ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-4]

ப்ளாக் தொடங்குவது பற்றியும், புதிய பதிவு எழுதுவது பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம். தற்போது ப்ளாக்கர் ப்ரொஃபைல் (Blogger Profile) பற்றி பார்ப்போம்.

(ப்ளாக்கர்) ப்ரோஃபைல் என்பது உங்களைப் பற்றிய சுயவிவரப் பக்கமாகும். இதன் மூலம் வாசகர்கள் உங்களைப் பற்றி அறிந்துக் கொள்வார்கள். இதனை திருத்தம் செய்வது பற்றி பார்ப்போம்.

நீங்கள் ப்ளாக்கர் டாஷ்போர்ட் சென்றால் அங்கு மேலே வலதுபுறம் உங்கள் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.

அதில் Blogger Profile என்பதை க்ளிக் செய்தால் பின்வரும் பக்கம் வரும்.

அதில் User Stats என்ற இடத்தில் நீங்கள் எப்பொழுது பிளாக்கரில் இணைந்தீர்கள்? என்பதையும், உங்கள் ப்ரோஃபைல் பக்கத்தை எத்தனை நபர்கள் பார்த்தார்கள்? என்பதையும் என்பதையும் காட்டும். ப்ரொஃபைலில் திருத்தம் செய்ய Edit Profile என்பதை சொடுக்கவும்.

 இதில் சிலவற்றை மற்றும் இங்கு பார்ப்போம். மற்றவைகளை விருப்பமிருந்தால் பூர்த்தி செய்யலாம்.

Share My Profile – உங்கள் சுயவிவரப் பக்கம் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும்.

Show My Email Address– உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும். ( இதனை தெரியாமல் வைப்பதே நல்லதாகும். ஏனெனில் இதனால் ஸ்பாம் மெயில்கள் வர வாய்ப்புள்ளது. இது பற்றி மேலும் அறிய ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்  என்ற பதிவை பார்க்கவும்)

Show My Blogs – நீங்கள் உருவாக்கியத் தளங்கள் தெரிய வேண்டுமா? என்பதை  Select blogs to display என்பதை க்ளிக் செய்து தேர்வு செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள் இருந்தால் குறிப்பிட்டவற்றை மட்டும் தெரிய வைக்கலாம்.

Show Sites I Follow – நீங்கள் பின்தொடரும் தளங்கள் மற்றவர்களுக்கு தெரிய  வேண்டும் என்றால் பெட்டியில் டிக் செய்யவும். வேண்டாம் என்றால் வெறுமனே விட்டுவிடவும். [மற்ற தளங்களை பின்தொடர்வது பற்றி இறைவன் நாடினால் இத்தொடரில் பிறகு பார்ப்போம்)

Photograph – உங்கள் ப்ரோஃபைலிற்கான புகைப்படம் இணைக்கலாம்.

Home Page URL – இங்கு உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்.

மேலும் பல இடங்களில் உங்களுக்கு விருப்பமானதை பூர்த்தி செய்யலாம் அல்லது வெறுமனே விட்டுவிடலாம். பூர்த்தி செய்த பின் Save profile என்பதை க்ளிக் செய்யவும்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-18]

பிறகு View Updated Profile என்பதை க்ளிக் செய்தால் உங்கள் ப்ரொஃபைல் பின்வருமாறு இருக்கும்.

மீண்டும் ப்ளாக்கர் டாஷ்போர்ட் பக்கத்திற்கு செல்ல ப்ளாக்கர் லோகோவை க்ளிக் செய்து செல்லலாம்.


ப்ரொபைல் பக்கம் எங்கு தெரியும்?

நீங்கள் மற்ற தளங்களில் பின்னூட்டம் இட்டால் உங்கள் ப்ரொஃபைல் பக்கத்திற்கான இணைப்பு வரும். மேலும் உங்கள் ப்ளாக்கில் ப்ரொஃபைல் Gadget வைத்தால்உங்கள் ப்ளாக்கில் தெரியும். ( Gadget என்பதை பற்றியும் இறைவன் நாடினால் பிறகு பகிர்கிறேன்.)

கவனிக்க: சமீபத்தில் ப்ளாக்கர் சுயவிவரப்பக்கத்திற்கு பதிலாக கூகிள் ப்ளஸ் சுயவிவரப் பக்கத்தை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது ப்ளாக்கர் தளம். அதை பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்க்கவும்.

இறைவன் நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

15 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-4]”

  1. தொடர் ஜெட் வேகம் பிடிக்கிறது நண்பரே..

    தொடரட்டும் தங்களது பணி

    புதுவரவுகள் தங்கள் தளத்தினை புக்மார்க் செய்து கொள்ள போவதில் துளிகூட சந்தேகமில்லை

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்