ப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)

ப்ளாக்கர் நண்பன் தளம் தங்களின் அன்போடும், ஆதரவோடும் இரண்டு வருடங்களைக் கடந்து தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!

மூன்றாம் ஆண்டின் முதல் பதிவான இது ப்ளாக்கர் நண்பன் தளத்தின் 200-வது பதிவாகும். இந்த பதிவில் உபயோகமாக எதுவும் சொல்ல போவதில்லை. ப்ளாக்கர் நண்பன் பற்றிய புள்ளிவிவரங்களையும், புதிய அறிவிப்பு பற்றியும்  தான் பகிர போகிறேன்.

கடந்த  ஒரு வருடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

2010-2011 2011-2012
பதிவுகள் 40 160
பின்னூட்டங்கள் 700+ 3550+
வருகையாளர்கள் 13,000+ 59,580+
பக்க பார்வைகள் 40,000+ 2,19,000+
நண்பர்கள் (Followers) 200 390கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அனைத்தும் அதிகரித்துள்ளது. அதற்கு வாசக நண்பர்களின் தொடர் ஆதரவு முக்கிய காரணமாகும்.

கடந்த இரண்டு வருடங்களில் அதிகமான வாசகர்களை பரிந்துரை செய்த முதல் ஐந்து தளங்கள்:

1. இன்ட்லி [கடந்த வருடத்திலும் இன்ட்லி தான் முதலிடத்தில் இருந்தது.]

2. கூகுள் [இரண்டாம் இடத்தில் கூகுள் இருப்பது ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தினமும் பலர் கூகுள் தேடுபொறி மூலம் வருகின்றனர்.]

3. தமிழ்மணம் [கடந்த  வருடமும் மூன்றாம் இடத்தில் இருந்தது]

4. ப்ளாக்கர் [கடந்த வருடம் ப்ளாக்கர் டாஷ்போர்டிலிருந்து வந்தவர்களை கணக்கில் எடுக்கவில்லை]

5. தமிழ் 10 [கடந்த வருடம் நான்காவது இடத்தில் இருந்தது]
 நான்காவதாக

கடந்த இரண்டு வருடங்களில் அதிகம் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:

1. பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்
2. ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? (150-வது பதிவு)
3. ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]
4. தமிழ்
5. ஒபாமா இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி

நினைவில் நிற்கும் தருணங்கள்:

1. டெரர் கும்மி விருதுகள் 2011 போட்டியில் நான் எழுதிய சைபர் க்ரைம் – ஒரு பார்வை என்ற பதிவு விழிப்புணர்வு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றது.

2. யூத்ஃபுல் விகடன் தளத்தில் வரும் குட் ப்ளாக் பகுதியில் என் பதிவு இடம் பெற்றது.

3. வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியர் பணி ஏற்றது.

4. கற்போம் தளத்தில் விருந்தினர் பதிவு எழுதியது.

5. என்னுடைய தமிழ் பற்றிய பதிவிற்காக நண்பர் ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய தமிழ் ரிப்பன்.

ப்ளாக்கர் நண்பன் Version 3.0:

கடந்த வருடம் version 2.0-ல் இருந்து ப்ளாக்கர் மட்டுமல்லாமல் மற்ற தொழில்நுட்ப செய்திகளையும் எழுத தொடங்கினேன் (அதனால் தான் இருநூறு பதிவை எழுத முடிந்தது). அதே போல இந்த வருடத்தில் இருந்து புதிய மாற்றத்தை செய்ய போகிறேன். இதனை பல ஆங்கில தளங்களிலும், சில தமிழ் தளங்களிலும் பார்த்திருப்பீர்கள்.

இதையும் படிங்க:  ஆப்பிள் iOS 6 சிறப்பம்சங்கள்

இனி ப்ளாக்கர் நண்பன் தளத்தில் Guest Posts எனப்படும் விருந்தினர் பதிவுகளும் இடம்பெறும். அதாவது நீங்கள் எழுதும் பதிவு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் உங்கள் தளத்தின் இணைப்புடன்  இலவசமாக பதியப்படும்.

அதற்கான விதிமுறைகள்:

1. உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.

2. உங்கள் தளங்களிலோ, மற்ற தளங்களிலோ இடம்பெற்றிருக்க கூடாது.

3. சட்டத்திற்கு புறம்பான பதிவுகளாக இருத்தல் கூடாது.

