நீங்கள் ப்ளாக்கர் நண்பன் தள பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தீர்களானால் தலைப்பைப் பார்த்ததும் இது எதைப் பற்றிய பதிவு என்று கணித்திருப்பீர்கள். ஆம், அது தான்! அதே தான்!
ப்ளாக்கர் நண்பன் தளம் தங்களின் அன்போடும், ஆதரவோடும் மூன்று வருடங்களைக்
கடந்து தற்போது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லா புகழும்
இறைவனுக்கே!
இது ப்ளாக்கர் நண்பன் தளம் கடந்து வந்த சுவடுகளை திரும்பிப் பார்க்கும் பதிவு. அதனால் உபயோகமாக எதுவும் இருக்கப்போவதில்லை.
முதலில் சுவடுகளில் பதிந்துள்ள புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
2010-2011 | 2011-2012 | 2012-2013 | |
---|---|---|---|
பதிவுகள் | 40 | 160 | 149 |
பின்னூட்டங்கள் | 700+ | 3550+ | 2860+ |
வருகையாளர்கள் | 13,000+ | 59,580+ | 87,000+ |
பக்க பார்வைகள் | 40,000+ | 2,19,000+ | 2,85,000+ |
நண்பர்கள் (Followers) | 200 | 390 | 253 |
வருகையாளர்கள் மற்றும் பக்க பார்வைகள் கூடியுள்ளது, மற்றவைகள் குறைந்துள்ளது.
முதல் மூன்று இடங்கள் கடந்த வருடம் போலவே உள்ளது.கடந்த வருடத்தில் இடம்பெறாத பேஸ்புக் நான்காம் இடம்வந்துள்ளதால், நான்காம் இடத்தில் இருந்த தமிழ் 10 தளம் ஐந்தாம் இடத்தில் வந்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் அதிகம் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:
- பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி
- பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்
- ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? (150-வது பதிவு)
- கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
- எச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி
விழிப்புணர்வு பதிவுகள் தான்அதிகமானோரை சென்றடைகிறது. அதற்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உதவியாக இருக்கின்றன.
நினைவில் நிற்கும் தருணங்கள்:
1. ப்ளாக்கர் நண்பன் பேஸ்புக் பக்கம் ஆயிரம் விருப்பங்களைத் தாண்டியது.
2. ப்ளாக்கர் நண்பன் கூகுள்+ பக்கம் ஆயிரம் ப்ளஸ் ஒன்களைத் தாண்டியது.
3. தமிழ் 10 நூலகத்தில் ப்ளாக் தொடங்குவது எப்படி? தொடரின் சில பகுதிகள் மின்னூலாக இடம்பெற்றது.
4. பிட் பைட் மெகாபைட் பகுதி தொடங்கப்பட்டது.
5. சகோ. பிரபுவுடன் இணைந்து “பதில்” தளத்தை உருவாக்கியது. தற்போது எனக்கு நேரமின்மைக் காரணத்தினால் பதில் தளத்தை நிர்வகிப்பது அவர் தான்.
ப்ளாக்கர் நண்பன் அல்லாத இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வு, The Spider Tech என்னும் யூட்யூப் சேனல் உருவாக்கியது. தற்போது 328 Subscribers,
237,482 பார்வைகளைப் பெற்றுள்ளது. இதில் John Cena பற்றிய வீடியோ மட்டும் 1,12,393 பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைக் குறிப்பிடக் காரணம் அந்த 328 நபர்களில் ப்ளாக்கர் நண்பன் வாசகர்களாகிய நீங்கள் தான் அதிகம்!
பெயர் குறிப்பிடவேண்டிய சில நண்பர்கள்:
1. சகோ. பிரபு கிருஷ்ணா – ப்ளாக் தொடர்பாக நான் அதிகம் சாட் செய்து தொல்லைப்படுத்தியது இவரைத் தான். பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வரும் “புது” போட்டோகிராபர். 🙂
2. சகோ. முஹம்மது இஸ்மாயில் – நான் தொழில்நுட்பச் செய்திகளை சாதாரணமாக சொன்னாலும் அதுபற்றிய ஆழமான கருத்துக்களை சொல்லி வருபவர்.
3. சகோ. பெருமாள் (கரூர்) & சகோ. ஞானம் சேகர் – இவர்கள் இருவரும் பதிவர்கள் இல்லை, ஆனாலும் என் பதிவுகளுக்கு தொடர்ந்து கரத்துக்கள் இட்டு ஊக்கமளிப்பவர்கள்.
4. சகோ. முஹம்மது அலி (கொல்லாபுரம்) – நான் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் அதிகமான பகிர்வுகளுக்கு முதல் லைக் இவருடையதாகத் தான் இருக்கும்.
5. சகோ. ப்ரேம்குமார் மாசிலாமணி – ப்ளாக் தொடங்கிய காலத்தில் இருந்தே கருத்துக்கள் மூலம் ஊக்கமளித்து வருபவர்.
இது தவிர இன்னும் பலர் எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்கள், நீங்கள் உள்பட……
ப்ளாக்கர் நண்பன் Version 4.0:
Version 1.0 முதல் பிளாக்கர் பற்றிய நுட்பங்களை எழுதத் தொடங்கினேன்.
