மாற்றலாம். மேலும் Left, Center, Right இவற்றில் ஒன்றை தேர்வு செய்து இடது, நடு, வலது புறத்தில் படத்தை தெரிய வைக்கலாம்.
– இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.
– இவை தமிழில் உள்பட பல மொழிகளில் தட்டச்சு செய்யவும் (Amma என்று டைப் செய்தால் அம்மா என்று வரும்), பதிவை வலதுப் பக்கத்திலிருந்து இடது பக்கமாகவோ, இடத்துப் பக்கத்திலிருந்து வலது பக்கமாகவோ தெரியவைக்கவும் பயன்படுகிறது.
இனி அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பற்றி பார்ப்போம்.
Labels – நாம் எழுதும் பதிவிற்கு தொடர்புடைய குறிச்சொற்களை இங்கு எழுத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் அம்மாவைப் பற்றி கவிதை எழுதினால் “அம்மா”, “கவிதை”, “பாசம்” என்பது போன்று குறிச்சொற்களை கொடுக்கலாம்.
Schedule – நீங்கள் எழுதும் பதிவை எப்பொழுது பிரசுரிக்க வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். Default-ஆக இது Automatic என்று இருக்கும். நீங்கள் எப்பொழுது Publish பட்டனை க்ளிக் செய்கிறீர்களோ, அப்பொழுது பிரசுரமாகும். இல்லையென்றால் Set Date and Time என்பதை க்ளிக் செய்து எப்பொழுது பிரசுரமாக வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு பதிவை மறுநாள் காலை பிரசுரமாக தேர்வு செய்தீர்கள் என்றால் மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இல்லையென்றாலும் தானாக பிரசுரமாகும். மேலும் ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளை இன்று பதிந்தது போலவும் மாற்றலாம்.
Location – இது உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பயன்படுகிறது. இதனை தவிர்ப்பது நலம்.
Options – இந்த பகுதியில் கீழுள்ள வசதிகள் உள்ளன.
Reader Comments – நீங்கள் எழுதும் அந்த பதிவில் வாசகர்கள் பின்னூட்டம் (Comment) இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். (இது மற்ற பதிவுகளை பாதிக்காது. எழுதும் அந்த பதிவிற்கு மட்டுமானது)
Compose Mode – Compose Mode-ல் வைத்து பதிவு எழுதும் போது HTML Code இணைத்தால், அது Code-ஆகவே தெரிவதற்கு “Show HTML literally” என்பதனையும், Code-ற்கு பதிலாக அதன் வெளியீடு தெரிவதற்கு “Interpret typed HTML” என்பதனையும் தேர்வு செய்யவும்.
Line Breaks – இது தேவையில்லை விட்டுவிடுங்கள். ( இரண்டும் முயற்சித்தேன். ஒன்றாகத் தான் உள்ளது)
பதிவு எழுதியப் பின் Publish என்பதை கொடுக்க வேண்டியது தான். கொடுத்தபின் அனைத்து பதிவுகளும் இருக்கும் Posts பக்கத்திற்கு வரும். அங்கு மேலே உள்ள View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கை பார்க்கலாம்.
என் மாதிரி தளத்தின் முதல் பதிவு:
உலவியின் மேலே முகவரி பெட்டியில் http://tamilnutpangal.blogspot.com/ என்று இருக்கும். அது உங்கள் ப்ளாக் முகவரி. பதிவின் தலைப்பை க்ளிக் செய்து பிறகு முகவரியை பார்த்தால் http://tamilnutpangal.blogspot.com/2011/11/blog-post.html என்று இருக்கும். இது அந்த குறிப்பிட்ட பதிவின் முகவரி. ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி முகவரிகள் இருக்கும்.
தகவலுக்கு நன்றி நண்பா
அருமையான விளக்கங்கள் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்
Nice bro.
thiratti.com il pathivai eppadi inathirgal nanbare
அட இவ்வளவு சீக்கிரமா அடுத்த தொடர் பதிவு வெளியாகியுள்ளது…???….
தொடருங்கள் சகோ…புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.
விளக்கங்கள் புரியும் படி தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி
வணக்கம் நண்பரே..
பயனுள்ள தகவலுக்கு நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
மிக அருமையான விளக்கம்
புதிய்வர்களுக்கு ரொம்ப தெளிவா இருக்கம் நான் ஆரம்பிக்க்ும் போது யாராவது இப்படி சொல்லி கொடுத்த் இருந்தா நல்ல இருந்திருக்கும்
மிகவும் அருமையான விளக்கம்.. புதியவர்களுக்கு பயனுள்ள பதிவு
நல்ல அழகான விளக்கத்துடன் உள்ளது தகவல் .பகிர்வுக்கு நன்றி நண்பா
இவை எல்லாவற்றையும் நானாக கற்றுக்கொல்வதற்கே வெகு நாட்கள் ஆனது. ஆனால், இதை புதியவர்களுக்கு எளிமைப்படுத்துயுள்ளீர்கள். அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றி நண்பரே!
புதிதாக வலைப்பூ தொடங்க வேண்டும் என ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பயனுள்ள வகையில் தெளிவாக புரியும்படி அருமையாக எழுதி வருகிறீர்கள் நண்பா தொடருங்கள்….
எனது நண்பர்கள் சிலர் வலைப்பூ ஆரம்பிப்பது பற்றி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் வேலைப்பளுவின் காரணமாக அவர்களுக்கு உதவ முடியாமல் இருக்கிறேன். இனி பிரச்சினையில்லை உங்களின் இந்த தொடரை பரிந்துரை செய்கிறேன் நன்றி நண்பா!