4. கண்டிப்பாக அது தொழில்நுட்ப பதிவாக இருத்தல் வேண்டும். 🙂 🙂 🙂

மற்றபடி உங்கள் விருப்பம் போல் எழுதலாம். உங்கள் பதிவை பிரசுரிக்க முடியவில்லையெனில் வருத்தப்படக் கூடாது. தேவைப்பட்டால் நீங்கள் அனுப்பும் பதிவை திருத்தம் செய்து உங்கள் அனுமதியுடன் பிரசுரிக்கப்படும்.

தற்போது விருந்தினர் பதிவு ஏற்றுக் கொள்ளப்படாது.
முதல் விருந்தினர் பதிவாக பிரபல தொழில்நுட்ப, பன்முக பதிவரின் பதிவு (இறைவன் நாடினால்) திங்கட்கிழமை வெளியாகும்.

கீழே இருப்பது காப்பி/பேஸ்ட் என்றாலும் மீண்டும் அதனை பதிவு செய்கிறேன்.

இதுவரை பின்னூட்டங்கள் மூலமும், மெயில்கள் மூலமும் ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,

என்னுடைய இந்த தளத்தின் சுட்டியை தங்கள் தளங்களின் Sidebar-லும், பதிவுகளிலும் பகிரும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,
  
இன்ட்லி, தமிழ்மணம், தமிழ் 10 போன்ற திரட்டிகளுக்கும்,

எனது உளமார்ந்த   நன்றி!    நன்றி!    நன்றி!

என்றும் நட்புடன்,


ப்ளாக்கர் நண்பன் (எ) நூ.ஹ. அப்துல் பாஸித்

70 thoughts on “ப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)”

 1. வாழ்த்துக்கள் நண்பா… உங்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டு இருக்கிறோம் உங்கள் சேவை மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அப்துல்.

 2. வாழ்த்துகள் சகோ. உங்கள் சேவை, தமிழ் இணைய உலகிற்கு தேவை 🙂

  முதல் கெஸ்ட் போஸ்ட் எழுதப் போகும் அதிர்ஷ்டசாலிக்கும் வாழ்த்துகள் 😉

 3. வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் தொடர்ந்து தாங்கள் எழுத வேண்டும் தாங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்(இவ்வளவு தான் தம்பி height இதற்கு மேல் வளர முடியாது)தங்கள் சேவை தொடர வேண்டும் இதனை விசயமும் இலவசமாய் தமிழில் கிடைப்பது தங்களால் மட்டும்மே…இன்னும் 300,400,500….1000 என்று செல்ல வேண்டும் வாழ்த்துக்கள்…இதுக்கு எதுவும் ட்ரீட் கிடையாதா…

 4. உங்களுடைய மூன்றாவது ஆண்டுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  அதாவது http://www.thiratti.com/ திரட்டி யில் பதிவுகளை எப்படி இணைப்பது விபரம் தரவும் எனது மின்னஞ்சல் முகவரி suncnns@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்

  எனது சொந்த வலை முகவரி http://www.suncnns.com ஆகும் முழுமையாக வந்து பயனடையவும்

 5. வாழ்த்துக்கள் நண்பா
  உங்களுடைய வளர்ச்சி ஆச்சரியமாக உள்ளது மூன்றாம் ஆண்டு இன்னும் சிறப்பாகட்டும் .

 6. வாழ்த்துக்கள். உங்கள் சேவை மேலும் தொடர எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா…

 7. வாழ்த்துக்கள் நண்பா.., தாங்கள் மேன்மேலும் சிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்., விரைவில் 250-ல் சந்திப்போம் .!

 8. இரண்டாண்டுகளில் இத்தனை நண்பர்களைப் பெற்றிருப்பதே சாதனைதான்… அனைத்து சாதனைகளுக்கும் தங்களின் தரமான பதிவுகளே காரணம்..!

  தொடர்ந்து பயனுள்ள பதிவுகளை வழங்கி, புதிய பதிவர்களுக்கு வழிகாட்டித் தொடரையும் எழுதி அசத்திவிட்டீர்கள்..!!

  மூன்றாம் ஆண்டு தொடக்கத்திற்கு எனது வாழ்த்துகள்..! மூன்றாண்டுகள் மட்டுமல்ல.. இனி வரும் காலங்களனைத்திலும்… தொடர்ந்து வெற்றிவாகை சூட எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!!!

