ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-11]

கடந்த பகுதியில் சொன்னது போல Template Designer என்பது நம்முடைய ப்ளாக்கை வடிவமைப்பதற்கு ப்ளாக்கர் தளம் தந்துள்ள கூடுதல் வசதியாகும். இதில் ஐந்து விதமான வசதிகள் இருக்கிறது. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Template Designer பகுதிக்கு சென்றால் அங்கு மேலே இடதுபுறம் ஐந்து விருப்பங்கள் இருக்கும்.

Templates:

உங்கள் ப்ளாக்கிற்கான தோற்றத்தை இங்கு தேர்ந்தெடுக்கலாம். மொத்தம் 34 டெம்ப்ளேட்கள் இங்கு இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு டெம்ப்ளேட்டை க்ளிக் செய்தவுடன் அதன் முன்மாதிரியை கீழே பார்க்கலாம்.

கவனிக்க: புதிதாக ப்ளாக் தொடங்கியதும் உங்கள் ப்ளாக்கின் டெம்ப்ளேட் Dynamic Views டெம்ப்ளேட் ஆக இருக்கும். இதைப் பற்றி இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற பதிவிலும், ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற  பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இதனை தவிர்த்து வேறு ஏதாவது டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

Background:

உங்கள் ப்ளாக்கின் பின்னணிப் படத்தின் நிறத்தை மாற்றவும், உங்களுக்கு விருப்பமான படத்தை பின்னணிப் படமாக வைக்கவும் Background வசதி பயன்படுகிறது.

Main colour theme என்ற இடத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்து பின்னணி நிறத்தை மாற்றலாம்.

Background Image என்ற இடத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்து பின்னணியில் வேறொரு படத்தை வைக்கலாம்.

Adjust Widths:

நம்முடைய ப்ளாக் மற்றும் பக்கவாட்டின் (Sidebar) அகல அளவை இந்த பகுதியில் மாற்றலாம்.

Entire Blog – ப்ளாக்கின் மொத்த அகல அளவு. இதில் 1024 என்பது சராசரி அளவாகும்.

Right Sidebar or/and Left Sidebar  – வலது அல்லது/மற்றும் இடது  பக்கவாட்டின் அகல அளவு. ஒரு பக்கம் மட்டும் Sidebar இருந்தால் அதில் 250-300 என்பது சராசரியான அளவாகும்.

Layout:

நம்முடைய ப்ளாக்கில் எத்தனை Sidebar  (அதிகபட்சம் இரண்டு தான்) வைக்க வேண்டும்? வலதுபுறமா? இடதுபுறமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம். மேலும் கீழ்பகுதி (Footer) எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் இங்கு தேர்வு செய்யலாம்.

ஒரு பக்கம் மட்டும் Sidebar வைப்பதாக இருந்தால் வலது புறத்தையே தேர்வு செய்யுங்கள். இரண்டுபக்க Sidebar வைத்தால் அளவு சிறியதாகிவிடும் என்பதால் அதனை தவிர்ப்பது நலம்.

Advanced Settings:

இங்கு நம் ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள், எல்லைகளின் (border)  நிறம், அளவு போன்றவற்றை மாற்றலாம். நீங்கள் மாற்றும்போது கீழே உள்ள முன்மாதிரியில் மாறுவதைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  Hunt For Hint 3 - புதிர் வேட்டை!

இதில் கடைசியாக உள்ள Add CSS என்பது கணினி மொழி தொடர்பானது. CSS மொழி எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் அங்கு மாற்றம் செய்துக் கொள்ளலாம்.

கவனிக்க:  ப்ளாக்கர் தளத்தில் உள்ள டெம்ப்ளேட்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் தான் இந்த Template Designer வசதியை பயன்படுத்த முடியும். வேறு தளங்களில் இருந்து டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால் இதனை பயன்படுத்த முடியாது.

இறைவன்  நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்தப் பகுதிகளில் காண்போம்.

Image Credit: langwitches.org

5 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-11]”

  1. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…
    புதியவர்களுக்கான மிக அருமையாக செல்கிறது தொடர். நன்றி.

    நம் பிளாக்கை அகன்ற திரைக்கு ஏற்றார்போற்று(wide screen mode)தானாக மாறிக்கொள்ள என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள் சகோ. பழயவர்களையும் கொஞ்சம் அவ்வப்போது கவனிங்க.

  2. மாப்ள ப்ளாக் டெம்ப்ளேட் பத்தி கலக்கலா சொல்லி இருக்கீங்க….தொடருகிறேன்…நன்றி!

  3. நல்ல பகிர்வு.. நன்றி எனது இனிய இல்லம் வலைப்பூ காலையில் followers 308 பேர் இருந்தார்கள் ஆனால் இப்ப 305 பேர் தான் இருக்கிறார்கள்.. பின் தொடர்வது அவர்கள் விருப்பம் தான் என்றாலும், என் பதிவு பிடிக்காமல் விலகிய நண்பர்களை தெரிந்துக்கொள்ள முடியுமா?