ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-6]

ப்ளாக் தொடங்குவது பற்றிய இத்தொடரில் மேலும் சிலவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

  
ப்ளாக்கர்  டாஷ்போர்டில் More options பட்டனில் Overview-க்கு அடுத்ததாக Posts என்று இருக்கும். அதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.



அதில் இடது புறம் All, Drafts, Published என்று இருக்கும்.

 All – இதனை க்ளிக் செய்தால் நீங்கள் எழுதிய, பிரசுரித்த அனைத்து பதிவுகளையும் காட்டும்.


Draftஇதனை க்ளிக் செய்தால் நீங்கள் பாதி எழுதி பிரசுரிக்காத பதிவுகளை மட்டும் காட்டும்.


Publishedஇதனை க்ளிக் செய்தால் நீங்கள் பிரசுரித்த பதிவுகளை மட்டும் காட்டும்.
———————————————————————————————————
உங்கள் பதிவின் பெயருக்கு பக்கத்தில் நீங்கள் அந்த பதிவிற்கு இட்ட குறிச்சொற்களை (Labels) காட்டும். அதற்கு கீழே பின்வரும் தேர்வுகள் இருக்கும்.

Edit – இதனை க்ளிக் செய்து பதிவில் திருத்தம் செய்யலாம். (திருத்தம் செய்யும் போது Publish என்ற பட்டனுக்கு பதிலாக Update என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.)

View – அந்த பதிவை ப்ளாக்கில் பார்ப்பதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள்.

Delete – பதிவை நீக்குவதற்கு இதனை க்ளிக் செய்யுங்கள். நீக்கப்பட்ட பதிவை திரும்ப பெற முடியாது என்பதை நினைவில் வைக்கவும்.

கவனிக்க: பிரசுரிக்கப்பட்ட பதிவை ப்ளாக்கில் இருந்து நீக்க வேண்டும், ஆனால் அதனை டாஷ்போர்டில் வைத்திருக்க வேண்டும் என நினைத்தால், Edit என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Revert to draft என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பதிவு ப்ளாக்கிளிருந்து நீக்கப்படும். மேலும் அது Draft பகுதியில் இருக்கும். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அதனை பிரசுரிக்கலாம்.

இதனை Posts பகுதியில் இருந்தும் செய்யலாம்.

Posts பகுதியில் மாற்றம் செய்ய வேண்டிய பதிவுகளை தேர்வு செய்து, அதன் மேலே  Revert to Draft என்ற பட்டனை க்ளிக் செய்தால், அந்த பதிவுகள் Draft பகுதிக்கு சென்றுவிடும்.

Labels:

ஒன்றுக்கும் அதிகமான பதிவுகளில் புதிதாக குறிச்சொற்களை (Labels)   சேர்க்கவும், ஏற்கனவே உள்ள குறிச்சொற்களை நீக்கவும் செய்யலாம்.

அப்படி செய்வதற்கு எந்த பதிவுகளில் மாற்றம் செய்ய வேண்டுமோ, அவற்றை தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.

தேர்வு செய்த பின்    என்றபட்டனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.

புதிதாக குறிச்சொற்களை சேர்க்க New label என்பதை க்ளிக் செய்து புதிய குறிச்சொற்களை கொடுக்கவும்.

ஏற்கனவே ஒரு பதிவில் இருக்கும் குறிச்சொற்களை தேர்வு செய்துள்ள அனைத்து பதிவுகளுக்கும் கொடுக்க Apply Label என்பதற்கு கீழே உள்ளவற்றில் க்ளிக் செய்யவும்.

இதையும் படிங்க:  கூகுள் பே மூலம் தங்கம் வாங்கலாம்

ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் உள்ள குறிச்சொற்களை நீக்க, Remove Label என்பதற்கு கீழே உள்ளவற்றில் நீக்க வேண்டிய குறிச்சொற்களை க்ளிக் செய்யவும்.

இறைவன் நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்தப் பகுதிகளில் பார்ப்போம்.


Image Credit: http://www.openhazards.com/

14 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-6]”

  1. //பிறகு Revert to draft என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பதிவு ப்ளாக்கிளிருந்து நீக்கப்படும். மேலும் அது Draft பகுதியில் இருக்கும். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அதனை பிரசுரிக்கலாம்.//

    இதுவரை இந்த ஆப்சன் எதற்கு என்றே தெரியாமல் இருந்ததது நண்பரே

    தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி

  2. என்னத்த புதுசா சொல்ல போறிங்கனு நினைச்சேன்,ஆன நான் இது வரை தெரியாத விஷயமும் இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.பணி தொடறனும். . . . . . . . .

  3. ப்ளாக் தொடங்கும் அனைத்து நண்பர்களுக்கும் (என்னையும் சேர்த்து) மிகவும் அவசியமான பதிவு. இன்னும் நிறைய விஷயங்கள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி நண்பரே!