ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5]

ப்ளாக் ஒன்றை நாம் உருவாக்கியப் பின் மற்றவர்களிடம் அதனை அறிமுகப்படுத்துவதற்கு முன் ப்ளாக்கர் பற்றி நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். ப்ளாக்கரில் உள்ள அமைவுகளைப் பற்றி இனி பார்ப்போம்.

இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ப்ளாக்கர்  முகப்பு பக்கத்தில் (டாஷ்போர்டில்) நாம் உருவாக்கிய ப்ளாக்கின் அமைவுகள் பின்வருமாறு இருக்கும்.

ப்ளாக்கின் பெயருக்கு கீழே,

நமது ப்ளாக்கின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? (Pageviews)

எத்தனை பதிவுகள் நமது ப்ளாக்கில் உள்ளது? (பிரசுரிக்கப்படாமல் Drafts பகுதியில் உள்ள பதிவுகளையும் சேர்த்து காட்டும்.)

எத்தனை நபர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்கிறார்கள்? என்பதைக் காட்டும். இவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அதே  பகுதியில் வலதுபுறம் மூன்று பட்டன்கள் இருக்கும்.

  – புதிய பதிவு எழுதுவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.

  – நமது ப்ளாக்கை பார்க்க இதனை க்ளிக் செய்யுங்கள்.

  -இந்த பட்டனில் இடது புறம் க்ளிக் செய்தால் அனைத்து பதிவுகளும் இருக்கும் All Posts பகுதிக்கு செல்லலாம். வலது புறம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.

இதை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

Overview:

Overview என்பதை க்ளிக் செய்தால் நமது ப்ளாக் பற்றிய விவரங்களை மேலோட்டமாக காட்டும்.

Pageviews:

நமது  ப்ளாக்கின் பக்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்பதை சிறிய விளக்கப்படமாகக் காட்டும். அதற்கு கீழே அதிகமான வாசகர்களை நமது தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் மூன்று தளங்களைக் காட்டும்.

Updates:

நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள், பிரசுரித்த பின்னூட்டங்கள், இன்று நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்டவைகள், மொத்தப் பதிவுகள், நமது ப்ளாக்கை பின்தொடற்பவர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகளை காட்டும்.

News from Blogger: 

ப்ளாக்கரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள் பற்றியும், புதிய செய்திகளைப் பற்றியும் http://buzz.blogger.com/ என்ற ப்ளாக்கில் ப்ளாக்கர் தளம் பதிவிட்டு வருகிறது. அதில் பதியப்பட்ட சமீபத்திய பதிவுகளை இங்கு காட்டும்.


Recent Blogs of Note:

சிறந்த ஆங்கில ப்ளாக்கர் தளங்களை தினமும் http://blogsofnote.blogspot.com/ என்ற தளத்தில் ப்ளாக்கர் தளம் பகிர்கிறது. அவற்றை இங்கு காட்டும்.


Blogger Guide:

பதிவர்களுக்கு பயன்படும் வகையில் சில உதவிக் குறிப்புகளை இங்கு காட்டும். அந்த இணைப்புகளை சொடுக்கி தெரிந்துக் கொள்ளலாம்.

இறைவன் நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்தப் பகுதிகளில் பார்ப்போம்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? - Word Verification [பகுதி - 22]

26 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-5]”

  1. இதெல்லாம் நான் பாத்ததே இல்ல, நேரா டாஷ்போர்டுக்கு தான் போவேன் இப்போதான் பாக்குறேன், நன்றி…

    Reply
  2. ப்ளாக்கரின் புதிய டாஷ் போர்டை பற்றி சொல்லியிருப்பது, பழையவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி!

    Reply
  3. எனது பிளக்கை பார்க்க முடியவில்லை
    Blog has been removed
    Sorry, the blog at ganeshdigitalvideos.blogspot.com has been removed. This address is not available for new blogs.

    Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the web, where is it?'

    என்று வருகிறது எப்படி எனது பிளக்கை மீட்பது?

    my email ; ganeshtnebgobi@gmail.com

    Reply
  4. பதிவில் மற்றொரு பிளாக்கிற்கு லிங்க் கொடுப்பது,பதிவில் வீடியோ எப்படி இணைப்பது என்பதையும் கூறுங்களேன்.பதிவுக்கு நன்றி.தொடர்கிறேன்.

    Reply
  5. எனது தளத்தில் நான்
    Posts and comments–post—Show at most இல் 10 post இணை விட்டுள்ளேன்
    ஆனால் எனது main page இல் 3 அல்லது 1 post இணையே கட்டுகின்றது இதனை எவ்வாறு சரி செய்வது ???

    http://2.bp.blogspot.com/-xH9RADonjUs/Ts0eNEA_xoI/AAAAAAAAAV4/FvQA9Ek-GpE/s1600/vvbv.jpg
    http://4.bp.blogspot.com/-up73MCw2its/Ts0eJSwVIWI/AAAAAAAAAVw/9x3fBeivm1w/s320/bbbbb.jpg

    Reply
  6. //Heart Rider said… 2

    இதெல்லாம் நான் பாத்ததே இல்ல, நேரா டாஷ்போர்டுக்கு தான் போவேன் இப்போதான் பாக்குறேன், நன்றி…//

    நானும் பார்ப்பதில்லை நண்பா…! 🙂 :):)

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!

    Reply
  7. //Lakshmi said… 4

    புது டாஷ்போர்ட் தெரியனும்னா என்ன பண்ணனும்?
    //

    டாஷ்போர்ட் மேலே வலதுபுறம் Try the updated Blogger interface என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தால் புதிய டாஷ்போர்டிற்கு மாறிவிடும்.

    Reply
  8. //coolnewcinema said… 5

    எனது தளத்தில் நான்
    Posts and comments–post—Show at most இல் 10 post இணை விட்டுள்ளேன்
    ஆனால் எனது main page இல் 3 அல்லது 1 post இணையே கட்டுகின்றது இதனை எவ்வாறு சரி செய்வது ???

    http://2.bp.blogspot.com/-xH9RADonjUs/Ts0eNEA_xoI/AAAAAAAAAV4/FvQA9Ek-GpE/s1600/vvbv.jpg
    http://4.bp.blogspot.com/-up73MCw2its/Ts0eJSwVIWI/AAAAAAAAAVw/9x3fBeivm1w/s320/bbbbb.jpg//

    நீங்கள் பதிவுகளை ms word-ல் எழுதி அதனை நேரடியாக compose mode-ல் paste செய்தால் இந்த பிரச்சனை வரும். வேர்டிலிருந்து காப்பி செய்து நேரடியாக பதிவதாக இருந்தால் html mode-ல் வைத்து பேஸ்ட் செய்து பிறகு compose mode-ற்கு மாறிக் கொள்ளலாம்.

    தற்போது இந்த பிரச்னையை சரி செய்ய பழைய பதிவுகளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும். அவைகளை கட் செய்து edit html-ல் வைத்து பேஸ்ட் செய்ய வேண்டும்.

    Reply
  9. //சம்பத் குமார் said… 6

    பகிர்விற்க்கு நன்றி நண்பரே..
    //

    நன்றி நண்பரே!

    Reply
  10. //Anonymous said… 7

    பதிவில் மற்றொரு பிளாக்கிற்கு லிங்க் கொடுப்பது,பதிவில் வீடியோ எப்படி இணைப்பது என்பதையும் கூறுங்களேன்.பதிவுக்கு நன்றி.தொடர்கிறேன்.//

    லிங்க் கொடுப்பது பற்றி பிறகு எழுதுகிறேன் நண்பரே! வீடியோ இணைப்பது பற்றி அறிய ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.

    Reply
  11. //ganesh moorthi said… 8

    எனது பிளக்கை பார்க்க முடியவில்லை
    Blog has been removed
    Sorry, the blog at ganeshdigitalvideos.blogspot.com has been removed. This address is not available for new blogs.

    Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the web, where is it?'

    என்று வருகிறது எப்படி எனது பிளக்கை மீட்பது?//

    நண்பா! தங்களுக்கு சகோ. பலே பிரபு அவர்களின் இந்த பதிவு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    Delete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி?

    Reply
  12. //வே.சுப்ரமணியன். said… 9

    ப்ளாக்கரின் புதிய டாஷ் போர்டை பற்றி சொல்லியிருப்பது, பழையவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி!
    //

    நன்றி நண்பா!

    Reply
  13. //மாய உலகம் said… 10

    உபயோகமான பகிர்வு நண்பா… நன்றி நண்பா !//

    நன்றி நண்பா!

    Reply
  14. வரிசையாகப் படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. யாரிடம் கேட்பது என்று இருக்கும் சந்தேகங்கள் எற்கெனவே இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தன. இன்னும் தெரியாத விவரங்கள் தெரியும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

    Reply
  15. //ஸ்ரீராம். said… 21

    வரிசையாகப் படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. யாரிடம் கேட்பது என்று இருக்கும் சந்தேகங்கள் எற்கெனவே இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்தன. இன்னும் தெரியாத விவரங்கள் தெரியும் என்றும் எதிர்பார்க்கிறேன்.//

    தங்கள் சந்தேகங்கள் தீர்ந்ததில் மகிழ்ச்சி நண்பா!

    Reply
  16. //Lakshmi said… 23

    புதுடாஷ் போர்ட் கொஞ்சம் குழப்பமா இருக்கு (அதாவது புதுசா பதுவு எழுத). )மீண்டும் பழைய டாஷ்போர்ட் வேனும்னா என்ன பண்ணனும்.//

    டாஷ்போர்ட் மேலே Switch Back என்பதை க்ளிக் செய்தால் பழையபடி மாறிவிடும்.

    Reply

Leave a Reply