ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-21]

நம்முடைய தளங்களில் பதியப்படும் புதிய பதிவுகள், கருத்துக்களை உடனடியாக சேகரிப்பதற்கு RSS (Realy Simple Syndication) Feed பயன்படுகிறது. இது தமிழில் செய்தியோடை எனப்படும். அது பற்றிய அமைவுகளை இங்கு பார்ப்போம்.

Blogger Dashboard => Settings => Other பகுதிக்கு சென்றால் அங்கு Site Feed என்னும் பகுதி இருக்கும்.

Allowing Blog Feed – செய்தியோடையை அனுமதிப்பதற்கான அமைவாகும். இதில் None என்பதைத் தவிர எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். நீங்கள் Feedburner பயன்படுத்தினால் Full என்பதை வைக்க வேண்டாம். சில சமயம் பெரிய பதிவுகளை திரட்டுவதில் பிரச்சனை வரலாம்.

Post Feed Redirect URL – நீங்கள் Feedburner பயன்படுத்தினால் அந்த முகவரியை இங்கு கொடுக்கவும்.

Post Feed Footer – செய்தியோடையில் ஒவ்வொரு பதிவிற்கும் கீழே ஏதாவது எழுத, வைக்க நினைத்தால் அதனை வைக்கலாம். HTML நிரலையும் பயன்படுத்தாலாம். குறிப்பாக விளம்பரங்கள் வைக்கலாம்.

இதனை வைப்பதற்கு Allow Blog Feed பகுதியில் Full என்று இருக்க வேண்டும்.

Rss Enclosure Links – செய்தியோடையில் ஆடியோ, வீடியோ கோப்புகளை இணைப்பதற்கு இது பயன்படுகிறது. இதில் Yes என்று கொடுத்தால் பதிவெழுதும் பக்கத்தில் இந்த வசதி வரும்.

பதிவெழுதும் பக்கத்தில் வலது புறம் Enclosure Links என்று இருக்கும். அங்கு முதல் பெட்டியில் கோப்புகளின் முகவரியை கொடுக்க வேண்டும். இரண்டாம் பெட்டி தானாகவே பூர்ர்த்தியாகிவிடும்.

பிறகு செய்தியோடையில் அது சேர்ந்து விடும். கூகிள் ரீடரில் பார்த்தால் பின்வருமாறு இருக்கும்.

Feedburner இந்த வசதியை எடுத்துக் கொள்ளவில்லை.

Feedburner என்றால் என்ன?

Feedburner என்பதி செய்தியோடைகளை சேகரிப்பதற்கான கூகிள் தளத்தின் வசதியாகும். Feedburner.com முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.

புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள அனைத்து அமைவுகளையும் பார்த்துவிட்டோம். சில அமைவுகளுக்கு நாம் பழைய டாஷ்போர்டை பயன்படுத்த வேண்டும். புதிய டாஷ்போர்டில் இல்லாத பழைய டாஷ்போர்டில் உள்ள சில அமைவுகளைப் பற்றி இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இதையும் படிங்க:  2013-ல் சிறந்த 10 பதிவுகள்

16 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-21]”

  1. இன்றுதான் இதைப் பற்றி அறிகிறேன்.நன்றி.
    //உடனடியாக சேகரிப்பதற்கு RSS (Realy Simple Syndication) Feed பயன்படுகிறது//
    இதன் அர்த்தம் எவ்வளவு நேரத்திற்குள்.

    &இப்படி செய்வதன் மூலம் கூகுளில் சில பிரச்சனைகள் வரும்போது பதிவுகள்,கமெண்ட்ஸ்கள் காணாமல் போகுதே!அதை இதன் மூலம் தவிர்க்கலாமா?

  2. மிகவும் அருமையான தளம். உபயோகமான தகவல்கள். நண்பரே தங்களின் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!