 9. மூன்றாமாண்டுப் பயணம் வெற்றிகரமாக் தொடங்கித் தொடரட்டும். உங்களின் நண்பர்களின் எண்ணிக்கையும், பதிவுகளும் எல்லாமே அதிகரித்து, பல சிகரங்களை நீங்கள் தொட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

 10. வாழ்த்துக்கள் அன்பரே தங்களின் தமிழ் பதிவு முயற்சியால் தற்போது கூகிள் லில் தமிழ் என தேடினால் ஆபாச தளங்கள் குறைந்து இருக்கிறது அது உங்கள் சாதனை தான் வாழ்த்துக்கள்

 11. தரங்கா ணுங்மெப் பதிவு தந்திடின்
  தயங்கா தேவந்தி டுமேநற்கிழி! – தரமுடை
  மயங்கா தெனெவெல் லாங்மதி சால்
  அரங்க னொப்ப! தந்திடுமின் பல்கீற்று
  தனங்க ருதாவளர் திருநற்சிந் தையாளே!

 12. மூன்றாண்டில் இருநூறு
  அகமகிழ்ந்தேன் அன்பரே
  ஆண்டாண்டும் பலநூறு
  பயன்மிக்க பதிவிட்டு
  மென்மேலும் வளர்ந்திட
  நேசமுடன் என் வாழ்த்து

 13. நீங்கள் பதிவிட்ட நிறைய தகவல்கள் எனக்கு பயன்பட்டிருக்கின்றன.நன்றியுடன், வாழ்த்துக்கள்!

 14. வாழ்த்துகள் அப்துல் பசித். மேலும் பல சிறப்பான தொழில்நுட்ப பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

 15. சாதனை நிகழ்த்தியிருக்கிறீர்கள்.
  தங்களால் பயன் பெறுபவர்கள் நிறைய, நான் உட்பட.
  நண்பர்கள் பலரும் தங்களைப் பாராட்டியிருக்கிறார்கள்.
  தன்னலம் கருதாத தங்கள் பணியை நானும் போற்றுகிறேன்.
  தங்கள் நற்பணி தொடர வாழ்த்துகிறேன்.
  மனப்பூர்வ நன்றி நண்பரே.

 16. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! தங்களின் ஊக்கம் தான் எண்ணை இன்னும் அதிகம் எழுத தூண்டுகிறது.

 17. கேள்வி: நாம் அனுப்பும் பதிவு, உங்கள் தளத்தில் பிரசுரமான பின், தத்தம் வலைப்பூவிலும் பிரசுரித்துக்கொள்ளலாமா? 🙂

 18. வாவ் – 200! வாழ்த்துக்கள் நண்பா! 🙂 அட்டகாசத்தை தொடருங்கள் நண்பா!

  //நீங்கள் எழுதும் பதிவு ப்ளாக்கர் நண்பன் தளத்தில் ~~ பதியப்படும்.//
  அடடா 🙁 தெரிந்திருந்தால் என்னுடைய சமீப டாப்ளெட் பதிவை முதலில் உங்களுக்கு அனுப்பியிருப்பேன்! 🙁

 19. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  ப்ளாக்கர் நண்பனுக்கு இரண்டு வயது! மூன்றாம் ஆண்டு தொடக்கம் என்பதை Version 3.0 என்று குறிப்பிட்டுள்ளேன்.

  🙂 🙂 🙂

 20. வாழ்த்துக்கு நன்றி நண்பா! தங்களின் வாழ்த்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

 21. வாழ்த்துக்கு நன்றி சகோ.!
  //முதல் கெஸ்ட் போஸ்ட் எழுதப் போகும் அதிர்ஷ்டசாலிக்கும் வாழ்த்துகள்//

  😀 😀 😀

 22. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  திரட்டி தளத்தில் முன்பு பதிவு செய்யும் வசதி இருந்தது. தற்போது இல்லை. இது பற்றி thiratti[at]gmail.com என்ற அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பு கேட்கவும்.

 23. ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பிரசுரித்தப் பின் தங்கள் தளத்தில் தாராளமாக பிரசுரிக்கலாம். 🙂 🙂 🙂

 24. வாழ்த்துக்கு நன்றி நண்பா!

  //தெரிந்திருந்தால் என்னுடைய சமீப டாப்ளெட் பதிவை முதலில் உங்களுக்கு அனுப்பியிருப்பேன்!//

  ஹா..ஹா..ஹா.. அது போன்று மேலும் ஒரு பதிவை உங்களால் எழுத முடியும் நண்பா!