ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]

வலைப்பதிவுகளில் (Blogs) முக்கியமான ஒன்று, பின்னூட்டங்கள் (Comments). நாம் எழுதும் பதிவுகளைப் பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும், பதிவு பிடித்திருந்தால் பாராட்டவும், பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்  இவ்வசதி பயன்படுகிறது. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 ப்ளாக்கர் டாஷ்போர்ட் பகுதியில் More Options பட்டனை கிளிக் செய்து, Comments என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதை கிளிக் செய்தவுடன் Published Comments பகுதிக்கு செல்லும்.  

Comments பகுதியில் வாசகர்கள் இட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டமிட்ட பதிவின் தலைப்பு, பின்னூட்டமிட்ட நாள், பின்னூட்டமிட்டவரின் பெயர் ஆகிய விவரங்கள் இருக்கும். மேலும் Comments பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். 


Published – பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள் 

Awaiting Moderation – நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள்

Spam – எரித பின்னூட்டங்கள் (தேவையில்லாத, விளம்பரத்திற்காக கொடுக்கப்படும் பின்னூட்டங்கள்)



Published:




Published பகுதியில் இதுவரை பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும். அந்தந்த பின்னூட்டங்களின் மேலே மவுஸை கொண்டு போனால் மூன்று தேர்வுகள் காட்டும். 


Remove Content – ஏதாவது அநாகரிகமான பின்னூட்டங்கள் வந்தால் அதனை நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் பின்னூட்டம் இட்டவரின் பெயர் இருக்கும். அவர் சொன்னவை மட்டும் நீக்கப்பட்டிருக்கும்.

Delete – பின்னூட்டத்தையும், பின்னூட்டம் இட்டவரின் பெயரையும் சேர்த்து நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். (ஒருமுறை நீக்கிவிட்டால் அதனை திரும்பப் பெற முடியாது)

Spam –  பின்னூட்டங்களை ப்ளாக்கில் பிரசுரிக்காமல் Spam பகுதியில் வைக்க இதனை கிளிக் செய்யுங்கள்.

Awaiting Moderation:

Awaiting Moderation பகுதியில் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள் இருக்கும். இதில் Publish, Delete, Spam என்று மூன்று தேர்வுகள் இருக்கும். 

Spam:




Spam பகுதியில் எரித (தேவையில்லாத) பின்னூட்டங்கள் இருக்கும். தானியங்கி முறையில் சில பின்னூட்டங்களை Spam பகுதிக்கு அனுப்பிவிடுகிறது ப்ளாக்கர். அதில் சில நல்ல பின்ன்னோட்டங்களும் இருக்கும். அது போன்ற பின்னூட்டங்களை பிரசுரிக்க Not Spam என்பதை கிளிக் செய்யுங்கள்.


கவனிக்க: ப்ளாக்கரில் Default-ஆக பின்னூட்டங்கள் உங்கள் அனுமதியில்லாமலேயே பிரசுரமாகும். மேலும் வாசகர்கள் பின்னூட்டமிடும் போது Word Verification கேட்கும். இவைகளைப் பற்றி இறைவன் நாடினால் Settings பகுதியில் பார்ப்போம்.


இறைவன் நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்தப் பகுதிகளில் பார்ப்போம்.

இதையும் படிங்க:  பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்

23 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]”

  1. மாப்ள நல்லா சொல்லிட்டு வர்றீங்க நானும் தொடருகிறேன்…என்னோட ப்ளோக்ல பதிவுகளை திரட்டிகளில் பல முறை இணைத்தும் இணைய மறுக்கின்றன…ஏனென்று கொஞ்சம் விளக்க முடியுமா…நேரம் இருந்தால்!

  2. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    ஒரு பதிவரின் பின்னூட்டத்தை spam-ல் வைத்திருந்தால், இனி அவர் போடும் பின்னூட்டம் எல்லாம் spam-க்கு தானாகவே சென்று விடுமா..? அல்லது, அவரின் அந்த ஒரு பின்னூட்டம் spam-ல் இருக்கும் காலம்வரை அவரால் வேறு பின்னூட்டத்தை அந்த பிளாக்கில் இடவே முடியாதா..?

    (என்னை வைத்து சோதிக்க வேண்டாம்–இந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவும்.) 🙂

  3. ஸலாம்
    இதை படித்துவிட்டேன் ….
    நானும் ப்ளாக் தொடங்க ஆவலா இருக்கிறேன் ….
    தேவை பட்டால் உதவியை கேட்கிறேன் …
    இறைவன் நாடினால் ….

  4. //விக்கியுலகம் said… 1

    மாப்ள நல்லா சொல்லிட்டு வர்றீங்க நானும் தொடருகிறேன்…//

    நன்றி நண்பரே!

    //என்னோட ப்ளோக்ல பதிவுகளை திரட்டிகளில் பல முறை இணைத்தும் இணைய மறுக்கின்றன…ஏனென்று கொஞ்சம் விளக்க முடியுமா…நேரம் இருந்தால்!
    //

    தங்களிடம் இது பற்றி பேசுகிறேன்.

  5. //நல்லதை தேடி said… 4

    ஸலாம்
    இதை படித்துவிட்டேன் ….
    நானும் ப்ளாக் தொடங்க ஆவலா இருக்கிறேன் ….
    தேவை பட்டால் உதவியை கேட்கிறேன் …
    இறைவன் நாடினால் ….//

    வ அலைக்கும் ஸலாம்.

    கண்டிப்பாக கேளுங்கள், காத்திருக்கிறேன்.

  6. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said… 5

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    ஒரு பதிவரின் பின்னூட்டத்தை spam-ல் வைத்திருந்தால், இனி அவர் போடும் பின்னூட்டம் எல்லாம் spam-க்கு தானாகவே சென்று விடுமா..? அல்லது, அவரின் அந்த ஒரு பின்னூட்டம் spam-ல் இருக்கும் காலம்வரை அவரால் வேறு பின்னூட்டத்தை அந்த பிளாக்கில் இடவே முடியாதா..?

    (என்னை வைத்து சோதிக்க வேண்டாம்–இந்த பின்னூட்டத்தை அனுமதிக்கவும்.) :-)//

    வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    இல்லை சகோ. நீங்கள் ஒருவர் இட்ட பின்னூட்டத்தை ஸ்பாம் பகுதியில் வைத்தால், மீண்டும் அவர் இடும் பின்னூட்டங்கள் ஸ்பாம் பகுதிக்கு செல்லாது.

    ப்ளாக்கர் தளம் தானியங்கி முறையில் பின்னூட்டத்தில் இருக்கும் வார்த்தைகளை வைத்து ஸ்பாம் என முடிவு செய்கிறது.

  7. //சம்பத் குமார் said… 6

    பகிர்விற்க்கு நன்றி நண்பரே..

    பயணம் தொடரட்டும்..

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

  8. //வே.சுப்ரமணியன். said… 9

    புதியவர்களுக்கு மிக முக்கியமான பதிவு நண்பரே! மிக்க நன்றி!
    //

    நன்றி நண்பரே!

  9. //shameem said… 10

    எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ப்ளாக் துவங்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது உங்கள் ப்ளாக் தொடர்ந்து பார்த்து ஒரு ப்ளாக் துவங்கி உள்ளேன் .http://shammeem.blogspot.com
    //

    மிக்க மகிழ்ச்சி. தற்போது உள்ள டெம்ப்ளேட்டுக்கு பதிலாக வேறு ஒரு டெம்ப்ளேட்டை மாற்றவும். இறைவன் நாடினால் இதை பற்றி இத்தொடரில் Template பற்றி எழுதும் போது குறிப்பிடுகிறேன்.