ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-12]

Layout பகுதி உங்கள் ப்ளாக்கில் புதிய புதிய கேட்ஜெட்களை (Gadget) வைப்பதற்கும், அதனை ஒழுங்குப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இந்த பகுதியில் மாற்றம் செய்வதற்கு கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

Layout பகுதிக்கு சென்றால் பின்வருமாறு இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

Favicon:

Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான் (Favicon).

இதனை நமக்கு ஏற்றாற்போல் மாற்றுவதற்கு எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற.. என்ற பதிவை பார்க்கவும்.

Navbar:

ப்ளாக்கில் மேலே காணப்படும் Navbar (Navigation Bar)-ன் நிறத்தை மாற்ற Edit  என்பதை க்ளிக் செய்து, உங்கள் விருப்பமானதை தேர்வு செய்து Save கொடுங்கள்.

Header:

Header என்பது ப்ளாக்கின் தலைப்பு பகுதி. இங்கு ப்ளாக்கின் பெயரை எழுத்தாகவோ, அல்லது படமாகவோ வைக்கலாம். Header என்பதற்கு அருகில் Edit என்பதை க்ளிக் செய்தால் மேல உள்ள படம் வரும்.

Blog Title – ப்ளாக்கின் தலைப்பு

Blog Description – உங்கள் ப்ளாக் பற்றிய சிறுகுறிப்பு. இங்கு ஏதாவது எழுதலாம் அல்லது வெறுமனே விட்டுவிடலாம்.

Image – தலைப்பு படம். உங்கள் கணினியில் இருந்து நேரடியாகவோ அல்லது இணைய முகவரியைக் கொண்டோ இணைக்கலாம்.

Placement – தலைப்பு படத்தை எப்படி வைக்க வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்ய வேண்டும்.

  • Behind title and description – படம், (ப்ளாக் தலைப்பு & குறிப்பு) எழுத்துக்கள் இரண்டும் தெரிய இதனை தேர்வு செய்யவும்.
  • Instead of title and description – படம் மட்டும் தெரிய இதனை தேர்வு செய்யவும்.
  • Have a description after the image – படமும், அதற்கு கீழே குறிப்பும் தெரிய இதனை தேர்வு செய்யவும்.

அதற்கு  கீழே Shrink to fit என்று இருக்கும். உங்கள் படத்தின் அளவு 960 pixel-ஐ தாண்டி இருந்தால் அதனை சுருக்குவதற்கு இதனை தேர்வு செய்யவும்.

Blog Posts:

Blog Posts என்ற பகுதியில் edit என்பதை க்ளிக் செய்தால் மேலுள்ள படம் போல் வரும். அதில் பதிவுகளின் பக்கத்தில் என்னென்ன தோன்ற வேண்டும்? என்பதையும், அதன் வரிசைகளையும் மாற்றி அமைக்கலாம்.

Number of Posts on main page: முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-10]

Post page link text: ப்ளாக்கில் Read More வைத்திருந்தால், Read More என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது வார்த்தைகளை சேர்க்கலாம். உதாரணத்திற்கு “மேலும் படிக்க“.

Post Page Options:

இங்கு உள்ளவற்றில் எவையெல்லாம் ப்ளாக்கில் தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களோ? அவற்றில் டிக் செய்யுங்கள்.

Arrange Items:

மேலே சேர்த்தவைகளை எந்த வரிசையில் தெரிய வேண்டும் என்பதனை இங்கு ஒழுங்குபடுத்தலாம். எதனை நகர்த்த வேண்டுமோ அதனை க்ளிக் செய்துக் கொண்டே நகர்த்த வேண்டும்.

இவையெல்லாம் முடிந்த பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.

இறைவன்  நாடினால் Gadgets பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Image Credit: www.ellsworthmedia.com

9 thoughts on “ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-12]”

  1. நன்றி திரு அப்துல் பாசித் அவர்களே.!! பிளாக் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் இந்த தொடர் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

  2. இதெல்லாம் 3 வருடம் முன் சொல்லி கொடுத்து இருந்தால் நல்ல இருந்திருகும்.இதெல்லாம் கண்டுபிடிகக னிறைய டைம் வேஸ்ட் ஆச்சு
    .