ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..

சில தளங்களுக்கு சென்றால் பின்னணியில் இசை ஒலிப்பதை கேட்கலாம். அது போன்று நமது தளத்திலும்  ஆடியோ  ஃபைல்களை இணைப்பது எப்படி? என்று இந்த பதிவில் காண்போம். அவ்வாறு இணைப்பதற்கு Embed என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.


ஆடியோ ஃபைல்களை ஒலிக்க வைக்க:

*முதலில் உங்களுடைய ஆடியோ ஃபைலை, இலவசமாக ஃபைலை upload செய்ய அனுமதிக்கும் தளங்களில் (உதாரணத்திற்கு, கூகிள் சைட்ஸ்) upload செய்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஆடியோவின் முகவரியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த முகவரி .mp3, .wav, அல்லது .midi என்று முடிய வேண்டும்.
*நமக்கு விருப்பமான பாடல்களை அல்லது ஒலி கோப்புகளை நமது தளத்தில் sidebar-ல் ஒலிக்க செய்ய கீழுள்ள Code-ஐ பயன்படுத்தவும்.
<embed flashvars=”audioUrl=https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3height=”27″ quality=”best” src=”http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf” type=”application/x-shockwave-flash” width=”400″></embed>
மேலுள்ள code-ல் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்ய,
width – என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு அகலத்தின் அளவை மாற்றலாம்.
height – என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு உயரத்தின் அளவை மாற்றலாம்.
audioUrl – என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.
மேலே நான் கொடுத்துள்ள Code-ன் Output பின்வருமாறு இருக்கும்.

பதிவில் இணைக்க:

பதிவெழுதும் போது மேலுள்ள code-ஐ HTML mode-ல் வைத்து paste செய்து மீண்டும் Compose Mode-ற்கு மாறிக் கொள்ளலாம்.

பின்னணியில் ஒலிக்கச் செய்ய:
பின்னணியில்  பாடல்கள் போன்ற ஆடியோ ஃபைல்களை ஒலிக்கச் செய்ய 

<head>
என்ற  Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ paste செய்யவும்.

<embed autostart="true" height="0" loop="true" src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3" width="0"/>
* loop – என்ற இடத்தில், பாடல்கள் திரும்ப, திரும்ப ஒலிக்கச் செய்ய “true” என்றும், ஒருமுறை மட்டும் ஒலிக்கச் செய்ய “false” என்றும் கொடுக்கவும்.
* src – என்ற இடத்தில் உங்கள் ஆடியோ ஃபைலின் முகவரியை கொடுக்கவும்.
 பின்னணியில் இசை ஒலிப்பதால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம்.

பதிவில் வீடியோக்களை இணைப்பதுபற்றி விரிவாகக் காண ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.
இதையும் படிங்க:  ஆப்பிள் ஐபோன் 4S மற்றும் ப்ளாக்கர் மாற்றம்

33 thoughts on “ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..”

 1. எல்லா பதிவும் படிச்சுட்டு வரேன் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். இந்த பதிவுக்கு வரப்போ ஆடியோ பைல் ஒன்னு அதுவாவே டவுன்லோட் ஆகுது என்னன்னு பாருங்க. ஆனா அந்த இசை நான் ரொம்பநாள் தேடியது. அதுக்கும் நன்றி.

  Reply
 2. மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே,

  பகிவுக்கு நன்றி நண்பா…

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  //வீடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி என்று இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.//

  விரவில் எதிர்பார்ப்புடன்…

  Reply
 3. I observed one thing.. If I open your blog in Google chrome or other browsers, it download the files everytime… If I refresh the page, I could see that the file is downloaded again. Is there a way to specify cache" (i.e) to download only if its not present?

  I will send you an email with the screen shots.

  Reply
 4. //
  KANA VARO said…

  பயனுள்ள பதிவு
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

  Reply
 5. //மாணவன் said…

  மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே,

  பகிவுக்கு நன்றி நண்பா…

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  //வீடியோ ஃபைல்களை இணைப்பது எப்படி என்று இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.//

  விரவில் எதிர்பார்ப்புடன்…
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா…!

  Reply
 6. //
  Ravi.R said…

  Nice post, Thanks for sharing
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா…!

  Reply
 7. //தல தளபதி said…

  எல்லா பதிவும் படிச்சுட்டு வரேன் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா…!

  //இந்த பதிவுக்கு வரப்போ ஆடியோ பைல் ஒன்னு அதுவாவே டவுன்லோட் ஆகுது என்னன்னு பாருங்க.//

  sample-காக இந்த பதிவில் ஆடியோ ஃபைல் ஒன்றை இணைத்துள்ளேன். அதனை கேட்பதற்கு உங்கள் உலவியில் (Browser) அதற்கான plugin இருக்க வேண்டும்.

  chrome உலவியில் அந்த plugin-ஐ நிறுவ வழி இல்லை. அதனால் தற்சமயம் க்ரோம் உலவியில் அந்த ஆடியோ ஃபைல் streaming ஆவதற்கு பதிலாக download ஆகிறது.

