ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா?

seo - search engine optimization
வலைப்பதிவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்களில் முக்கியமானது Search Engine Optimization. அதாவது நம்முடைய தளங்களை கூகிள், யாஹூ, பிங் போன்ற எண்ணற்ற தேடுபொறி இயந்திரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது. இதன் முதல் படியாக நாம் நம்முடைய தளத்தின் (உலவியின் மேல்புறத்தில் வரும்)  தலைப்பை,  மாற்றி அமைக்க வேண்டும்.

சாதாரணமாக ப்ளாக்கரில்  தலைப்பு பின்வருமாறு இருக்கும்:
(படத்தை பெரிதாக காண, படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

நம்முடைய ப்ளாக்கின் தலைப்பு முதலிலும், பதிவின் தலைப்பு இரண்டாவதுமாக வரும். அப்படி இருந்தால் தேடுபொறி மூலம் வாசகர்கள் வரும் வாய்ப்பு குறைந்துவிடும்.
அதனால் முதலில் பதிவின் தலைப்பும் பிறகு ப்ளாக்கின் தலைப்பும் வருமாறு மாற்றி அமைக்க வேண்டும். உதாரணமாக பின்வரும் படத்தைக் காணவும்:
அப்படி மாற்றி அமைக்க,
முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
பிறகு 


<title><data:blog.pagetitle/></title>

  என்ற Code-ஐ தேடவும்.

அதை  நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 


<b:if cond='data:blog.pageName == ""'>

<title><data:blog.title/></title>

<b:else/>

<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>

</b:if>

என்ற Code-ஐ  paste செய்யவும்.
அவ்வளவுதான்…  

இதையும் படிங்க:  சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..

28 thoughts on “ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா?”

  1. @சரவணன்.D

    தாங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.. தொடர்ந்து வருகைத் தாருங்கள்…

  2. @prabhadamu

    அப்படியென்றால் < title >என்று ஆரம்பித்து < /title > என்று முடியும் வரை உள்ள கோடிற்கு பதிலாக மேலே உள்ள கோடை paste செய்து பாருங்கள். (space வராது)

    மாற்றம் செய்யும் முன் Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    @அஸ்பர்-இ-சீக்
    நன்றி..

  3. இதுப்போலா!

    இதுப்போல் என்னுடைய தளத்தில் காண்ப்படவில்லையே. எனக்கு விலக்க முடியுமா நண்பா.

    அதேப்போல் இந்த பதிவை இத்தானாவாது நபர் படிக்கீரீர்கள் என்று ஒருசில தளத்தில் உள்ளது. அதனை எப்படி வைப்பது நண்பா.

  4. @prabhadamu

    நண்பா, எந்தவொரு template ஆக இருந்தாலும் அதில் title tag கண்டிப்பாக இருக்கும். நீங்கள் கூகிளின் picture window template பயன்படுத்துகிறீர்கள். அதில் இந்த பதிவில் மாற்றுமாறு சொன்ன code தான் உங்கள் டெம்ப்ளேட்டில் இருக்கும். அதை நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    Edit Html பக்கத்திற்கு சென்று Cntrl+F அழுத்துங்கள். பிறகு அதில் < என்று டைப் செய்து பின் title> என்று டைப் செய்யுங்கள். உங்களுக்கு அந்த code தெரியும். அந்த code-லிருந்து /title> என்று முடியும் வரையிலான code-களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வரி code-களை Paste செய்யவும். பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

    அதன் பின்னும் சரியாகவில்லை என்றால் பெட்டியில் உள்ள அனைத்து Code-களையும் காப்பி செய்து எனது ஈமெயில் முகவரிக்கு (basith27@gmail.com) அனுப்ப முடியுமா?

    //இந்த பதிவை இத்தானாவாது நபர் படிக்கீரீர்கள் என்று ஒருசில தளத்தில் உள்ளது. அதனை எப்படி வைப்பது//
    கீழே உள்ள சுட்டியில் பாருங்களேன்..

    http://mastanoli.blogspot.com/2009/10/page-view-counter.html

  5. //இந்த பதிவை இத்தானாவாது நபர் படிக்கீரீர்கள் என்று ஒருசில தளத்தில் உள்ளது. அதனை எப்படி வைப்பது//
    கீழே உள்ள சுட்டியில் பாருங்களேன்..

    http://mastanoli.blogspot.com/2009/10/page-view-counter.html

    நண்பா எனக்கு இந்த தளத்தில் இருந்து எதுவும் காப்பி பண்ண முடியலை நண்பா. அதனால் அந்த கோடும் என்னால் காப்பி பண்ண முடியலை.