நல்ல விரிவான விளக்கத்துடன் பகிர்துள்ளீர்கள். புதியவர்களுக்கு மிக பயனுள்ளதகவல் . பகிர்வுக்கு நன்றி சகோ /
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அற்புதமான விள்க்கங்கள்!
அருமையான தமிழில்!!
1. என பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை என்னுடய google + ல் எனது பதிவுகளை தெரிவுபடுத்துவது எப்படி?
2.என பிளாக்கில் நான் செய்யும் post ல் pdf file add செய்வது எப்படி?
அன்பு நண்பருக்கு வணக்கம்! உங்களின் தளத்தை பார்த்துத் தான் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். என் தளத்தை பார்த்து (dindiguldhanabalan.blogspot.com) இன்னும் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? என்பதை கூறவும். தங்களுடைய இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நாம பதிவு எழுதும் பக்கத்தில் கீழே பப்லிஷ், ஸேவ், ப்ரிவ்யூ எல்லாம் இருக்கு. க்ளோஸ் ஆப்ஷன் இல்லியே? ஏன்?
//"என் ராஜபாட்டை"- ராஜா said… 1
தகவலுக்கு நன்றி நண்பா
//
நன்றி நண்பா!
//சி.பிரேம் குமார் said… 3
அருமையான விளக்கங்கள் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்
//
நன்றி நண்பா!
//Prabu Krishna said… 4
Nice bro.//
Thank You Bro.!
//Jaleela Kamal said… 5
மிக அருமையான விளக்கம்
புதிய்வர்களுக்கு ரொம்ப தெளிவா இருக்கம் நான் ஆரம்பிக்க்ும் போது யாராவது இப்படி சொல்லி கொடுத்த் இருந்தா நல்ல இருந்திருக்கும்
//
நன்றி சகோ.!
//சம்பத் குமார் said… 6
வணக்கம் நண்பரே..
பயனுள்ள தகவலுக்கு நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
//
நன்றி நண்பரே!
//Lakshmi said… 7
விளக்கங்கள் புரியும் படி தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி
//
நன்றிமா!
//நாம பதிவு எழுதும் பக்கத்தில் கீழே பப்லிஷ், ஸேவ், ப்ரிவ்யூ எல்லாம் இருக்கு. க்ளோஸ் ஆப்ஷன் இல்லியே? ஏன்?
//
நீங்கள் பழைய டாஸ்போர்ட் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். மேலே உள்ளது புதிய டாஷ்போர்டில் உள்ளது.
நண்பா எனக்கு ஒரு ஐயம், நாம் இந்த வலைப்பூவை வேறு ஒருவருக்கு டிசைன் செய்து,டொமைன் வாங்கி கொடுத்து பணம் ஈட்ட இயலுமா?
அவ்வாறு இயலும் என்றால் எவ்வளவு பணம்(in INR) வாங்கலாம்?
[மொறைக்காதீங்க நண்பர்களே சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்]
மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது… நன்றி..
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா… கவிதையும் அருமை நண்பா
Blog Tips (Read More Code)
http://thiruarun.blogspot.com/2011/11/blog-tips-read-more-code.html
உபயோகமான பதிவு
thanks
Nanba, just a week back I started a blog blindly and I was not knowing how to proceed further. Your lessons that too in Tamil are very easy to follow for a lay man like me. Thank you very much.
GOOGLE ADSENCE VANGA YEVALAVU NAL WAIT PANANUM
Blogspot முகவரியாக இருந்தால் குறைந்தது ஆறு மாதம் ஆகும். ஆனால் என் ஆங்கில தளத்திற்கு .com டொமைன் வைத்து சமர்ப்பித்தேன். ஓரிரு மாதங்களுக்குள் கிடைத்துவிட்டது.
பதிவுகள் சிலவும், வாசகர்கள் வருகையும் ஓரளவு இருக்க வேண்டும்.
சகோ நாம் பதிவை எழுதும் போது சொற்கள் சரியான அமைவிலும்
அதன் பின் preweu வைப்ப பார்க்கும்போது சொற்கள் மேலும் கீழுமாக
தோற்றம் அளிக்கின்றதே .ஒரு பெரிய ஆக்கம் எழுதும்போது
இவைகளை சரி செய்ய பெரும் சிரமமாக உள்ளது .உதாரணதிற்கு
எனது கடைசி ஆக்கத்தில் தோழி மஞ்சுபாசினி அவர்கள் இட்டிருக்கும்
கருத்தினைப் பாருங்கள் இதுபோன்று என் வலைதளத்தின் இடைவெளிக்கு
ஏற்ப ஆக்கம் எழுதுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?….(இந்தத்
தகவலும் பலருக்கும் தேவைப்படும் என்றே நான் கருதுகின்றேன் ).
சகோ.! அவ்வாறு மாறுபடுவதற்கு, பதிவெழுதும் பக்கத்தின் அகல அளவும், பதிவின் அகல அளவும் வேறாக இருப்பது தான் காரணம்.
நீங்கள் பதிவெழுதும் போது Alignment பகுதியில் (இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.) சரி செய்யுங்கள்.
நான் உங்களின் பிளாக்கர் நண்பன் பார்த்து தான் ப்ளாக் ஆரம்பித்துள்ளேன்
மிக்க நன்றி
Enter your comment…பதிவு அருமை