  ஃபயர்ஃபாக்ஸ் உலவிக்கான plugin-ஐ நிறுவ கீழுள்ள முகவரிக்கு செல்லவும்.

  http://www.apple.com/quicktime/download/

  //ஆனா அந்த இசை நான் ரொம்பநாள் தேடியது. அதுக்கும் நன்றி.//

  மிக்க மகிழ்ச்சி..

  Reply
 8. //
  தல தளபதி said…

  எப்டி அந்த MP3 கோட் எடுக்கறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க. இது மட்டும் புரியல.
  //

  நீங்கள் http://sites.google.com தளத்தில் உங்கள் ஃபைல்களை upload செய்தால், அந்த ஃபைலின் முகவரி பின்வருமாறு இருக்கும்.

  https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/01TitleTrack.mp3?attredirects=0&d=1

  அந்த முகவரியில் .mp3 என்பது வரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின் உள்ள ?attredirects=0&d=1 என்பதை சேர்க்கக் கூடாது.

  உங்கள் ஃபைல்களை upload செய்ய சில தளங்கள்.

  http://www.fileden.com/

  http://www.fileave.com/

  Reply
 9. //Premkumar Masilamani said…

  lovely Basith… your posts are getting better and better… thanks for the information.

  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா…!

  Reply
 10. //Premkumar Masilamani said…

  I observed one thing.. If I open your blog in Google chrome or other browsers, it download the files everytime… If I refresh the page, I could see that the file is downloaded again. Is there a way to specify cache" (i.e) to download only if its not present?

  I will send you an email with the screen shots.
  //

  sample-காக இந்த பதிவில் ஆடியோ ஃபைல் ஒன்றை இணைத்துள்ளேன். அதனை கேட்பதற்கு உங்கள் உலவியில் (Browser) அதற்கான plugin இருக்க வேண்டும்.

  chrome உலவியில் அந்த plugin-ஐ நிறுவ வழி இல்லை. அதனால் தற்சமயம் க்ரோம் உலவியில் அந்த ஆடியோ ஃபைல் streaming ஆவதற்கு பதிலாக download ஆகிறது.

  Reply
 11. //
  ஆமினா said…

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

  நல்ல பகிர்வு சகோ!

  வாழ்த்துக்கள்
  //

  வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி…!

  Reply
 12. நண்பா கொஞ்சம் நாளாக EXAM காரணமாக தாங்கள் வலைக்கு வர இயலவில்லை.
  நான் முன்பு ஒரு வலையில் உலாவும்போது ஒலி கேட்டது எனக்கு ஒண்ணும் புரியவில்லை முதலில் அதிர்ச்சியாக இருந்தது பின்புதான் தெரிந்தது ஆடியோ file இணைக்கபட்டுள்ளது என்று….
  எவ்வாறு செய்வது என்று தெரியவில்லை இப்போது விடை கிடைத்து விட்டது பகிர்வுக்கு நான்றி தோழா….

  Reply
 13. //சரவணன்.D said… 17

  நண்பா கொஞ்சம் நாளாக EXAM காரணமாக தாங்கள் வலைக்கு வர இயலவில்லை.
  நான் முன்பு ஒரு வலையில் உலாவும்போது ஒலி கேட்டது எனக்கு ஒண்ணும் புரியவில்லை முதலில் அதிர்ச்சியாக இருந்தது பின்புதான் தெரிந்தது ஆடியோ file இணைக்கபட்டுள்ளது என்று….
  எவ்வாறு செய்வது என்று தெரியவில்லை இப்போது விடை கிடைத்து விட்டது பகிர்வுக்கு நான்றி தோழா….
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

  Reply
 14. //abdullah said…

  how can upload on google sites becoz i uploaded in some sites but it worked in my computer but in other computers din't work
  //

  1. create a site in sites.google.com

  2. create a page as file cabinet

  3. Upload your file

  4. Note the URL of uploaded file.

  Thats all..

  If God Wish, I will post about this soon..

  Thanks for your visit and comment..

  Reply
 15. ஒரு குறிப்பிட்ட இடுகையின் இணைப்பை தொட்டால் மட்டும் பின்னணியில் பாடல் ஒழிக்க வேண்டும்… சாத்தியப்படுமா…? மறவாமல் பதிலளிக்கவும்…

  Reply
 16. //philosophy prabhakaran said…

  ஒரு குறிப்பிட்ட இடுகையின் இணைப்பை தொட்டால் மட்டும் பின்னணியில் பாடல் ஒழிக்க வேண்டும்… சாத்தியப்படுமா…? மறவாமல் பதிலளிக்கவும்…
  //

  நண்பா! பதிவின் தலைப்பை தொட்டாலா? அல்லது சுட்டியை தொட்டாலா?

  ஏனெனில், சாதாரணமாக சில வார்த்தைகளை தொடும் போது மட்டும் ஒலிக்க வைக்க முடியும். அதற்கு MouseOver Effect என்று சொல்வார்கள். அதற்கு java script இருக்கிறது. ஆனால் இந்த முறை internet explorer-ல் மட்டும் தான் வேலை செய்யும். மற்ற உலவிகளில் வேலை செய்யாது.

  நீங்கள் கேட்டது போல் குறிப்பிட்ட பதிவின் தலைப்பை மட்டும் தொட்டால் பாடல் ஒலிக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம், ப்ளாக்கரில் அனைத்து பதிவுகளுக்கும் ஒரே code தான் பயன்படுத்துகிறார்கள்.

  Reply
 17. சகோதரர் பாசித் அவர்களே…,
  எனது கணவர் மிகவும் பாடல் விரும்பி…
  நிறைய கரோக்கியில் பாடியும் வைத்துள்ளார்.
  இதை தனிபட்ட முறையில் வைத்துக் கொள்ளவே ஒரு ப்ளாக் ஆரம்பித்தார்.
  அதில் மற்ற தளத்தின் உதவியோடுதான் நம் பாடலை ஏற்ற முடியும் என்றே விடை கிடைத்தது.அவருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் முயன்று பார்க்கமுடியவில்லை.
  நம் பாடல்களை டைரக்ட்டாக நம் ப்ளாக்கில் ஏற்றி கொள்ள முடியுமா…
  அதற்க்கு என்ன செய்ய வேண்டும் சகோதரரே…. ப்ளீஸ் முடிந்த போது சொல்லுங்களேன்.

  அன்புடன்,
  அப்சரா.

  Reply
 18. //apsara-illam said…

  சகோதரர் பாசித் அவர்களே…,
  எனது கணவர் மிகவும் பாடல் விரும்பி…
  நிறைய கரோக்கியில் பாடியும் வைத்துள்ளார்.
  இதை தனிபட்ட முறையில் வைத்துக் கொள்ளவே ஒரு ப்ளாக் ஆரம்பித்தார்.
  அதில் மற்ற தளத்தின் உதவியோடுதான் நம் பாடலை ஏற்ற முடியும் என்றே விடை கிடைத்தது.அவருக்கு நேரம் இல்லாத காரணத்தினால் முயன்று பார்க்கமுடியவில்லை.
  நம் பாடல்களை டைரக்ட்டாக நம் ப்ளாக்கில் ஏற்றி கொள்ள முடியுமா…
  அதற்க்கு என்ன செய்ய வேண்டும் சகோதரரே…. ப்ளீஸ் முடிந்த போது சொல்லுங்களேன்.

  அன்புடன்,
  அப்சரா.
  //

  மன்னிக்கவும் சகோதரி! தற்பொழுது ப்ளாக்கரில் நேரடியாக ஆடியோ ஃபைல்களை பதிவேற்றும் வசதி இல்லை. புகைப்படம், வீடியோ போன்றவற்றை வேண்டுமானால் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.

  ஆடியோ ஃபைல்களை பதிவேற்றம் செய்ய நீங்கள் http://sites.google.com தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி!

  Reply
 19. கற்று தரும் ஆசானே ப்ளோகில் வீடியோ போன்று mp3 இணைப்பது எப்படி ? என்று கூறுங்கள்

  Reply
 20. //கற்று தரும் ஆசானே ப்ளோகில் வீடியோ போன்று mp3 இணைப்பது எப்படி ? என்று கூறுங்கள்
  //

  புரியவில்லை நண்பா! விளக்கமாக கூற முடியுமா?

  Reply
 21. Share Report Abuse Next Blog» New Post Design Sign Out

  இந்த மாதிரி இருகிறதா மறைக்க ஒரு பதிவு போட முடியுமா?

  Reply
 22. Salaam, நண்பரே எனக்கு ஒரு குர் ஆன் முழுவதும் எனது பிளாக்கில் ஏற்ற வேண்டும், இது சாத்தியமா? இப்போது நீங்கள் சொல்லிக் கொடுத்த முறை ஒரு ஆடியோ பைலை மட்டும் தான் ஏற்ற முடியுமா? இல்லை எத்தனை பைலை வேண்டுமானாலும் ஏற்ற முடியுமா? (googlesite உபயோகித்து)

  Reply
 23. பயனுள்ள பதிவு
  எனக்கும் மிகவும் உதவியது
  மிக்க மிக்க நன்றி நண்பரே
  உங்கள் சேவை எனக்கு தேவை !

  Reply
 24. வணக்கம்!

  அறிவியல் ஆக்கம் அருந்தமிழில் வேண்டும்
  செறிவுடன் செய்க செழித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  Reply

Leave a Reply