    நான் அந்த கோடை முயற்ச்சி செய்து பார்க்கிறேன் நண்பா. நன்றி.

    🙂

  6. @prabhadamu

    //இந்த தளத்தில் இருந்து எதுவும் காப்பி பண்ண முடியலை நண்பா.//

    அந்த தளத்தில் சென்று உங்களுக்கு தேவையானதை select செய்து கொள்ளுங்கள். பிறகு Cntrl+C அழுத்துங்கள். அவை Copy ஆகிவிடும். பிறகு அதை Paste செய்ய Cntrl+V அழுத்துங்கள்.

  7. @மனசாட்சியே நண்பன்

    //ஓட்டளிப்பு பட்டை எவ்விதம் எனது ப்ளோகில் இணைப்பது சற்று விளக்குங்களேன்//

    எந்த ஓட்டு பட்டை என்று சொல்கிறீர்களா? இன்ட்லியா? அல்லது தமிழ்மணமா?

  8. நண்பா! உங்களுடைய தளத்தில் உள்ளது போல அலக்ஸா ரேங்க், ஸ்பை, விஸிட்டர்ஸ் போன்றவற்றை இணைக்க பதிவிடுங்கள்.

  9. @எம்.ஞானசேகரன்

    மிகவும் எளிது. அந்தந்த தளங்களுக்கு சென்று உங்கள் ப்ளாக்கை பதிவு செய்தால், உங்கள் ப்ளாக்கிர்க்கென்று பிரத்யேகமான Code தரப்படும். அந்த Code-ஐ உங்கள் ப்ளாக்கின் sidebar-ல் சேர்க்க வேண்டும்.

    தளங்களின் முகவரி:
    http://alexa.com
    http://histats.com
    http://geovisite.com

    இதை பற்றி பதிவிட முயற்சிக்கிறேன், நண்பரே…!

  10. //ஆமினா said…

    அழகா தெளிவா சொல்லிட்டீங்க! நானும் வச்சுட்டேன்//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி..!

  11. //Sounthar said…

    இனிய நண்பரே ,
    ப்லொக்கில் எப்படி பாடல்களை மற்றும் youtube களை இணைப்பது .பதில் தரவும் .

    தாஸ்
    //

    அடுத்த பதிவில் அதை பற்றி எழுதுகிறேன் நண்பா..!

  12. ஒரு உதவி வேண்டுகிறேன்!
    எனது Blog- ஐ open செய்தால் ….page நகராமல் அப்படியே நின்று விடுகிறது..
    ஒரு Box-ல்
    The following page(s) have become unresponsive. You can wait for them to become responsive or kill them.
    என்று வருகிறது.
    virus total software ல் Blog- ஐ scan செய்தேன்.
    Result -clean site என்று வந்தடைந்தது.
    Blog- ஐ open செய்தால் ….page நகராமல் அப்படியே நின்று விடுகிறது..
    pls
    தளம் : http://www.maayaulagam-4u.blogspot.com
    email id : rajeshnedveera@gmail.com
    rajesh

  13. //மாய உலகம் said…

    ஒரு உதவி வேண்டுகிறேன்!
    எனது Blog- ஐ open செய்தால் ….page நகராமல் அப்படியே நின்று விடுகிறது..
    ஒரு Box-ல்
    The following page(s) have become unresponsive. You can wait for them to become responsive or kill them.
    என்று வருகிறது.
    virus total software ல் Blog- ஐ scan செய்தேன்.
    Result -clean site என்று வந்தடைந்தது.
    Blog- ஐ open செய்தால் ….page நகராமல் அப்படியே நின்று விடுகிறது..
    pls
    தளம் : http://www.maayaulagam-4u.blogspot.com
    email id : rajeshnedveera@gmail.com
    rajesh
    //

    தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் நண்பா!

  14. உங்களுடைய பதிவுகள் அருமையாக உள்ளது … வாழ்த்துகள்
    மேலும் உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கும் உங்கள் நண்பா !!!