Version 2.0 முதல் ப்ளாக்கர் மட்டுமின்றி பிற தொழில்நுட்ப செய்திகளையும் எழுதத்தொடங்கினேன்.
Version 3.0 முதல் விருந்தினர் பதிவுகள் பகுதியை தொடங்கினேன்.
அது போல Version 4.0-வில் எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன், ஆனால் ஒரு மாதிரியும் தோணாததால் அதனை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
ப்ளாக்கர் நண்பன் தளத்தில் புதிதாக என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
கீழே இருப்பது காப்பி/பேஸ்ட் என்றாலும் மீண்டும் அதனை பதிவு செய்கிறேன்.
இதுவரை கருத்துக்கள் மூலமும், மெயில்கள் மூலமும் ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,
இன்ட்லி, தமிழ்மணம், தமிழ் 10 போன்ற திரட்டிகளுக்கும்,
எனது உளமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!
வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள்…
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
உங்கள் தளம் என்னைப் போன்ற நபர்களுக்கு பயன் உள்ளதாக இருந்துள்ளது. இருக்கின்றது. நல்வாழ்த்துகள்.
குறைந்தது 100 பேருக்காவது உங்களின் தொடர்பதிவான / ப்ளாக் தொடங்குவது எப்படி? // லிங்ககை கொண்டு விபரங்கள் அளித்திருக்கிறேன்.. மிகவும் பயனுள்ள அற்புதமான தொடர் அது,,, மன்னிக்க உங்கள் அனுமதி பெறாமல் அதை பலருக்கும் பயன்படுத்த கொடுத்துள்ளேன்..
வாழ்த்துகள் சகோ,,,
இந்த இனிய வருடத்தில், இன்னும் சிறப்பாக உங்கள் பதிவுகளை எங்களை வந்தடையட்டும்,,,,
நாலு வயசாச்சு.. வாழ்த்துக்கள நண்பா
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…
வாழ்த்துக்கள் சகோ … :)—
தங்களின் சீரிய பணி தொடர நல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நண்பா. மேலும் சிறக்கட்டும் தங்கள் படைப்புகள்…
பயனுள்ள விஷயங்களை தரும் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
மென்மேலும் சாதனைகள் பல புரிய இறைவன் உதவுவானாக.
தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை தந்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்…
congrats bro…. Happy to see you grow !!!
வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் தளம் படித்துதான் ப்ளாக் தொடங்கினேன்! தொடர்ந்து படித்து வருகிறேன்! மேலும் பல படிகளை கடக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் அன்புச் சகோதரரே !! தங்களின் விடா முயற்சியும்
தன்னம்பிக்கையும் தந்த இந்த வெற்றிகள் மேலும் மேலும் தனக்கான
முன்னிடத்தை நோக்கி வெற்றி நடை போடட்டும் தங்கள் தளத்தை
மேம்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் எங்களுடைய தளத்திலும் ஏற்படும்
சிக்கல்களுக்கும் உடனுக்குடன் பதிலளித்து உதவியமையையும் இங்கே
பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் .மிக்க மகிழ்ச்சி சகோதரரே
தொடரட்டும் தங்கள் பயணம் மேலும் சிறப்பாக .
வாழ்த்துக்கள் மென்மேலும் பல சாதனைகள் புரிய இறைவன் உதவுவானாக
.
வாழ்த்துக்கள் அன்பரே பல பதிவர்களின் தளங்கள் உங்களால் தான் மெருகேறுகின்றன எனது தளம் உட்பட !நன்றி தொடர்ந்து கலக்குங்க !
மென்மேலும் வளர வாழ்த்துகள். தமிழில் தொழில் நுட்ப பதிவு எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை ஆனால் அதற்கு தேவையான நேரமும் உழைப்பும் இல்லாததால் இதுவரை சாத்தியப்படவில்லை. உங்கள் தளம் அதை நிறைவேற்றி வைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. இதற்கு பின்னால் இருக்கு உழைப்பை உணர முடிகிறது.
தாங்கள் இப்போது எழுதுவதோடு சேர்த்து ஆண்ட்ராய்டு, லினக்ஸ் ப்ரொக்கிராம் போன்றவற்றை பற்றி (இது போல மற்றவையும்) எழுதினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நேரமிருந்தால் எழுதவும்.
sinekithan.blogspot.com
வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் படைப்புக்களால் பயன் அடைந்ததில் நானும் ஒருவன்.
தற்போது எனக்கு நேரமின்மைக் காரணத்தினால் பதில் தளத்தை நிர்வகிப்பது அவர் தான். //
அப்படியா 😉
பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வரும் "புது" போட்டோகிராபர். 🙂 //
முதல் முதலா என்னை போட்டோகிராபர் என்று கூப்பிட்ட ஆள் நீங்கள் தான் 🙂
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிளாக்கர் நண்பன் தளத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். 😀
என்னுடைய ஆலோசனை அலைபேசி குறித்து பதிவுகளை நீங்கள் பகிர ஆரம்பிக்கலாம். Specifications மட்டுமின்றி Apps, News என பல தகவல்களை பகிரலாம்.
வாழ்த்துக்கள் நண்பா!
வணக்கம் ! வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் படைப்புக்களால் பயன் அடைந்ததில் நானும் ஒருவன். நன்றி!
வாழ்த்துக்கள் பசித் 🙂 மேலும் தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை கொடுக்க வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
தொடருட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !