நமது ப்ளாக்கை நம் விருப்பப்படி வடிவமைக்க நமக்கு உதவுவது Layout மற்றும் Template பகுதிகள் ஆகும். முதலில் Layout பகுதியை பற்றி விரிவாக பார்ப்போம். நீங்கள் பழைய டாஷ்போர்டை பயன்படுத்தி வந்தால் அதில் Layout என்பதற்கு பதிலாக Design என்று இருக்கும்.
ப்ளாக் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய வார்த்தைகள்:
Gagdets or Widgets – பலவிதமான பயன்களைத் தரும் சின்ன சின்ன கருவிகளாகும். இதனை நம் ப்ளாக்கில் மேல, கீழே, பக்கவாட்டில் என்று பல இடங்களில் வைப்போம்.
Template – ப்ளாக்கின் தோற்றம். ப்ளாக்கரில் உள்ள பல்வேறு டெம்ப்ளேட்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதில் எதுவும் பிடிக்கவில்லையெனில் மற்ற தளங்களில் இருந்தும் பதிவிறக்கி பயன்படுத்தலாம். அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options என்ற பட்டனை க்ளிக் செய்து, Layout என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அதை க்ளிக் செய்தவுடன் பின்வருமாறு வரும்.
பொதுவாக ஒரு ப்ளாக் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதனை மேலுள்ள படத்தில் பார்க்கலாம்.
1. Header – ப்ளாக்கின் தலைப்பு பகுதி. இங்கு உங்க ப்ளாக்கின் பெயர் மற்றும் விளக்கம் வரும். அல்லது அதற்கு பதிலாக படங்களையும் வைக்கலாம்.
2. Posts – நம்முடைய பதிவுகள் உள்ள பகுதி.
3. Sidebar – பக்கவாட்டில் உள்ள பகுதிகள். வலது புறம் உள்ளது Right Sidebar, இடதுபுறம் உள்ளது Left Sidebar. சில தளங்களில் ஒரு பக்கம் மட்டும் இருக்கும், சில தளங்களில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும்.
4. Footer – ப்ளாக்கின் கீழே உள்ள பகுதி.
இந்த பக்கத்தில் மேலே, “Add, remove and edit gadgets on your blog. Click and drag to rearrange gadgets. To change columns and widths, use the Template Designer.” என்று இருக்கும். அதில் Template Designer என்பதைத் தான் க்ளிக் செய்ய வேண்டும்.
Template Designer என்பது நம்முடைய ப்ளாக் தோற்றத்தை எளிதாக நம் விருப்பப்படி மாற்றுவதற்கான கூடுதல் வசதியாகும்.
Template Designer என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
மேலே நாம் மாற்றங்கள் செய்ய, செய்ய அதன் முன்னோட்டத்தை கீழே காட்டும்.
மேலே இடது புறம் ஐந்து விருப்பங்கள் இருக்கும். அவைகள் சற்று பெரிது என்பதால், இறைவன் நாடினால் அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.
Image Credit: Geekprison.com
நல்ல பயனுள்ள தகவல்கள். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
//கும்மாச்சி said… 1
நல்ல பயனுள்ள தகவல்கள். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களை எப்படி தொடர்பு கொள்வது?//
நன்றி நண்பரே! ப்ளாக்கின் மேலே "என்னை தொடர்பு கொள்ள" என்பதை க்ளிக் செய்து செய்தி அனுப்பலாம். அல்லது basith27[at]gmail.com என்ற முகவரிக்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பலாம்.
அருமை தோழரே
ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகளை உருவாக்கலாம்
மாப்ள அழகா சொல்லிட்டு வர்றீங்க…தொடருகிறேன் நன்றி!
புது டாஷ்போர்ட் பயன்படுத்துவதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. இப்ப நீங்க ஒன்னொன்னா விரிவா சொல்லிவருபோது புரியுது.
useful post. next……